புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…

lttes

தமிழீழ விடுதலை புலிகளை அழித்ததில், மகிந்த ராஜபக்ச போன்ற சர்வாதிகாரிகளும், இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் நேரடியாகப் பங்காற்றிய அம்புகள் என்றால், அதன் பின்புலத்தில் செயற்பட்ட ஏகபோக அரசுகளும், அவற்றின் கூறுகளான தன்னார்வ நிறுவனங்களும்( NGO – http://inioru.com/ngos-the-burning-world/), அவ்வம்புகளை எய்தவர்கள் ஆவர். இதன் இடையே ஒரு கூறாக, புலிகளையும், அதனோடு இணைந்து தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையையும், அழிப்பதற்கு, இலங்கை அரசிற்கும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கும், இடைப்பட்ட வலையமைப்பு ஒன்று செயற்பட்டுள்ளது. அந்த வலையமைப்பின், உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் ஆவர். இவர்களே புலிகளை, இறுதி யுத்தத்தில் வன்னிப் பகுதிக்குள் முடக்கி, அழிக்கத் துணை சென்றவர்கள் ஆவர்.

இவர்கள் தங்களை, மூன்று வேறுபட்ட தளங்களுள் அடையாளப்படுத்தினர்.

1. ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக, தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு, தன்னார்வ நிறுவனங்களின் முகவர்களாக செயற்படுவது.

2. இனவெறிக் கோசங்களை முன்வைத்து, தம்மையும் விடுதலை போராட்டத்தின் ஆதரவாளர்கள் என, தமிழீழ விடுதலை புலிகளை நம்பவைப்பது.

3. தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியம் என்கிற கோசத்தினை மீண்டும் முன்வைத்துக்கொண்டு, அழிக்கப்பட்ட விடுதலை போராட்டத்திற்கான‌ இடைவெளியை ஆக்கிரமித்து, தமிழ் மக்களினை ஏமாற்றுவது.

இத்திட்டத்திற்கு, பல்வேறு தன்னார்வ நிதிக்கொடுப்பனவு ( NGO Donors ) நிறுவனங்கள், பின்னணியில் செயற்பட்டனவாயினும், மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட நிறுவனங்களுள் பேர்கொஃப் பவுண்டேசன் முக்கியமானதொன்றாகும். ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் பேர்கோப் பவுண்டேசன், இலங்கையில் மட்டுமல்லது, பல்வேறு நாடுகளில் உரிமைப் போராட்டங்களை அழிப்பதில் பிரதான பங்கு வகித்திருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குச் சற்று முன்பதாக, பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சீ.வி.விக்னேஸ்வரன், சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அங்கு விக்னேஸ்வரனைத் தவிர வேறொருவரும் பேச அனுமதிக்கப்பட்டார். அவர்தான் சுதா நடராஜா அல்லது சுதாகரன் நடராஜா என்கிற தமிழராவார். ( http://www.cisd.soas.ac.uk/person/suthaharan-nadarajah%2c20354861  )

கடந்த 22.08.2015 அன்று, தமிழர் ஒருங்கிணைப்பு பிரித்தானியா குழு நடத்திய ‘அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்’ என்கிற நிகழ்வில் பிரதான பேச்சாளராகவும் சுதாகரன் நடராஜா அழைக்கப்பட்டிருந்தார். சுதாகரன் நடராஜா உட்பட, அவருடன் இணைந்த புலம்பெயர் புலி செயற்பாட்டளர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர், மற்றும் சர்வதேச தமிழ் ஊடகவியளாளர் கூட்டமைப்பினர் ஆகியோர், கஜேந்திரகுமார் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் அவருக்கு ஆதரவாக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்களை பிரித்தாளும் அமெரிக்க நிகழ்ச்சி நிரலில், ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பதுகளின் மையப்பகுதியில் இருந்து இயங்குவதுடன், தம்மை அழிவுகளில் இருந்து காத்து கொண்டு, தம்மின மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையாகவே இன்றுவரை செயற்படுவதுடன், தனது மறைந்த‌ பாட்டன் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றே, தாமும் ஏகாதிபத்திய அடிவருடியாக செயற்படுவதை நிறுத்தி, உண்மையான மக்கள் சேவையில் ஈடுபட, இனியொரு கோரி நிற்பதுடன், அவர் தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் சில மிக முக்கிய உண்மைகளை, மக்கள் நன்மை கருதியும், மக்களின் எதிர்கால நன்மை கருதியும் வெளியிட வேண்டி நிற்பதுடன், தாம் அமெரிக்க இராஜாங்க அலுவலர்களுடன் பேசும் விடயங்களை, மக்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து, மக்கள் சேவையாளராக‌ சேவை செய்யவும் கோரி நிற்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக, புலம்பெயர் நாடுகளில் பணம் சேகரித்து அனுப்பும் அளவிற்கு, அரசியல் மலிந்து போயிருப்பது கவலையை தரும் விடயம் என்பதுடன், தங்கள் பணத்தை மக்கள் சேவைகளுக்காக செலவு செய்து, தமது வாழ் நாட்களை மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்யும் கட்சிகளும், வேட்பாளர்களும், இந்த தேர்தலில் இல்லாதது, தமிழர்களின் பேரிழப்பாகும்.

சுதாகரன் நடராஜாவினை போன்று, திரை மறைவில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியங்களிற்காக வேலை செய்யும் நபர்களும், அவர்களின் பின்னிருந்து தன்னார்வ நிறுவனங்களிற்காக, அறிக்கை எழுதி கொடுத்து சம்பாதிக்கும் இன்னும் சிலரும், தமது இவ்வகையான நய வஞ்சக செயல்களை நிறுத்தி, மக்களுக்காக செயற்பட முன்வர‌வேண்டும். இன்றைய காலகட்டத்தில், தாங்கள் தம்மை வெளிக்கொணரும், ஆக்கபூர்வ அரசியலே, மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும், என்பதை புரிந்து கொண்டு, தம்மால் தமிழ் மற்றும் சிங்கள, முஸ்லிம் இன மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எவரும் மறைக்காமல், தங்கள் இதயங்களில் ஒளித்து வைத்திருக்கும் உண்மைகளை மக்கள் முன் வைத்து, அமெரிக்க வல்லாதிக்கத்தின் இலங்கையில் உள்ள‌ வளங்களிற்காக, இரகசியமாக நடாத்தப்பட்ட யுத்தத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து, மக்களிற்காக‌ போராட அறைகூவல் விடுக்கின்றோம்.

Centre for Just Peace and Democracy (CJPD) என்ற அமைப்பு, 2004ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ்
செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து, Switzerland உள்ள Genevaவை மையமாக வைத்து தொடக்கப்பட்டு இயங்கிவந்தது. சுதாகரன் நடராஜாவின் ஆலோசனையில், உலகெங்கும் உள்ள, தமிழ் மேட்டுகுடிகளில் இருந்து, பல புத்திஜிவிகள் தேர்வு செய்யப்பட்டு, உருவாக்கப்பட்ட‌ இவ்வமைப்பிற்கு, “பேர்கொஃப் ஃபவுண்டேசன்” ( Berghof Foundation ) நிதி உதவி வழங்கி ஆரம்பித்து வைத்தது (http://tamilnation.co/conflictresolution/tamileelam/cjpd/index.htm). இவ்வ‌மைப்பின் நடவடிக்கைகளுக்காக, புலிகள் இயக்க ஆரம்பக்கட்ட போராளிகளாக இருந்து, பின்னர் இயக்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிய சிலரும், இணைத்துக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இச்செயல் இவ்வமைப்பு புலிகளிடம் நற்பெயரை பெற்று, அவர்களின் நம்பிக்கையை பெறுவதன் ஊடாக, அவ்வியக்கத்தில் செல்வாக்கு செலுத்தி, அதனை அழிவு பாதையை நோக்கி நகர்த்தி சென்றது.

வன்னி நிலப்பரப்பில் NGOகள் கால் ஊன்றுவதற்கு வழிசமைத்து கொடுத்ததுதான், CJPD யால் மேற்கொள்ளப்பட்ட conflict dispute resolution projectsஇன் நடவடிக்கை ஆகும். பேர்கொஃப் ஃபவுண்டேசனால் ( Berghof Foundation ) முன்னெடுக்கப்பட்ட conflict dispute resolution projectsஇன் மாதிரி வடிவம் எப்படிப்பட்டதென்றால், கொரில்லா போராட்ட முறைகளில் போராடும் போராட்ட அமைப்புக்களினை, தங்கள் செல்வாக்கினை பயன்படுத்தி, உதவிகள் செய்து, அவர்களின் இலக்கினை அடைய உதவுவதாக, பொய்களை கூறி நம்பவைத்து, அவர்களுடைய சுதேச வழி போராட்டத்தின் திசைகளை மாற்றி, அவர்களுக்கு மிதவாத போராட்ட உத்திகளை, திறன் பயிற்சி ( Capacity Building ) என்கிற‌ பெயரில், கற்பித்து, அவர்களை நம்ப செய்து, அவர்களுடைய போராட்டத்திற்கு அங்கீகாரத்தினை பெற்றுத்தருவதாக, கபட நாடகம் ஆடி, அவ்வியக்க கட்டமைப்பை சீர்குழைய செய்வது மட்டும் அல்லாமல், அவ்வியக்க உறுப்பினர்களின் எண்ணக்கருக்களை அறிந்து, அவர்களை அவ்வியக்கத்தில் இருந்து பிரிக்கும் வழி முறைகளை ஆராய்வது மட்டும் அல்லாமல், தம்மால் இயன்ற பொய்களை நிர்பந்தங்களின்படி சொல்லி, அவ்வியக்கத்தினை முற்றாக நிர்மூலம் செய்வதற்கு உரிய கடமைகளை செய்வதே ஆகும்.

இதுவே  புலிகளின் அழிவிற்கு விரைவாக வழிகோலியது என்பது மட்டும் அல்லாமல், தற்போது தமிழ் மக்களை, தமது உரிமைகளை பெற, NGOகளையும், அவர்களின் கட்டுக்குள் இருக்கும் கட்சிகளையும், மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளியும் விட்டுள்ளது. இதனை இவ்வமைப்பில் இருந்த நபர்கள், அரசியல் மாற்றம் என்று பேர்கொஃப் ஃபவுண்டேசனுக்கு ( Berghof Foundation ) அறிக்கை எழுதி கொடுத்தது மட்டும் அன்றி, தமிழின அழிப்பின் மூலம் பணம் சம்பாதித்தது மட்டும் அன்றி, இன்றும், தம்மை, தமிழினத்திற்கு விடுதலையை பெறுவதற்கு போராடும் நபர்களாக, அடையாளங்காட்டி கொண்டு, மக்கள் மத்தியில், மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவும், அரசியல் அவதானிகளாகவும் உலா வருவதுடன், உண்மையை இன்றுவரை மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர். சுதாகரன் நடராஜா பேர்கோப் பவுண்சேடனுக்கு ( Berghof Foundation ) எழுதிய ஆய்வறிக்கை ஒன்றின் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ( http://www.berghof-foundation.org/fileadmin/redaktion/Publications/Papers/Transitions_Series/transitions_ltte.pdf )

பயங்கரவாதம், பயங்கரவாதத்தை அழிப்பதற்கான திட்டங்கள், மோதல் தவிர்ப்பு தீர்மானங்கள், போருக்குப் பின்னான சமாதானம் போன்ற, பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ள, இந்த நிறுவனத்தின் எமது போராட்டத்தின் மீதான தலையீடு, இனப்படுகொலைக்கு மிக நேர்த்தியாகத் துணை சென்றுள்ளது. “பேர்கோஃப் ஃப‌வுண்டேசன்” ( Berghof Foundation ) நிதி வளத்தைப் பெற்றுக்கொள்ளும், உலகத் தமிழர் பேரவை, மங்கள சமரவீர மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் திரைமறைவுப் பேச்சுக்களை, லண்டனில் நடத்திய போது, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, இனியொரு… உட்பட பலர் முன்வைத்தனர். இனியொருவிற்கு கிடக்கப்பெற்ற ஆதாரங்களையும், தனி நபர்களின் வாக்கு மூலங்களையும், சில இணைய தகவல்களையும், மையமாக வைத்து எழுதப்படும் இத்தொடரில் சம்பந்தப்பட்டவர்கள், தமது பக்க கருத்துக்களை தரும் இடத்து, அதனையும் இனியொரு வெளியிடும் என்பதையும் தெரிவிக்கிறது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமையும், மக்கள் அமைப்பும் அவசியமாகிறது. அது தோன்றுவதற்கான இடைவெளி, இன்று சமூகத்தின் தேவையாகவுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும், அவற்றை சார்ந்த அரசியல் கட்சிகளாலும் நிரப்பப்பட்டிருக்கும், ஜனநாயக போராட்டத்திற்கான அவ் இடைவெளியினை, மக்கள், தம் கடந்த காலத்தை சுய விமர்சனம் செய்வதுடன், தாமே தம‌க்கு தேவையான‌ மக்கள் அமைப்பினை உருவாக்க போராடி, தமக்கான பூரண விடுதலையை வென்றெடுக்கவேண்டும். மக்களின் விடுதலைக்காக, போராடுவதாக கூறும் கட்சிகளும், தலைவர்களும், இனவாத கோசங்களை முன்வைத்து, மக்களை மந்தைகள் போன்று, தேர்தலுக்காக மட்டும் பயன்படுத்தாது, இனிவரும் காலங்களில் மக்கள் சேவை செய்ய முன்வரவேண்டும் என வேண்டி நிற்பதோடு, இனவாத கோசங்களை கைவிட்டுவிட்டு, மற்றைய இன மக்களுடன் இணைந்து, அனைத்து மக்களுக்கும் உரித்தான சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க போராட முன்வருமாறும், இனப்படுகொலைக்கான விசாரணையை, அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து முன்னெடுப்பதுடன், இலங்கையை ஏகபோக நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்க அனைவருடனும் இணைந்து போராட முன்வருமாறும், இனியொரு வேண்டி நிற்கிறது.

இந்த வலையமைப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும். இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவரவிருக்கும் இத் தகவல்கள் அவர்கள் சார்ந்த அரசியல் தொடர்பானதே. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த அவதூறுகள் அல்ல. – இனியொரு ஆசிரியர் குழு

தொடரும்…

4 thoughts on “புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…”

  1. துரோகிகளை அடியாளம் காட்டுங்கள்

    1. That is something Inioru cannot do. They can only give blind targets. For one they are shit scared to pin point anyone and secondly most of their accusations are based on here say.

  2. எமது கருத்துகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை ?

  3. anbirkuriya inioru valaithala angathinargale,

    puligal varalaru agivitargal.prabhakaran iranthuvitar.athodu thani eelathirkana porattam mudivu petruvittathu enru than naan ninaikinren.prabhakaranudaya kaigal ratha karai padinthathu.eppadi kath eduthavathan kathiyal than savan enbathurku erpaa prabhakaran vanmuraiyal iranthu ponaar.prabhakaranud aya pangu kurainthu mathipatharkalla eela poratathil.aanal oru thalaivan puthisaliyaga irupan enraal kidaitha vaipai payanbaduthikondu makkalukku nallathu seyya vizhaiyavendum.aanal prabhakaran vada kizhaku onrinaithu atharku thalaivaragi tamizh makkalai onru serthu irunthal ethirgalathil eelam ninaivagirukkum.aanal athai vittuvittu ippozhuthe eelam vendum enra korikai kombu thenukku mudavan asai pattathu pol aagum.agave ineemel naam enna seyya mudiyum,vendum enra alosagnaigalai inioru asiriyargal vaithal eelathil irukkinra tamizhargal payanperuvargal;
    naanri

Comments are closed.