ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம் செய்தால் அது பயனுள்ளதாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளை பன் கீ மூன் பெப்ரிவரி மாதம் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பன் கீ மூனின் பிரித்தானியப் பயணத்தின் போது ஐக்கிய நாடுகளுக்கு எதிரான போராட்டம் ஒழுங்கு செய்யப்படுவதற்கான் வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது.







