சுன்னாகம் அழிவின் சூத்திரதாரியுடன் ரொனி பிளேயர்

நிர்ஜ் தேவா, ரொனி பிளேயர், தம்மிக்க பெரேரா: இரத்தைத்தைச் சுவைத்தவர்கள்
நிர்ஜ் தேவா, ரொனி பிளேயர், தம்மிக்க பெரேரா: இரத்தைத்தைச் சுவைத்தவர்கள்

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இலங்கை சென்ற ரொனி பிளேயர் மீண்டும் அங்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்வதகக் கூறியுள்ளார். இலங்கையை மேலும் சுறையாடும் முயற்சியில் ஏகாதிபத்தியங்களின் அடியாளாக ரொனி பிளேயர் போன்ற உயர்மட்ட ராஜதந்திரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நிர்ஜ் தேவாவின் உணவகத்தைத் திறந்துவைத்துப் பேசும் பிளேயர்
நிர்ஜ் தேவாவின் உணவகத்தைத் திறந்துவைத்துப் பேசும் பிளேயர்

கடந்த தடவை இலங்கையில் தங்கியிருந்த வேளையில் ரொனி பிளேயர் உயர்தர உணவகம் ஒன்றைத் திறந்துவைத்தார். Nirj’s என்ற அந்த உணவகத்தின் உரிமையாளர் நிர்ஜ் தேவா என்ற பிரித்தானிய அரசியல்வாதி. சுன்னாகம் அனல் மின்நிலையத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணக் குடாநாட்டை அழித்த பல் தேசிய வியாபார நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர் குழுவில் ஒருவர். பிரித்தானியாவின் ஆளும் கொன்டர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா, சிறீ லங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராக புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தை அழித்த சுற்றுச் சூழல் கிரிமினல் நிர்ஜ் தேவா சார்ந்த நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கில் வடக்கு மாகாணசபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டமை தெரிந்ததே.
ஆக, போர்க்குற்றவாளி ரொனி பிளேயர் பயணிக்கும் நேர்கொட்டில் மேற்குறித்த அனைவரும் அணிவகுத்துள்ளனர் என்பது வெளிப்படையானது.

நடந்து முடிந்த குற்றங்களைத் தண்டிக்கப் போவதாகக் கூறும் இக் குழுவினர் நடந்துகொண்டிருக்கும் அழிப்பின் பங்காளிகள் என்பது கவனிக்கட்தக்கது.