ஐந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை கடற்படையினர் தம்மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக இந்திய மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்







