சுன்னாகம் குடி நீர் : வட மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பாணை

well+ealalaiஇலங்கை அரசாங்கத்தினதும் இன்றைய மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினதும் அனுமதியுடன் சுன்னாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டதில் அபிபிரதேசம் முழுவதும் நச்சாக்கப்பட்டது. குடி நீர் மற்றும் நிலம் போன்றன மாசுபடுத்தப்பட்டன மக்கள் பற்றுள்ளவர்களும் சமூக உணர்வுள்ளவர்களும் மக்களும் சுன்னாகத்தில் நடைபெற்ற அழிப்பிற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

சுன்னாகத்தில் மின் நிலையத்தை நடத்திய நிறுவனமான நோதர்ண்பவர்ஸ் இன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட ஆலோசகர். ரனில் அரசினால் சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டவர்.

வட மாகாண சபை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களை அழிவிலிருந்து பாதுகக்கவும் சுன்னாகம் பிரச்சனையை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கலாம்.

மக்களுக்கு இப் பிரச்சனை வெளிப்படையாகக் தெரிந்துள்ள நிலையில், நீர் மாசடையவில்லை என வட மாகாண சபை நிறுவ முற்பட்டது.

இந்த நிலையில், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்துள்ள விவகாரம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மின்சார வேலைத்திட்டம் காரணமாக குடிநீர், சூழல் மாசு ஏற்பட்டதாக தெரிவித்து சுற்றுச்சூழல் பராமரிப்பு மத்திய நிலையத்தின் தலைவர் ரவீந்திர காரியவசம் இவ்ழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, மின்சார சபை, வட மாகாண முதலமைச்சர், வலிகாமம் பிரதேச சபை தலைவர், நொதேர்ண் மின்சார நிறுவகம் ஆகியோரது பெயர்கள் குறிப்பிட்டுள்ளார். பிரதிவாதிகள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.