“Our lives, our homes, our liberties each day are made less secure because of unrestrained and unpunished police brutality.”
—National Negro Congress, Petition Against Police Brutality, 1938
சில வாரங்களுக்கு முன்னர் பாரிசின் மெட்ரோ நிலையத்தில் நானும் எனது நண்பரும் நுழைவாயிலில் நின்ற போது, அமெரிக்காவைச் சேர்ந்த சில வெள்ளை நிற மாணவர்களும், ஒரு 35 வயது மதிக்க ஒருவரும் நுழைவாயில் உள்ளே செல்லும் கதவருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருவரிடம் நுழைவுச் சீட்டு இருந்தது. மற்றவர்களிடம் இல்லை. ஒவ்வொருவராக நுழைவுச் சீட்டை உள்ளே தள்ளும் போது கதவு திறக்கும். 35 வயது மிக்க வெள்ளை இனத்தவர் திறந்த கதவை இழுத்துப் பிடிக்க அனைவரும் நுழைவுச் சீட்டின்றி உள்ளே புகுந்தனர். இதென்ன புதிய விடயம் அனைவரும் செய்வது தானே என கேட்கலாம். என்னைப் போன்ற கறுப்பு நிறத்தவர் செய்தால் “சட்டத்தை மீறுவோர்” என்ற பெயர். வெள்ளை இனத்தவர்கள் செய்தால் அதற்கு விதிவிலக்கு. இதனைத்தான் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் “எழுதப்படாத சட்டம்”ஆக உள்ளது. லண்டனின் கலவரங்களின் பிண்ணனியும் இந்த நிற ஒருக்கு முறையின் வெளிப்பாடே.
வன்முறைகளின் ஆரம்பம் Mark Duggan என்ற (கலப்பின)கறுப்பினத்தவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதே. ஆவணி நான்காம் நாள் அதாவது ஒபமாவின் 50வது பிறந்த நாளன்று மாலை 6.15க்கு Tottenham Hale Tube station க்கு அருகில் உள்ள Ferry Laneல் சுடப்பட, 6.41க்கு உயிரிழந்தார்.
பொலிசார் இவரை சுட்டுக் கொன்ற முறை கறுப்பின மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பொலிசார் துரத்தி வருவதை கைத்தொலைபேசி செய்தி காவி மூலம் தனது காதலி Semone Wilson க்கு தெரிவித்து 15நிமிடங்களுக்குள் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Mark Duggan வயது 29. நான்கு பிள்ளைகளின் தந்தை. Star Gang உறுப்பினர் என பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது. பொலிசாரின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருப்பவர்.The Independent Police Complaints Commission (IPCC). இவ் விடயத்தை விசாரித்து வருகின்றது. IPCC பொலிசார் கூறிய சில தடயங்கள் தெளிவற்றுள்ளதாக கூறியுள்ளது. இவரிடம் உள்ள துப்பாக்கியின் குண்டு சன்னங்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்படவில்லை. எனவே இவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னரும் லண்டனில் பல கறுப்பினத்தவர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொழுது கொல்லப்பட்டுள்ளனர். David Emmanuel 29வயது, பங்குனி 15,2011 ல் கொல்லப்பட்டுள்ளார். கடந்த பங்குனி 27, வீதியில் தனது 5 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த Burrell Brown பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸாரை நாடியபோது இவர் மனநோயாளி எனக் கூறி கைது செய்துள்ளனர்.
இருபது நாட்கள் கழித்து (16-சித்திரை-2011)ல் இறந்துள்ளார். இவரது மகன் இவரை பொலிஸார் அடித்ததாக கூறியுள்ளார். IPCCன் அறிக்கை ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொழுது இறந்தவர்களில் 68 வீதமானோர் வன்முறையற்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டோர் என தெரிவிக்கின்றது. பொலிஸாரின் வன்முறைகள் வெள்ளையின கைதிகளுக்கு நான்கு வீதமாக காணப்படுகின்றது. மிகுதி 96 வீதம் கறுப்பு-மற்ற இனத்தவருக்கு எதிராகவே உள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் Rodney King என்ற கறுப்பின அமெரிக்கர் லொஸ் ஏன்ஜல்ஸ் பொலிசாரால் காட்டுமிராணடித்தனமாக தாக்கப்பட்டதை உலகமே அறியும். இன்றும் இணையத்தளங்களில் இக் காட்சிகளை காணலாம். இவர் கடந்த மாதம் கூட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதற்கு முன்பாக அமெரிக்காவில் பல தடவைகள் நிறக் கலவரங்கள் வெடித்துள்ளன. 1967, 1943ம் ஆண்டுகளில் டிரொய்ட் நகரில் வெடித்த நிறக் கலவரங்களின் பிண்ணனியும், இன்றைய லண்டன் கலவரங்களின் பிண்ணனியும் பல விடயங்களில் ஒத்துள்ளன.
கறுப்பின மக்கள் சமூக, வாழ்வியல் எதிர்பார்ப்புக்கள் எதுவுமற்று அன்றும் இன்றும் வாழவைக்கப்படுகின்றார்கள்.
வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் வன்முறைக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய காரணங்கள் இவை. பி.பி.சி முன்வைத்த காரணங்களும்;, பல முக்கியஸ்தர்களின் கருத்துக்களும் இவற்றில் அடங்கும்.
1. சமூக நிதிக் கொடுப்பனவில் (Welfare)வாழ்பவர்கள், படிப்பறிவற்றவர்கள் செய்யும் செயலே இது என டெய்லி மெயில் பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இப் பத்திரிகை வன்முறையாளர்கள் குடும்ப-கலாச்சார மதீப்பீடுகள், முக்கியங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள். தந்தை வேலையற்றவராக அல்லது குடும்பத்தை உதறிவிட்டு செல்பவராக இருப்பார். They respond only to instinctive animal impulses — to eat and drink, have sex, seize or destroy the accessible property of others. என மிக மோசமாக குற்றஞ்சாட்டியுள்ளது.( http://www.dailymail.co.uk/debate/article-2024284/UK-riots-2011-Liberal-dogma-spawned-generation-brutalised-youths.html#ixzz1UcR7CQYU)
2. இன்டிபென்டன்ட் The Independent பத்திரிகை- வன்முறையாளர்கள் சமூகத்தில் இருந்து விலகியவர்கள் அல்லது ஒதுக்கப்பட்டவர்கள் இவர்கள் செய்யும் செயலே இது. . They are “opportunist criminals” and “disgusting thieves”. எனக் கூறியுள்ளது.
3. இந்தக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் gang உறுப்பினர்கள். இவர்கள் gang தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள் அது no father at home இவர்களுக்கு வழிகாட்டிகள் இல்லை என The Telegraph பத்திரிகை கூறுகின்றது.
4. புதிய கொன்சவேற்றிவ் அரசாங்கம் பல சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை வெட்டியதன் விளைவு என தொழிற்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. If you’re making massive cuts, there’s always the potential for this sort of revolt against that.
5. சன் பத்திரிகை பொலிசாருக்கு அதிக அதிகாரங்கள் இல்லை. கண்ணீர் புகை அடிக்க அனுமதியில்லை எனக் கூறுகின்றது.
6. 6. We can’t deny that race plays a part – இன்டிபென்டன்ட் The Independent பத்திரிகை Christina Patterson மேற்கண்டவாறு வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டுள்ளார். லண்டனில் உள்ள நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறிய விடயம் இது “லண்டன் நகர மெற்றோ ரெயில் குண்டு வெடிப்பின் பின் அதிகளவு பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் கறுப்பினத்தவரே” எனக் கூறினார். இன்டிபென்டன்ட் ல் மேலும்”Too many black men have been killed by the police. Too many black men and women have been treated like criminals when they’re not. This is not the cause of these riots, but it’s there in the mix, a mix where the key ingredient is feeling powerless. Cuts won’t help. Growing unemployment won’t help. Some investment, in youth services, and better schools, and mentoring schemes, might, but money alone isn’t the answer வெளிப்படையாக எழுதப்பட்டுள்ளது. அதிகளவு நிதி மாத்திரம் இப் பிரச்;சினையை தீர்க்காது. இவ் விளைஞர்களின் பிரச்சினைகள் நன்கறியப்பட்டு அதற்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். முழுச் சமூகமும் தங்களது பிற்போக்கு வாத நிற வாத கருத்து நிலையில் இருந்து மாறவேண்டும்.
7. வன்முறை கலாச்சாரம்”I blame the pernicious culture of hatred around rap music, which glorifies violence and loathing of authority (especially the police but including parents), exalts trashy materialism and raves about drugs”. என லணடன் டெய்லி மிறர்(Daily Mirror) பத்திரிகை கட்டுரையாளர் Paul Routledge ரப் இசைக் கலாச்சாரத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.இவ்வாறான வன்முறைகள் நடைபெறும் பொழுது வன்முறையாளர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். இது ஒரு நல்ல விடயமே. அப்படியாவது ரப் இசையின் நல்ல பக்கத்தை உணர்ந்து கொள்வார்கள்.
8. நுகர்வியல்- அதாவது These are shopping riots – இது Manchester Guardian கட்டுரையாளர் Zoe Williams ன் கூற்று. மக்களிடம் எதுவும் இல்லாத போது, அவர்களால் நுகரமுடியாத பொருட்கள் மீது ஏற்படும் ஆசையால் ஏற்படுத்தப்பட்ட வன்முறையே இது. தங்களது உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள இவர்களால் முடிவதில்லை. அதன் வெளிப்பாடு இது என கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
9. சந்தர்ப்பவாதம். தக்க சமயத்துக்காக காத்திருந்து மற்றவர்கள் கொள்ளையடிக்கும் பொழுது தாங்களும் இணைந்து கொள்ளல் இக் கூற்றைIrish Times பத்திரிகை எழுதியுள்ளது.
10. நவீன தொழில்நுட்பம் – முகநூல், இலத்திரனிய கடிதம் போன்றவற்றினூடாக வன்முறையாளர்கள் திரட்டப்படுகின்றார்கள். இவ்வாறு உதவி பொலிஸ் அத்தியட்சர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் எழுச்சி ஏற்பட்ட பொழுது முகநூல், இலத்திரனிய கடிதம் போன்றவையும் மக்களை அணி திரட்ட பயன்படுத்தப்பட்டன.
11. பிரித்தானிய தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Stuart Bell “இந்தக் கலவரங்கள் வேலை வாய்ப்பின்மைக்கு எதிராகவோ, அரசாங்க சமூக கொடுப்பனவு வெட்டாலோ ஏற்படவில்லை. மாறாக ரியுனிசியாவில் இருந்து ஆரம்பமானது என யுரோப்பா ஒன்று தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
12. Skander என்ற எகிப்திய நவீன தொழில் நுட்ப புரட்சியாளர்(the cyberactivists arrested ) லண்டன் பற்றி தெரிவித்த கருத்து இது”Maybe they don’t have a clear political goal, or maybe no political goal at all, but these young people have gone out to express their frustration,” ஆம் இவர்கள் தங்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
13. 13. Michael Ruppert ( founder of the Collapse Network), Global Research TV க்கு அளித்த செவ்வியில் “இதன் பிண்ணனியில் வங்கிகள், மிகப் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவை தான் வன்முறையை தூண்டிவிடுகின்றன. இது அரேபிய போராட்டத்தின் தொடர்ச்சியல்ல. சந்ததிகளின் கிளர்ச்சி. (This is generational revolution) இந்த மக்களுக்கு எந்த வித வாழ்வியல் நம்பிக்கையும் இல்லை. அவர்களின் போராட்டம் இது. ஆனால் இந்த போராட்ட முறை தவறானது. நாங்கள் அனைவரும் வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். வங்கிகளில் உள்ள முதலீடுகளை மீளப் பெறுவதன் மூலம், வங்கிகளின் உள் கட்டமைப்பு புனரமைப்புச் செய்யப்படும். அங்கிருந்து ஒரு புதிய உள் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்.” என்றார். இவரது கருத்துக்கள் முக்கியமானவை. இப் போராட்டங்கள் உலகரங்கில் ஒரு புதிய புரட்சிக்கான ஆரம்பத்தில் உள்ளன.
14. 14. AlJazeera இணையத்தில் Richard Hall “வன்முறையாளர்களை புரிந்து கொள்ள முயற்சியுங்கள், அவர்களை கண்டிக்கவேண்டாம்” எனக் கோரியுள்ளார். உண்மையும் அது தான்.
இவ் வன்முறைகள் மத்திய கிழக்கின் தொடர்ச்சி என பல அரசியல்வாதிகள் குற்றஞ்சுமத்தியுள்ளார்கள். மத்திய கிழக்கிற்கும் லண்டனிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்பது உண்மையே. இரண்டும் அடிப்படையில் வேலையின்மை, வறுமை போன்ற விடயங்களின் வெளிப்பாடாகவும் உள்ளன. மத்திய கிழ்க்கில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றார்கள். கொடூர ஆட்சிக்கு எதிராக போராடுகின்றார்கள். அவர்களை அடிபணிய வைக்கின்றார்கள். சிரியாவில் அரச ஒடுக்குமுறைக்கு எதிராக நின்று போராடுகின்றார்கள். லண்டனில் திட்டமிட்டு ஒடுக்கும் ஒரு குடியாட்சி அரசுக்கு எதிராக கிளர்ச்சிசெய்கின்றார்கள். மத்திய கிழக்கில் போராடுபவர்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. லண்டனில் போராடுபவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள். போராட்டம் தங்களுக்கு சாதகமாக முடியுமா என்ற கேள்விக்குறியுடன் இயங்குபவர்கள். எங்கு செல்வது? என்ன செய்வது என தெரியாமல் போராடுகின்றார்கள்.
இரண்டு பிரதான பிண்ணனிகளுக்கு எதிராக இப் போராட்டங்கள் வெடித்துள்ளன ஒன்று சமூக –அரசியல் பிண்ணனி, இரண்டாவது பொருளாதார பிண்ணனி.
சமூக-அரசியல் பிண்ணனி
1. கறுப்பின மக்களை தொடர்ச்சியாக அடிமைகள் நிலையில் வைத்திருத்தல். அமெரிக்காவின் பல பாகங்களில் இதனை கண்கூடாக பார்க்கலாம்.
2. அவர்களின் பொருளாதார வளங்களை சுரண்டுவதற்கு இது உதவும்
3. அவர்களை பிரதிநிதிப்படுத்துவதுடன், அவர்களது போராட்ட குணாம்சத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
4. வெள்ளை இனத்தவருடன் வேலைவாய்ப்பு, கல்வி, வியாபாரம், அரசியல் போன்ற விடயங்ளில் போட்டிகளை தவிர்த்தல்
5. வெள்ளை இனத்தவருடன் சண்டையிடாது ஒற்றுமையாக இருத்தல்.
இந்த ஐந்து பிரதான காரணிகளுக்காக கறுப்பின மக்களின் சமூக வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகின்றது. இவை பல பொருளாதார லாபங்களையும் கொடுக்கின்றன. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கறுப்பின மக்கள் இந்தியாவை விட மிகமோசமான சேரிகளில்; வாழ்கின்றனர் என்பது உண்மை. மிச்சிக்கன் அற்லாண்டா நியுயோர்க் போன்ற மாநிலங்களில் இச் சேரிகளை அதிகளவு காணலாம். இன்றெழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகளில் அதிகம் பாதிக்கப்படுவோர் வந்தேறு குடியேறியாகளான என்னைப் போன்றவர்கள். இதற்குள் கறுப்பின மக்கள, தெற்காசியர் அனைவரும் அடங்கும். நோர்வேயில் நடைபெற்றதன் பிண்ணனியினை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிப்படும். வட அமெரிக்காவை கைப்பிடித்த பிரித்தானிய, பிரென்ச் அரசுகளை செவ்விந்தியருக்கு எதிராக மேற்கண்ட காரணிகளை பயன்படுத்தின. இன்று செவ்விந்தியர் குரலின்றி தமது நிலத்திலேயே வாழ்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சமூக கொடுப்பனவுகள் இவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்ல விடாமல் தடுக்கின்றது. எந்த வித மாற்று வளர்ச்சி முறைகளன்றி சமூக கொடுப்பனவுகளை மாத்திரமே கொடுப்பது எந்த நிலையிலும் அந்த சமூகத்தை உயர்த்திவிடாது.
இதனையே மேற்கு நாடுகள் மிகச் சிறப்பாக சிறுபான்மையினர் மீது செய்கின்றன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் கூட நூறு வருடங்களுக்கு மேலாக அதே நிலையில் தான் உள்ளார்கள். உழைப்பையும், உயிரையும் சுரண்டும் கொடுங்கோல் இங்கு நடைபெறுகின்றது. இவர்களிடம் எந்த வித சமூக பொருளாதார உயர்வும் இல்லை. இவர்களால் லண்டனில் நடைபெற்ற கலவரம் போன்று செய்ய முடியுமா?
உலகமயமாதலின் வளர்ச்சி பல பெரிய முதலாளிகள் அதிக லாபத்துக்காக குறைந்த விலையில் பொருள் உற்பத்தியை நாடுகின்றார்கள். சீனா, இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விலையில் பொருட்கள் உற்பத்தியாகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னர் சீனா, இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அடிமைகளாக மேற்கு நாட்டு தோட்டங்களையும், தொழிலகங்களையும் அலங்கரித்தனர். இன்று தங்களது நாட்டிலேயே அடிமைகளாக வேலை செய்கின்றனர். இதற்கு அந்த நாடுகளும் உதவிபுரிகின்றன. இந்த மாற்றம் மேற்கு நாடுகளில் மத்திய வர்க்கத்தை, கீழ் நிலைக்கு தள்ளியது. கலவரம் நடைபெற்ற நகரங்களில் சுமார் 30 வீதமானோர் வேலையற்றுள்ளனர்.
கார்ல் மாக்ஸ் கூறியது இங்கு ஒத்துப் போகின்றது: “An accumulation of wealth at one pole of society indicates an accumulation of misery and overwork at the other” ஒரு இடத்தில் செல்வம் குவிக்கப்படும் பொழுது மற்ற இடத்தில் அவல நிலையை தோற்றுவிக்கும்” இதுவே இன்றைய முதலாளித்துவ நிலை.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரோன் பதவியேற்ற சில மாதங்களில் Multi Culturalisam encouraged people to live “separate lives” apart from the mainstream. இதே போன்ற கருத்தை ஜேர்மனியின அதிபர் Angela Markel ம் கருத்து தெரிவித்திருந்தார்.
இன்று மேற்கு நாடுகளுக்கு தொழிலாளர்களின் தேவையற்று விட்டது. சீனா, இந்தியாவில் ஊசியில் இருந்து கார் வரை தயாரிக்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் தங்களது நாடுகளில் உயர் வர்க்கத்தினர் வாழ்வதையே விரும்புகின்றார்கள். இதன் நடைமுறையை இன்று கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காணலாம்.
முன்னொரு காலத்தில் புகையிரத பாதைகள் அமைப்பதற்கும், மலைகளை குடைவதற்கும், வீதிகள் போடவும் கூலிகள் தேவைப்பட்டார்கள்.
கனடாவில் அவ்வாறு வரவழைக்கப்பட்ட சீனர், வேலை முடிந்து நாடு திரும்பிய பின் மீண்டும் கனடாவிற்குள் வருவதற்கு தலை வரி அறவிடப்பட்டது. இன்று இதே வேலைகளை கனரக இயந்திரங்கள் செய்கின்றன. இதனை செயல்படுத்த சிறந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருந்தால் செய்து முடிக்கலாம்.
இக் கருத்தை வைத்துப் பார்க்கும் பொழுது இக் கலவரத்தின் பின்னரும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் வாழ்வியல் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்க கலவரங்கள் அமெரிக்க கறுப்பின மக்கள் வளர்ச்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இப்பொழுது கறுப்பின மக்களும் வழிகாட்டிகளும் அடுத்த போராட்ட முறைபற்றி சிந்திக்க வேண்டும்.