Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இனியொரு... by இனியொரு...
08/03/2016
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

songrel5இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மற்றொரு சிலர் அறிக்கை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். வடமாகாண சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து ஆரம்பித்த மரணம் தொடர்பான புரளிகளில் பல எந்தவகையான அடிப்படை ஆதாரங்களும் அற்றவை. இலங்கை அரசு இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. மனித உரிமை அமைப்புக்கள், ஐ,நா போன்றவை இது தொடர்பாக மூச்சுக்கூட விடவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாகட்டும், இன்றைய நல்லாட்சி அரசாகட்டும் போராளிகளின் அரசியல் மறு பிரவேசத்தை கண்காணிப்பதும் அழிப்பதும் பிரதான நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. மாபெரும் இனப்படுகொலை ஒன்றை நடத்திய மகிந்த அரசு சரணடைந்த பலரைக் கொன்று போட்டிருக்கிறது. அவர்கள் தொடர்பான எந்த விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. பெரிதாக வெளித்தெரியாத ஆபத்தான பேரினவாத அரசு தனது ஆட்சியை நல்லாட்சி என்ற பெயரில் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்த பின்னரும் அரச தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான எந்தத் தகவல்களும் சரணடைந்தவர்கள் தொடர்பாக வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சி என்ற தலையங்கத்தில் இலங்கை அரசின் ஊதுகுழல் போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இத்தகவல்களை வெளியிடுவது அடிப்படை மனித உரிமை தொடர்பான ஒன்று என மக்கள் பக்கத்திலிருந்து அழுத்தங்களை வழங்கவில்லை.

விசித்திரமான ‘அறிகை அரசாகச்’ செயற்படும் வட மாகாண சபை இது தொடர்பாக இன்று வரை மூச்சுக்கூட விட்டதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக உளவியல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் விடுதலைச் செய்யப்பட்ட போராளிகள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான திட்டங்களுக்கான வரைபக்கூட வட மாகாண சபை, தமித் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசு போன்றன முன்வைக்கவில்லை. சிங்கக்கொடி ஏற்றி மகிழ்ந்த வடக்கு முதலமைச்சரும், சிங்கக்கொடியோடு மேடையில் முஷ்டி போட்ட சம்பந்தனும் இவ்வாறான அடிப்படைப் பிரச்சனைகளைக் கையாள்வதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அடுத்த தேர்தல் வரைக்கும் மீளாத் துயில்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் குழுவினர் இன்னும் அரசியல் அரங்கில் இருக்கிறார்களா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்குமோ?
இவ்வாறான சூழலில் 103 போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்தனர் எனக் கிளப்பிவிடப்பட்ட புரளி தொடர்பான எந்த ஆதராங்களுமின்றி பெரும் சலசலப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் பெயர்கள் விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் போன்ற குறிப்பான எந்தத் தகவல்களுமின்றி எழுமாறாகக் கூறப்பட்டு இத் தகவல்களில் உள் நோக்கம் உண்மைகளை மூடி மறைப்பதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இத்தகவலைப் புரளியாக அன்றி புள்ளிவிபரங்களோடு முன்வைக்க இவர்கள் தவறியதன் காரணம் அறியப்பட வேண்டும். சரணடைந்தவர்கள் தொடர்பாகவும். கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசிடம் புள்ளிவிபரஙகளைக்கூடக் கேட்கத்தவறியக் இப் புரளிகளின் சூத்திரதாரிகளின் உள் நோக்கம் உண்மையைத் திசைமாற்றுவதா என்பது கண்டறியப்படவேண்டும்.

சுன்னாகம் அழிவிற்குத் துணை சென்ற விக்னேஸ்வரனின் சுகாதார அமைச்சர் இப்போது மரணம் தொடர்பான பிரச்சனையக் கையாளப் போவதாக அறிவித்துள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டிருந்த எத்தனை போராளிகள் மரணமடைந்துள்ளனர் என்ற குறைந்தபட்சத் தகவல்களிலிருந்து அவர் கையாள்வதை ஆரம்பிக்கலாமே?

அதனை விடுத்து தமது சுய லாப அரசியலுக்காக, இலங்கை பேரினவாதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி புரளிகளைக் கிளப்பிவிடுவது ஆபத்தானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்

பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்

Comments 1

  1. Kandappan Srinivasan says:
    10 years ago

    Will the children seen here be alive after it 7 months??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...