இரண்டு வருடங்களின் முன்னர், 2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தலை நகர் லண்டனைச் சூழ்ந்த பகுதிகள் முழுவதும் சிறுவர்களும் இளைஞர்களும் நள்ளிரவு கடந்த வேளையிலும் தெருக்களில் திரிந்தனர். வறிய மக்கள் வாழுகின்ற பகுதிகள் முழுவதும் வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டன. பாதுகாப்புக் கமராக்களையும் கடந்து பெரு நிறுவனங்கள் தீ மூட்டப்பட்டன. ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி, பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு வயது வரையான இளையோர் பல கட்டடங்களைத் தீ மூட்டிக் கொழுத்தினர்.
இவற்றை சூறையாடல் என்றார்கள் சிலர். இளைஞர்களின் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்று மக்கள் சார்ந்த ஆய்வுகள் கூறின. உலகம் முழுவதும் லண்டனைப் பார்த்துக்கொண்டிருந்தது. முதல் மூன்று நாட்கள் போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டங்களையும், கண்காணிப்பையும் அதிகரிப்பதற்கு மக்களை விரக்திக்கு உட்படுத்தி அவர்களின் அங்கீகாரத்தைப் பெறவே போலிஸ் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று எதிர்வுகூறப்பட்டது.
வன்முறைகள் முற்றுப்பெற்ற பின்னர் அது நடந்தது. மக்கள் ஒன்று கூடுதலுக்கான சட்டங்கள் கடுமையாக்கபட்டன. இச் சட்டங்களைப் பயன்படுத்தி முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல தடை செய்யப்பட்டன.
கிழக்கு லண்டனில் வசித்துவந்த கறுப்பின இளைஞனான Mark Duggan எந்த வலுவான காரணமுமின்றி 04.08.2013 அன்று கொலைசெய்யப்படதன் பின்னரே லண்டனிலும் புற நகர்ப்பகுதிகளிலும் வன்முறை வெடித்தது.
29 வயதான நான்கு குழந்தைகளின் தந்தையான இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை இன்று வரை போலிஸ் நியாயப்படுத்தியே வந்திருக்கிறது. கொலையாளியான போலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான வழக்கு இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இன்றி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ரொட்டன் ஹாம் பகுதியில் இவர் பயணம் செய்த டாக்சியை நிறுத்திய போலிஸ் அவரிடம் கைத்துப்பாக்கி இருந்ததாகவும், தற்பாதுகாப்பிற்காகச் சுட்டதாகவும் கூறியது. இதுவரைக்கும் அந்தக் கைத்துப்பாக்கி கண்டெடுக்கபடவில்லை.
டோகனின் சகோதரர் கார்டியன் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் கடந்த இரண்டு வருடங்களில் போலிஸ் பிரிவின் சுயாதீன விசாரணை ஆணையகத்தோடு பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
பொருளாதார நெருக்கடியையும், வேலையின்மையையும் எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகளில் நிறவாதம் இழையோடும் அதிகார அமைப்புக்களை அரசுகளே கட்டமைத்து வருகின்றன.
பிரான்சில் நடுத் தெருவில் கறுப்பின யுவதி ஒருவரை பிரஞ்ச்சுப் போலிஸ் காரணமின்றித் தாக்கி கண்ணீர்ப் புகையும் பிரயோகித்தது.
ஏகாதிபத்தியத்தின் தந்திரத்தில் பலிக்கடா ஆக்கப்பட அப்பாவி இளைஞர்கள் A preplanned action on behalf of imperials :சுஜீவன் ஜெயபாலன்
பிரித்தனிய வன்முறைகளைக் கற்றுக்கொடுத்தவர்கள்..: சபா நாவலன்
காக்க காக்க கமரோன் கவிழ்க்க : ரதன்
NN
Sri Lanka is now so desensitized. So am I?