பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள் :சிரிய கிறீஸ்தவ மதகுரு

pope-francis-with-syriac-orthodox-patriarchஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. பிரான்சில் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதலின் பின்னர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கின் பல மதங்கள் நல்லிணக்கத்துடன் வாழும் நாடுகளில் ஒன்றான சிரியாவை அழிப்பதற்கான மேற்கு அரசுகள் தயாரித்து கட்டவிழ்த்துவிட்டு, பராமரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அந்த நாட்டில் மரண ஓலம் கேட்கிறது.

இந்த நிலையில் சிரியாவின் கிறீஸ்தவ மதத் தலைவரான Moran Mor Ignatius Aphrem II இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு ஏகாதிபத்திய அரசுகளை நோக்கி விடுத்துள்ள அவரது கோரிக்கையில் “எமது மக்களைப் படுகொலை செய்து, நாட்டையும் அழித்துவரும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதையும் ஆதரவு வழங்குவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களைச் சுரண்டுவதற்கும், மத்திய கிழக்கிலிருக்கும் பணம் படைத்தவர்களை ஐரோப்பாவை நோக்கி நகர்த்துவதற்கும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை வளர்க்கும் மேற்கு நாடுகளின் அதிகரவர்க்கங்களின் முகத்தில் அறைந்துள்ளது அவரின் கோரிக்கை.