ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன்

tccprotestதம்மிடமே புலிகள் போராட்டத்தை ஒப்படைத்ததாக, புலிகளைத் தடை செய்த மேற்கு நாடுகளில் அலரித் திரிந்து, தங்களுக்குள்ளேயே சுட்டுத்தள்ளும் உலகத் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவானது (TCC), புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய நாடுகளின் ஜெனிவாக் கிளையின் வெளிவாயில் நிலத்தில் முடக்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கொலை வெறிக்கு சட்டரீதியாக வழிசெய்துகொடுக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று BTF . இந்த அடிப்படையான விடையத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாத அமைப்பின் போட்டியாளர்களான TCC தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்குத் தொழிற்பட்ட மற்றொரு பினாமி அமைப்புக்களில் ஒன்று.
ஜெனீவாவின் உள்ளே BTF 2009 ஆம் ஆண்டிலிருந்து நடத்தும் பேச்சுவார்த்தைகளாலும் தமிழர்களின் போராட்டம் சர்வதேச மயப்பட்டிருப்பதாக மக்களை ஏமாற்றுகிறார்கள். உண்மையில் போராட்டம் சர்வதேச மயப்பட்டிருக்கிறதா என்றால் அது முழுப் பொய் என்பது வெளிப்படையானது. உலகில் வெற்றியுடன் போராடும் இயக்கங்கள், நேரமையான மனிதர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள்,ஒடுக்கப்படும் மக்களின் நண்பர்கள் என்ற அனைவருமே இவர்களை ஏளனமாகவே பார்க்கின்றனர். தமிழர்களின் போராட்டத்தை இவர்கள் உலகின் அதிகாரவர்க்கங்களிடம் ஒப்படைப்பதற்கு அவர்களிடமே பேச்சு நடத்துகிறார்களே தவிர போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தவில்லை. ஐ.நாவிற்குள் வந்துபோகும் அரசியல் வியாபாரிகளுக்கு மட்டுமே இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது சொல்லப்படுகிறது. உலகில் நடைபெறும் ஏனைய போராட்டங்களைப் போன்று உலக மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சனைகள் எடுத்துச் செல்லப்படாமல் முடக்கப்பட்டமைக்கு பிரதான காரணம்.

இவ்வாறு ஐ.நாவின் உள்ளே போராட்டத்தை முடக்கும் வேலையை BTF செய்துமுடிக்க அதற்கு வெளியே அந்தப் பணியை TCC செய்து முடிக்கிறது.

வருடம் வருடம் TCC நடத்தும் போராட்டத்திற்கு ஐரோப்பா முழுவதுமிருந்து சொகுசு பஸ்களில் மக்கள் அழைத்துச் செல்லப்படுவதால், தமிழர்களின் சொகுசு பஸ் நிறுவனங்களுக்கும் உணவு நிறுவனங்களுமே வருவாயை அதிகரித்துக்கொள்கின்றன. வருடாவருடம் தீபாவளி போன்று நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் முன்வைப்படும் முழக்கங்கள் கேலிக்குரியவை. உலக மக்களும், ஜனநாயகவாதிகளும் புரிந்துகொள்ள முடியாதவை.

seemanஇவர்களின் கைகளில் ஆங்காங்கு இலங்கை அரசைக் குற்றம் சாட்டும் சுலோகங்கள் காணப்பட்டாலும், “எங்கள் தலைவன் பிரபாகரன், போர் குற்றவாளியை கைது செய்” என்றே ஒலி எழுப்புகிறார்கள். பற்றாக் குறைக்கு எப்போதும் இவர்களால் தாங்கி வரும் இராணுவச் சீருடை, துப்பாக்கியுடன் கூடிய பிரமாண்டமான பிரபாகரனின் உருவப் படத்துடன் அன்னை தெரேசா, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோர்களின் படங்களையும் தாங்கி வந்து மேற்கு நாட்டு மொழிகளில் “போர் குற்றவாளியை கைது செய்” என்று கத்துவதால், துப்பாக்கியுடன் நிற்கும் பிரபாகரனை கைது செய்யக் கோருவதாகவே பல் இன மக்கள் மத்தியில் தோண்றுகிறதாம்.

ஜெனிவா ஏற்பாட்டில் TCC யினர் சூரர்களாம், இவர்களின் ஜெனிவா திருவிழாத் தொடங்குவதற்கு சில வாரத்திற்கு முன்பாக சைக்கிள் பயணம், ஊர்திப் பயணம், நடைப் பயணம், காவடிப் பயணம் என்று ஆரம்பித்து விடுவார்கள். இப் பயணங்கள் யாவும் புலம்பெயர்ந்த அகதித் தமிழர்களை உருவேற்றி ஜெனிவா வெளிக்கு அழைத்துச் செல்லவாம். TCC யினரின் அழைப்பை ஏற்று பின்னால் செல்பவரின் செலவைக் கேட்டால் தலை சுற்றுமாம். இவர்களின் கூட்டங்கள், ஊர்வலங்கள் என்று செல்பவரின் வீடுகள், தொழில் நிலையம் வரை சென்று தலைவன் பிரபாகரன் வெளியில் வரப்போகிறார், உங்கள் பங்களிப்பை கொடுங்கள் என்று, பெரும் நிதி திரட்டல் வேறாம்.

ஜெனிவாவில், TCC, BTF யினரால் மூடிய அறையில் தங்களுக்குள் நடத்தும் மகாநாட்டிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தமிழர்களைத் துரோகிகளாக்குவதிலேயே நேரத்தை செலவிடுவர். ஏற்கனவே இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நாடுகள் கொண்டு வரும் அறிக்கைகளை தங்கள் பெரும் முயற்சியால் வெளி வந்ததாக தமிழர் காதுகளில் பூ சுற்றுவார்கள். இவைகளே, புலிகளின் இறுதிக் கூறுகளெனத் தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் யினர் தமிழீழத்திற்காக நடத்தப்படும் இறுதிப் போராம்.