Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லைக்கா விவகாரம் – தொடரும் கொலை மிரட்டல்களும் அழியும் ஊடக சுதந்திரமும்

இனியொரு... by இனியொரு...
11/14/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts
ஜானகி விஜயரத்ன
ஜானகி விஜயரத்ன

லைக்கா தொடர்பான செய்திகளை வெளியிட்ட பின்பு ‘சேவை மறுப்புத் தாகுதல்களால்’ இனியொரு மற்றும் லங்காநியூஸ்வெப் ஆகிய இணையங்கள் முடக்கப்பட்டமை தெரிந்ததே. இந்த இரண்டு இணைய ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுகின்ற போதிலும் இனியொரு இணையம் குறித்த செலவிலான முன்னரங்க பாதுக்காப்புச் சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் தலைமை என்று கூறிக்கொள்கின்றவர்கள் களியாட்டங்களிலும், சடங்கு நிகழ்வுகளிலும் பிஸியாகிவிட ஊடகங்களில் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் முற்றாக அழிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. மிரட்டல்களும், அனாமோதய மின்னஞ்சல்களும் கொலை அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

முடக்கப்பட்ட லங்காநியூஸ்வெப் சமூக வலைத் தளங்களின் ஊடாக வெளியிட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில், ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு லைக்கா 200 மில்லியன் ரூபாய்கள் தேர்தல் பணமாக வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜானகி விஜயரத்ன என்ற பெண் ஒருவர் ஊடாகவே பசில் ராஜபக்சவிற்கு 2005 ஆம் ஆண்டு இப் பணத்தொகை வழங்கப்பட்டதாக லங்காநியூஸ்வெப் செய்திகள் தெரிவித்தன.

ஜானகி விஜயரத்ன தொடர்பான செய்திகளைத் திரட்டிய போது அவர், லைக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வெக்டோன் மொபைல் உடன் தொடர்புடைய பரபுளூ மற்றும் முன்டியோ ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் பிரபல நடிகையன ஜானகி விஜயரத்ன தனது லிங்டின் பக்கத்தில் முன்டியோவில் பணியாற்றுவதாகக் குறிப்பிடுள்ளார். பாஸ்கரன் அல்லிராஜா – சுபாஸ்கரன் அல்லிராஜாவின் மூத்த சகோதரர், இந்த நிறுவனத்தின் இயக்குனராகப் பல்வேறு காலப்பகுதிகளில் பதிவு செய்துள்ளார்.

லங்காநியூஸ்வெப் தகவல்களின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு குறித்த பணத்தொகை ராஜபக்ச குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் 2006 ஆம் ஆண்டளவில், ராஜபக்சவின் மத்துனருடன் இணைந்து இலங்கை அரச பணத்தில் 100 மில்லியன் டொலர்களை லைக்கா சுருட்டிகொண்டதாக சண்டேலீடர் தகவல் வெளியிட்டது. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் லைக்கா- சிறீலங்கா ரெலிகொம் ஊடாகவே புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்குத் தொலைத் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

ஆக, லைக்கா ராஜபக்ச குடும்ப உறவு இனப்படுகொலைக்குத் துணை போயிருப்பதையும், பல்தேசிய நிறுவனங்களின் நலன்களுக்காகவே இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதும் தெளிவாகின்றது.
இதன் பின்னர் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிற்கு லைக்காவ் பிரதான அனுசரணையாளராகச் செயற்பட்டமை தெரிந்ததே.

இனப்படுகொலையின் பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் அனைத்தும் லைக்கா – லிபாரா நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பைத் தொடர்ந்து நடத்தவும், இலங்கையைச் சூறையாடவும் பல்தேசிய நிறுவனங்கள் துணை செல்கின்றன. இவை சேவை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்பு கண்காணிக்கபடுவதில்லை.

2005 ஆம் ஆண்டிலிருந்தே இனப்படுகொலை அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் பொருளாதாரத் தளங்களில் இணைந்து செயற்படும் லைக்கா நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் அரசியல் விடையங்களில் உலாவரும் மாபியாக் கும்பல்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். இச்சட்டவிரோத மாபியாக்களில் ஒருவர் லங்காநியூஸ்வெப் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி ஒன்றின் வாயிலாகக் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் உள்நுளையும் இப் பல்தேசிய நிறுவனங்கள், கலை, கலாச்சாரம், செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சிகள், தொலைத் தொடர்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.
பல்தேசியப் வியாபார வெறியர்களின் பணத்தில் இயங்கும் ஊடகங்களைப் புறக்கணிப்பதும், மக்கள் சார்ந்த ஊடகம் ஒன்றை உருவாக்குவதும் இன்றைய அவசரத் தேவை. இதிலிருந்து தவறினால் எஞ்சியிருக்கும் சிறிய சுதந்திர இடைவெளியும் அழிக்கப்படுவது தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிடும்.

பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு காட்டப்படும் பாராபட்சம்

அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு காட்டப்படும் பாராபட்சம்

Comments 5

  1. indragith says:
    11 years ago

    more details about lyca mobile.
    most of the so called Tamil national websites are now hiding  news about Lyca because they are afraid or getting money by hiding the truth.

    http://www.eelamenews.com/?p=117468

    • Parai player says:
      11 years ago

      முக்கிய தகவல்கள் பல உள்ளடக்கிய இணைப்பு. நன்றி.

      பெரும்பாலான ஈழத்தமிழர் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் சூழல் ஸ்ரீலங்கா-இன் இயல்பு நிலை என்பதை தெரிந்திராதது தெரியத் துணியாதது என்ற மடைமையிலும் பயத்திலும் வாழ்பவர்கள். இவ்வளவு அழிவும் கண்முன் நிகழவும் இன்றைக்கு வயிறு முட்ட என்னத்தை சாப்பிடலாம் என்பதை மையமாக வைத்து இயங்குபவர்களாக உருவெடுத்துள்ளனர் பெரும்பான்மை புலம்பெயர்த்தப்பட்ட உறவுகள். இத்தகைய அப்பாவிச் சூழலில் அகதிகள் சார்ந்த குடிப்பெயர்வு இயந்திரத்தினது முதலாளித்துவ கூட்டாளிகளாகவும் போர், அடக்குமுறை, சர்வதேச சட்டமீறல்கள் போன்ற கேடுகெட்ட தொழில்துறை பங்குதாரிகளாகவும் சில ஒட்டுண்ணிகள் உருவாகியே ஆவார்கள்.
      லெபாரா என்று இன்னொரு ஒட்டுண்ணி முதலாளித்துவ பல்தேசிய நிறுவனமொன்றும் அபிவிருத்திக்கு பிச்சையளிப்பது போல் ஈழத்தமிழரை பேய்க்காட்டுவதையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்.

  2. mannan says:
    11 years ago

      .
    இனியொருவின் (அதாவது  சிறு எறும்பு  மனிதனின் காலில் கடிப்பதுபோல்)
    செய்திகளிற்கு   உலகில் தாமே செல்வத்தின் சிகரங்கள், வர்த்தகர்களில்
    அரசர்கள்  தமிழரில்  தலை சிறந்தோர் என்போர்  பாம்பு கடித்தது
    போல்  பயந்துநடுங்கினால்  அதன் அர்த்தமென்ன?

    பாம்பென்றால் படையும்  நடுங்குமென்பார்களே அதுபோலவா?
    அழிவிற்கு  முன் அகநதையென்பார்கள். அந்த  நிலமைக்கு வந்துவிட்டார்களா?

    தானாக  வேரூன்றி  வரட்சி வெள்ளம், புயற்காற்று  ஆகியவற்ரினை 
    எதிர்த்து   வென்று  வளர்ந்த மரங்களே   எந்த எதிர்ப்பையும்  தாங்க வல்லமையுடையவை. இவர்கள் பயப்படுவதையும்  காட்டும் எதிர்ப்பையும்
    பார்த்தால்   சுயமுற்சியில்  கஸ்டப்பட்டு அனுபவப்பட்டு  வளர்ந்தவ்ர்களின்  தன்மைகள் இவர்களின்செயல்களில்  வெளிப்படவில்ல்லையே
     
     கண்ணாடி வீட்டில் இருந்து  கொண்டு கல்லோடு
    விளையாடுபவர்கள் போலல்லவா இருக்கின்றது..

  3. Parai player says:
    11 years ago

    ஈழம்-ஈ-நியூஸ் இணையதளத்தில் திகதியிடப்படாத ஆசிரியர் தலையங்கம் ஒன்று தமிழ்நாட்டில் லைக்காவின் வியாபார நோக்கை வெற்றி தோல்வி என்று சிறுவாரங்களுக்கு முன் ஆராய்ந்துள்ளது. லைக்கா என்ற பட்டம் கழற்றப்பட்டு கத்தி படம் வெளியாகும் என்ற நிபந்தனை ஒருவித வெற்றி என தீர்மானிக்கிறது.
    அண்மைய கட்டு-நாயக்க விமானநிலைய நிகழ்வு பெருமளவு திரிபுற்று முற்றிலும் மாறுபட்ட கட்டுக்கதையாக உலா வருவது தமிழ்சினிமா உலகிலேயே. இது கலை, கலாச்சார ரீதியான வஞ்சக உள்நுளைவுக்கு எவ்வளவு பிரயத்தனங்கள் தொடர்கின்றன என்பதனை வலியுறுத்துவது.

    • Parai player says:
      11 years ago

      https://archive.today/ZS4dl
      Kaththi’ Lyca Productions Subashkaran and Prem arrested in Colombo
      Oct 30, 2014, 2daycinema.com

      https://archive.today/sg6Ku
      KC Tweets
      Kaththi Producer Lyca Production’s Subash Arrested

      ..

      Also !
      https://archive.today/74v3F

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...