இன்றைய செய்திகள்

Page 2 of 80912345...102030...Last »

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் நியூயோர்க்கிலும், கொழும்பிலும் ஆரம்பமா?:மனோ கணேசன்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் நியூயோர்க்கிலும், கொழும்பிலும் ஆரம்பமா?:மனோ கணேசன்

சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்து வைத்து விட்டார் என்றே கூறவேண்டும். இந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் அரச ஆசீர்வாதங்களுடன் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு விராது அவர்களை அழைத்து வந்து, பொதுபல சேனா கொழும்பில் நடத்தும் மாநாட்டின் மூலம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த இரண்டு கருத்தோட்ட முன்னெடுப்புகளின் மூலம்

நேபாளம், இலங்கை, ரீசீ.சீ : ஒரே நேர்கோட்டில்

நேபாளம், இலங்கை, ரீசீ.சீ : ஒரே நேர்கோட்டில்

1996 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரையான காலப்பகுதியில் நேபாள மாவோயிஸ்டுக்கள் மன்னராட்சிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி ஆட்சியைக் கையகப்படுத்தினர். இந்திய அரசும் சீன அரசும் மாவோயிஸ்டுக்களுக்கு எதிராக மன்னரின் அரச படைகளைப் பலப்படுத்தின. பிரித்தானிய அரசும் மாவோயிஸ்டுக்களை அழிப்பதற்கு மன்னருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. பிரித்தானிய உளவுப் படையான எம்.ஐ. 6 மாவோயிஸ்டுக்களை அழிப்பதற்கு அரசபடைகளுக்குப் பயிற்சிகள் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள உளவுப்படைக்கும் இராணுவத்திற்கும் கண்காணிப்புத் தந்திரோபாயங்களையும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளையும்(counter-insurgency

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு நீதிமன்றத்தில் பிடியாணை :குஜராத் இனக்கொலையின் எதிரொலி

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு  நீதிமன்றத்தில் பிடியாணை :குஜராத் இனக்கொலையின் எதிரொலி

உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நரேந்திர மோடி தலைமை தாங்கினார் எனக் கருதப்படுகின்றது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட குஜராத் படுகொலைகளின் பின்னர் அமெரிக்கா மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. பின்னர் அமெரிக்க

ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை தொடர்பாக அறிக்கை:தொடரும் நாடகம்

ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை தொடர்பாக அறிக்கை:தொடரும் நாடகம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இதன் போது இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தும் விசாரணை முறை தொடர்பாக அவர் கவலை தெரிவித்தார். இலங்கையில் ஐ,நா விசாரணைக்

அகதிகளைச் சட்டவிரோதமாக கம்போடியாவிற்கு நாடுகடத்தும் அவுஸ்திரேலிய அரசு

அகதிகளைச் சட்டவிரோதமாக கம்போடியாவிற்கு  நாடுகடத்தும் அவுஸ்திரேலிய அரசு

அகதிகளுடன் தீவிரவாதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுளையலாம் என எச்சரிக்கைவிடுத்த அவுஸ்திரேலிய அரசு இப்போது அகதிகளை கம்போடியாவில் முகாம் அமைத்து தங்கவைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உலகம் முழுவதும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் போராடிய காலப்பகுதியில் கம்யூனிச எதிர்ப்பாளர்களப் பாதுகாத்து எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஜெனீவா அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அரசியல் அகதிகளை அங்கீகரித்து வந்தன. 70 களின் இறுதியில் கம்யூனிச நாடுகள் சிதைக்கப்பட்டு உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் அகதிகளைத் திருப்பி அனுப்புவது

இரண்டு இனக்கொலையாளிகள் உலகின் கொலை நகரில் சந்தித்துக்கொள்கின்றனர்

இரண்டு இனக்கொலையாளிகள் உலகின் கொலை நகரில் சந்தித்துக்கொள்கின்றனர்

தானே உருவாக்கிய ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு இனக்க்கொலையாளிகள் நியூயோர்க்கில் சந்திக்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மோடியும் மகிந்த ராஜபக்சவும் நியூயோர்க் நகருக்குச் செல்கின்றனர். உலகில் போரால் அழிந்துபோகும் மனிதர்களின் தலைவிதி நிச்சயிக்கப்படும் இடமான நியூயோர்க்கில் மோடி மகிந்த என்ற இரண்டு இனக்கொலையாளிகள் சந்திக்கவுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் 27 ஆம் திகதி மோடியும் மகிந்தவும் பொதுச்சபைக் கூட்டத்தில்

சிங்களவனின் தோலில் செருப்புத் தைதவர்கள் பாசிஸ்டுக்களின் செருப்புக் காவிகளாக..

சிங்களவனின் தோலில் செருப்புத் தைதவர்கள் பாசிஸ்டுக்களின் செருப்புக் காவிகளாக..

தமிழரசுக் கட்சியின் ஆயுத வடிவமாகவே இயக்கங்கள் தோன்றின. 30 வருடங்களாக தவறாக நடத்தப்பட்ட போராட்டத்தின் ஊற்றுமூலம் தமிழரசுக் கட்சியே. இன்றும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சுலோகங்கள் தமிழரசுக்கட்சியிடம் இருந்து கடன்வாங்கப்பட்டவையே.

காலநிலை மாற்றத்தின் அபாயங்களை நாம் விளங்கி செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது! : செங்கோடன்

காலநிலை மாற்றத்தின் அபாயங்களை நாம் விளங்கி செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது! : செங்கோடன்

மேற்குலக அரசியல்வாதிகள் மூன்றாம் உலக, அரேபிய, ஆபிரிக்க நாடுகளில் எரிபொருள், கனியவளம் உட்பட தமது தேவைகளிற்காகவே யுத்தங்களை தூண்டிவருவதோடு, சூழல் மாசடைவதை பொருட்படுத்தாது கனியவளவேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியின் ஆதரவு பிரதேசங்களில் இராணுவம் மக்களைச் சாவடிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்தது. பலர் தாக்கப்பட்டனர். அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பொதுவாக பதுலையின் சில பகுதிகளிலும் ஹப்புத்தள பகுதியிலும் அரச பயங்கரவாதம் அதிகரித்துக் காணப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உவா மாகாணத்தில், 2009ல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள, 34 இடங்களில், 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜபக்ச தலைமையிலான கூட்டணி, நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 19 இடங்களில் மட்டுமே

வடக்கு – கிழக்கு இணையக்கூடாது – பிள்ளையான் கூச்சல்

வடக்கு – கிழக்கு இணையக்கூடாது – பிள்ளையான் கூச்சல்

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னை நாள் உறுப்பினரும் இன்றைய பாசிச அரசின் அடியாளுமான பிள்ளையான், கிழக்கு வாழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் கீழ் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், வடக்குடன் இணைப்பதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்துள்ளார். கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவது என்பதற்கான அடிப்படை

Page 2 of 80912345...102030...Last »