தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனைச் சந்திக்க விமானநிலையத்திலிருந்து நேரே சென்ற பிரித்தானியப் போர்க்குற்றவாளிரொனி பிளேயர் போர்க்குற்ற விசாரணை தொடர்பாகப் பேச்சு நடத்தியிருக்கிறார்.
மத்திய கிழக்கில் சமாதானம் ஏற்படுத்துகிறேன் பேர்வளி என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு சுற்றித்திரிந்த ரொனி பிளேயரின் காலத்திலேயே காஸாவில் குழந்தைகளைக் கொன்று வேடிக்கைபார்தது அதிகாரவர்க்கம். ரொனி பிளேயர் மத்திய கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்திலேயே அங்கிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பய்ங்கரவாதிகள் முளைத்து வேர்விட்டு உலகின் மூலைகளிலெல்லாம் வேர்விட்டனர்.
ராஜபக்ச கோலோச்சிய காலத்தில் கூட எதிர்க்கட்சி என்ற ஒன்று இலங்கையில் அவ்வப்போது குரலெழுப்பிதற்கான சான்றுகளைக் காணலாம். சம்பந்தன் என்ற ஒரு தமிழர் இலங்கையில் எதிர்கட்சித் தலைவராகப் பதவி வகித்தமைக்கான சாட்சிகளாக எந்தப் பதிவிலும் காணமுடியாத அளவிற்கு அவர் அரசின் அங்கம் போன்றே செயற்படுகிறார்.
இலங்கையில் பொதுபல சேனா மற்றும் மகிந்த ராஜபக்ச இணைந்த நச்சுக் கூட்டு இனக் கலவரம் ஒன்றைத் தூண்டும் வகையில் செயற்பட ஆரம்பித்துள்ளன. சிங்கத்தின் இரத்தம் என்று குறிப்பிடும் சிங்கலே என்ற ஸ்ரிகர்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. பொதுபல சேனாவின் தோற்றத்தினதும் வளர்ச்சியினதும் பின்னணியில் நோர்வே அரசே செயற்பட்டது என்பதற்கான ஆதரங்கள் முன்னமே வெளியிடப்பட்டன.
இதன் மறு பக்கத்தில் தேசியவாதம் என்ற பெயரில் சுரேஷ், விக்னேஸ்வரன் போன்ற சந்தேகத்திற்குரிய பேர்வளிகளை இயக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதாற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தச் சூழலிலேயே சம்பந்தனை அவசர அவசரமாக ரொனி பிளேயர் சந்தித்திருக்கிறார்.
பொதுவாக சம்பந்தன், மைத்திரிபால, ரனில், விக்னேஸ்வரன், சுரேஷ், புலம்பெயர் பினாமி அமைப்புக்கள், பொதுபல சேனா என்ற அனைத்துமே ஏகாதிபத்தியப் பயங்கரவாதிகளால் இயக்கப்படும் நிலையில் இலங்கை மற்றொரு ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறதா என்ற அச்சம் எழுவது இயல்பானது.
மத்தியகிழக்கில் மத அடிப்படைவாதத்தைக் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தீனி போட்டு வளர்த்த ஏகாதிபத்தியங்கள், பௌத்த சிங்கள அடிப்படை வாதத்தை தொடர்ந்து பேணுவதற்கு தமது முழுப் பங்களிப்பையும் வழங்கிவருகின்றன.
மறுபுறத்தில் பௌத்த சிங்கள அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தமது அடியாட்களின் கைகளில் ஒப்படைக்கும் பணியைக் கன கச்சிதமாகவே செய்துமுடிக்கின்றன.
கோழிக்குஞ்சுகளைச் சுற்றிவரும் கழுகுகைப் போன்று இலங்கையைச் சுற்றிவரும் பிளேயர் அபாய எச்சரிக்கை!
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளையும் அதன் தலமைகளையும் ஏகாதிபத்தியங்களால் முளுமையாக கையாள முடியும் எனும்போது எதற்காக நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவேண்டும் என்று எனக்கு புாியவில்லை.
அதாவது சம்பந்தனோ விக்கினேஸ்வரனோ இருவரும் இனியொரு கூறுவதுபோல் ஏகாதிபத்தியங்களின் கைப்பொம்மைகள் என்றால் யாா் அதிகாரத்தில் இருப்பது என்பதில் நாம் கவலைப்பட எதுவுமில்லையே.