லண்டனில் புற நகர் பகுதியில் தனது காதலியைப் பார்ப்பதற்காகக் ரக்ஸியில் பிரையாணம் செய்து கொண்டிருந்த கருப்பின இளைஞனைக் காவற் துறை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து ஓகஸ்ட் ஆறாம் திகதி அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலமாக உருவெடுத்தது. கார்கள் தீவைத்துக் எரிக்கப்பட்டன. கடைகள், வியாபார தாபனங்கள் சூறையாடப்பட்டன. சில வீடுகள் கூடத் தீவைக்கப்பட்டன. ஒன்பதாம் திகதி வரைக்கும் கலகம் பல நகரங்களுக்குப் பரவியது. மன்செஸ்டர், பேர்மிங்காம், குர்வைடன், செல்போர்ட், வூல்வஹம்ப்டன், நோதிங்ஹாம், லெஸ்டர் போன்ற நகர்ப் புறப் பகுதிகள் சூறையாடப்பட்டன.
கறுப்பினமக்கள் செறிவாக வாழ்கின்ற டொட்டன் ஹாம் பகுதியில் வன்முறைகள் ஆரம்பித்ததாலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பபவத்தின் பின்னதாக ஏனைய நகரங்களுக்குப் பரவியதாலும் இவற்றைக் கறுப்பின மக்களின் எழுச்சியாக பலர் கருதிக் கொண்டனர்.
இக்கலவரங்களில் நிற வேறுபாடுகளுக்கு அப்பால் பல்லினத்தவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக 10 வயதிலிருந்து 18 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களே வன் முறைகளில் ஈடுபட்டனர். குறித்த நேரத்தில் தெரு முனைகளில் கூடிய இளைஞர்கள் வியாபார நிலையங்களைச் சூறையாடிச் சென்றனர். சில இடங்களில் பொலீசாருக்கு எதிரான தாக்குதல்களும், கலவரக் காரர்களை எதிர்த்த பொது மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் இடம்பெற்றன. இதுவரை 5 பொதுமக்கள் மரணமடைந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நிலைப்பாடுகளை இக் கலவரம் குறித்து முன்வைத்தனர். முதலில் தீவிர வலது சாரி ஊடகங்கள் சமூக விரோதிகளின் செயற்பாடாகவே இவற்றைச் சித்தரித்தன. சில ஊடகங்கள் இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் ஆராயப்பட வேண்டும் என்றன. டேவிட் கம்ரோனின் அடிப்படைவாத ஆளும் கட்சி வன்முறைகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை நிலைனாட்டுவது போதுமானது என்று தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.
கலவரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சமூக வலைத் தளங்கள், கைப் பேசித் தொடர்புகள் போன்றவ தொழில் நுட்பங்களைக் கட்டுபாட்டுக்குள் உட்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அமரிக்காவின் கலவரங்களை அடக்குவதற்குப் பொலீஸ் துறையில் பணியாற்றிய சிலரை பிரித்தானிய அரசாங்கம் பணியில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளது.
“திருப்பியடிப்போம்” என்ச் சவால் விடுகின்ற பிரித்தானியப் பிரதமர் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு நிலைக்க முடியாமல் உருகிவிழுந்துகொண்டிருப்ப்து குறித்து எந்தத் துயரும் கொண்டவராகக் காணப்படவில்லை. மிகுந்த தன்னம்பிக்கையோடு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதே தமது கடமை என்கிறார்.
உரிமைகளைப் போராடிப் பெற்ற,போராடப் பயிற்சி பெற்ர ஐரோப்பிய சமூகத்தில் நிறுவனமயமான போராட்டங்கள் தொடரும் எனபதை அந்த நாடுகளின் அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்களே அறிவிக்கின்றன. இவ்வன்முறைகளுக்கு முன்னதாக பல்கலைகக கழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களையும், வரலாறுகாணத அரை மில்லியன் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தையும் பிரித்தானியா இந்தவருட ஆரம்பத்திலிருந்து எதிர்கொண்டிருக்கிறது.
பிரித்தானியப் பாடசாலைகளில் குற்றவியல் பதிவுகள்(criminal records) என்பது என்னவென்பதும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களும் சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறது. குற்றவியல் பதிவென்பது ஒரு தனிமனிதனின் எதிர்காலத்தையே சீரழித்துச் சிதைக்கும் அளவிற்கு மிக இறுக்கமான விதிகளைக் கொண்டது. வேலையில் சேர்ந்து கொள்வதிலிருந்து வங்கிகளில் கணக்க்கு வைத்திருப்பது வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்லை இதன் தாக்கத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் தம்மைக் குற்றவளிகளாக இந்த இளைஞர்கள் அறிமுகப்படுத்துகின்ற அளவிற்கு அவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் கட்சிகளும் ஊடகங்களும் முதலில் கற்க வேண்டிய பாடம்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி பிரித்தானியாவையும் மீளமுடியாத நெருக்கடிக்குள் உள்ளாக்கியிருக்கின்றது.
பன்னாட்டு பெரு நிவனங்களின் (corporate companies) பின்னணியில் இயங்கும் பிரித்தானிய அரசும் ஏனைய ஐரோப்பிய அரசுகளும் தமது நிகழ்ச்சி நிரலை அவற்றிற்கு ஏற்ற வகையிலேயே தயாரித்துக்கொள்கின்றன.
பிரித்தானியாவில் நாளாந்தம் அதிகரிக்கும் வறுமை, வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை போன்ற அனைத்தும் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக மத்திய தரவர்க்கத்தின் கீழணிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தன. நாளாந்த வாழ்க்கை என்பதே கேள்விகுரியதான நிலையில் மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளும், பல ஆண்டுகளாக உற்பத்தியில் ஈடுபடாதா லும்பன்கள் நிலைக்குத் தள்ளப்பட்டோரும்,விரக்திக்கு உள்ளான இளைஞர்களும் தெருவிற்கு வருதை நியாயமானதாகக் கருதினர்.
இந்த மூன்று பிரிவினரைச் சார்ந்த குழந்தைகள் சில சமயங்களில் பெற்றாரின் மறைமுக அங்கீகாரத்தோடும், அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டும், அவர்களை எதிர்த்துக்கொண்டும் தெருவில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதற்கும் அதிகாமக நவ-தாரளவாத முதலாளித்துவக் கல்வியின் எச்ச சொச்சங்களும் வியாபாரமக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் மத்தியிலான விரக்தியும் வெறுப்பும் உச்சமடைந்திருந்தது. ஒரு சராசரி மனிதனின் வருட வருமானம் 15 ஆயிரம் பவுண்ஸ்களாக இருந்த நிலையில், 20 ஆயிரம் பவுண்ஸ்களை பல்கலைக்கழகக் கல்விக்குச் செலுத்தும் நிர்பந்தத்தை கமரூன் அரசாங்கம் தனது முதலாவது “சாதனையாக” நிகழ்த்தி முடித்திருந்தது.
ஆக, இந்த வன்முறைகள், கலவரங்கள்,திருட்டு,கொள்ளை போன்றவற்றின் அடிப்படைக் காரணமாக இளைஞர்களின் சமூகக் கோபமே அமைந்திருந்தது.
இளைஞர்களின் வன்முறை வாழ்வதற்கான வழிமுறைகளில் ஒன்று என்பது மிக நீண்டகலமாக ஒரு கலாச்சரமாகவே உருவாக்கபட்டிருந்தது. ஐரோப்பிய சமூகத்தில் வன்முறையையும், திருட்டையும், கலவரங்களையும், கொள்ளையையும் அரசுகளே மக்களுக்குக் கற்பித்தன. தொழிற்கட்சி அரசும், பழமைவாதக் கட்சியும் ஆரம்பித்துவைத்த பன்னாட்டு நிறுவனங்களின் சட்டரீதியான திருட்டையும், கொள்ளையையும் மௌனமாகப் பார்த்து விரக்த்தியின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டவர்கள் தான் பிரித்தானிய மக்கள்.
மேல்தட்டு வியாபாரிகள் வங்கிகளைத் திருடி கொள்ளையிட்ட போது மக்களின் வரிப்பணத்தில் 80 பில்லியன் பணத்தைக் கொள்ளையிட்டு வங்கிக் கொள்ளையை ஊக்கப்படுத்தியது தொழிற்கட்சி. அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றது பழமைவாதக் கட்சி.
இதே அரசாங்கங்கள் மேல்தட்டுக் கொள்ளையர்களுக்காக பலமில்லியன் மக்களைக் கொன்றுபோட்டது. ஆப்கானிஸ்தானிலும், ஈராகிலும் இப்போது லிபியாவிலும் கனிமங்களையும் பெற்றோலியத்தையும் திருடுவதும், கொள்ளையிடுவதும் நியாயமானது என்ற கலாச்சாரத்தை இவர்கள் தான் குழந்தைகளுக்குக் கற்பித்தார்கள். ஆக, இவ்வாறான கொள்ளைகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. இப்போது அதே கலாச்சாரத்தை கற்றுக்கொண்ட குழந்தைகள் தமது வாழ்க்கைப் போராட்டமாக சூறையாடலைத் தெருக்களில் நடத்தியிருக்கின்றனர்.
சமூகக் கோபமும் ஏற்கனவே நிலவிய வன்முறைக் கலாச்சாரமும் இணைந்து பிரித்தானியத் தெருக்களில் தீயாக எரிந்தது. இத் தீ தணிவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
பெரு நிறுவனங்களின் கொள்ளை இன்னும் ஆயிரம் இளைஞர்களை உருவாக்கும். அவர்கள் வர்க்க அரசியலை நோக்கி வழி நடத்தப்பட்டால் போராட்டமாகவும், அன்றெனின் வன்முறையாகவும் வளர்ச்சியடையும் நிலையே காணப்படுகிறது.
“An accumulation of wealth at one pole of society indicates an accumulation of misery and overwork at the other”. – Karl Marx
புனிதரான மார்க் கறூப்புக் கொள்ளக் கூட்டத்திற்கு வசதியாக அமைய ஆசிய நாட்டவர் மீதான பொறாமையும், எரிச்சலும் நம்மவர் கடைகலையும் எரித்தது.
முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் உருவாகும் முரண்பாடுகளின், ஒரு வெளிப்பாடாகவும் இதனைப் பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக window shopping செய்தவர்கள், window வை உடைத்திருக்கிறார்கள்.
உலக அதிகாரத்தை தலைகீழாக மாற்றிப் போடுவதே ஒரே தீர்வு. இன்று தெருக்களை சூறையாடியவர்கள் நம்பர் 10 டெளனிங் ஸ்ரிட்டினுள் புகும் காலம் வரவேண்டும்.
புனிதரான மார்க் கறூப்புக் கொள்ளக் கூட்டத்திற்கு வசதியாக அமைய ஆசிய நாட்டவர் மீதான பொறாமையும்இ எரிச்சலும் நம்மவர் கடைகலையும்
”
அப்போ இங்கும் தமிழீழம் கேட்கப் போகிறீகளா?
அப்பு இதயம் கதைச்சு மடகிறன் எண்டு எதுக்கெடுத்தாலும் தமிழ் ஈழம் என்டு புலுடா விட வெண்டாம்?தட்டிப் பறீக்கிற பரதேசிக்கு ஒரு கேர்ல் பிரண்டு அவருக்கு ஒரு டினர்.
நீங்கள் குளித்துவிட்டு உலர்ந்த ஆடையணிந்து கோவிலுக்கு செல்லும் சைவத்தமிழர். முதலில் அதை செய்யுங்கோ. அங்கை போய் நந்தியை பாருங்கோ. கனமான விடயங்களில் நந்தியாய் இருக்க முயற்சிசெய்யாதேங்கோ.
தங்கள் அறீவுரைக்கு நன்றீ.கறூப்பர்களீன் பாணீயைப் பின்பற்றீ கிறீன்ஸ்ரிட்டில் முஸ்லிம்கலின் கடையை உடைக்கப்போன தமிழரில் சிலரும் அடிவாங்கி ஆஸ்பத்திரியில கிடக்கினம் அதுவும் அவைக்கு கனமான விசயம்தான்.
விழுந்தபாட்டிற்கு குறிசுட்டுவைப்பதே எல்லா ஆய்வாளார்களின் வேலையாக உள்ளதென்பதை மெய்யாகவே மெய்யாகவே வலியுறுத்துகின்ரது இவ்வாய்வு.
பொதுமக்களையும்,பொதுமக்கள் சொத்தையும் சூறையாடுவதுதான் சமூகக் கோபம் என்பது மிகச்சந்தர்ப்பவாதமாகும்.அரசக்கொடுப்பனவுக் குறைப்பிற்குப் பதிலடி கொள்ளைதான் என்று வாதிட வருவது எல்லார் வாழ்வையும் கேள்வியாகவும்,கேலியாகவிம் ஆக்குகின்ற விடயமாகும்.பிரித்தானிய ஆட்சியில் நேற்றைக்கும் இன்றைக்கும், நாளைக்கும் ஓரே கொள்கைதான். முதலாளித்துவக் கொடும்பிடியினுள் இருந்து மீளவல்ல இடதுசாரிச் சிற்பிகள் அங்கு உருவாகவில்லை.நடந்து முடிந்திருக்கிற போராட்டம் வர்ர்கப்போராட்டமுமல்ல. அது சார்ந்த கலவரமுமல்ல.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக வட அமெரிக்காவில் தற்செயலாக ஒரு நாள் இடம் பெற்ற மின்சாரதுண்டிப்பால் நாடு இருளால் மூடப்பட இது தருணம் என்று லட்சத்திற்கும் அதிகமான கொள்ளைகள் இடம் பெற்றன.அது போலத்தான் இதுவும்
என்ன விளையாட்டுப் பிடுங்கி செத்துப் பொனது கறுவல். இது பச்சை இனக்கலவரம். பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லைநாங்கள். பொங்கு கறுவலுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம்நிசமெண்டு காட்டிப் போட்டோமெல்லோ???????
இங்கிலாந்தின் யமேக்க கறுப்பின நண்பா்கள் எப்போதும் வேதனைப்பட்டு கூறிக்கொள்ளும் ஒரு விடயம் என்னவென்றால் ஏன் எங்கள் இனத்தவா்கள் மட்டும் ஒழுங்காக குடும்பமாக வாழ்வதில்லை,அவா்கள் பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை, எந்த பதவிகளையும் வகிப்பதில்லை, மறியல் சாலைகள் யாவும் கறுப்பின மக்களாலேயே நிரம்பி வளிகிறது.
இங்கே அரசியல் பொருளாதார இனப்பிரச்சனைகளுக்கு மேலாக கலாச்சார ரீதியான பிரச்சனைகள் முக்கியம் பெறுகின்றது என்பதே உண்மை.
வேலை இல்லாதது ஒரு விடயம் ஆனால் இருந்தும் செய்யமுனையாது அரச உதவியில் காலத்தை கழிக்கும் கூட்டம் வெள்ளையா்களில் உண்டு இவா்கள் யாவரின் இணைவில் நடந்ததே இந்த கலகம்.
இதே போன்றே அகதிகளாக வந்த தமிழா்களும் இப்போது அனைத்து நாடுகளிலும் சமூக கொடுப்பனவுகளை அதிகம் பெறுவதற்காக கணவன் மனைவிகள் பிரிந்திருப்பதுபோல் நாடகம் ஆடுவதும் இரவில் வீடுகளிற்கு கள்ளா்போன்று நுளைவதும் ஆனால் தொடா்ந்து பிள்ளைகளைமட்டும் பெற்றுக்கொள்வதும் நடக்கின்றது இந்தக்கலாச்சாரத்தில் வளரும் பிள்ளைகள் எப்படி எதிர்காலத்தில் இருப்பார்கள் என்பதை யாரறிவார்.
தமிழர்களது வாழ்வியல் சொல்வதொன்றும் செய்வதொன்றுமாகவே இருக்கிறது. கறுப்பின மக்களை ஆகர்சிப்பதுபோல பாசாங்கு செய்கிற தமிழர்கள் தான் பிள்ளைப்பிறந்தவுடன் அது ஆணா பெண்ணா என்றறிவதற்கு முதல் கறுப்பா,வெள்ளையா என்று பார்க்கத்துடிப்பவர்கள். கறுப்பு,பேயின்நிறமென்றும்,வெள்ளை அழகுத்தேவதையின்நிறமெனும் வர்ணிப்பவர்கள். புரிந்துணர்விற்கு ஆள்மனதில் இணக்கம் தேவை. சும்மா வெளிவார்த்தைகள் வேலைக்குதவாது.