சுன்னாகம் அழிவை அனுமதித்த இலங்கை அமைச்சரின் இலாபக் கணக்கு

pataliசுன்னாகம் அனல் மின் நிலையத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை வரண்ட வலையமாக்குவதற்கும், நஞ்சுகலந்த நீரை மக்கள் பருகுவதற்கும் வழிசெய்த ராஜபக்ச அரசினதும் மைத்திரி அரசினதும் மின்வலு அமைச்சரான சம்பிக்க ரணவக்க மூன்று அனல் மின் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

அவற்றின் உடன்படிக்கைகளின் மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை, புத்தளம் மற்றும் அம்பிலிபிட்டிய ஆகிய அனல் மின் உற்பத்தி நிலையங்களே மூடப்படவுள்ளன. அந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான அலகுக்கட்டணமாக வருடாந்தம் 3000 – 3500 மில்லியன் ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.

களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் கூறியுள்ளார். அதே வேளை இன்றும் மக்களை அவலத்துள் அமிழ்த்தியுள்ள சுன்னாகம் அனல் மின் நிலையம் குறித்த சம்பிக்க வாய்திறக்கவில்லை.

சுன்னாகம் அனல் மின் நிலையதை நடத்திய எம்ரிடி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவரான நிரஞ்சன் தேவா இலங்கை அரசின் பரிந்துரையின் பெயரில் சிறீ லங்கன் ஏயர்லைன்சின் இயக்குனராக நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.