உள்நாட்டில் ஜனநாயக முகமூடியோடு உலாவந்த அமரிக்கா விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களால் நிலை குலைந்துள்ளது. அரச அலுவலகங்களில் “விக்கிலீஸ்க் மிரர்” இணையத் தளங்களை வாசிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. தவிர, அரசியல் அழுத்தங்கள் காரணமாக அமசோன் விக்கிலீக்ஸ் இணையத் தளத்திற்கான “ஹொஸ்ரிங்” கை நிராகரித்துள்ளது. இலங்கை அரசு இதன் ஒரு படி மேலே சென்று விக்கிலீக்ஸில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்கிறது. அமரிக்க அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரபூர்வமான ஆதராங்களும், ராஜதந்திர வட்டாரங்களிடையேயான அதன் தொடர்பாடல்களும் விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து போலிக் குற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையும் விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் மீது அமரிக்கா சுமத்தி வந்தது.







