ஐ.நாவில் முறையிடும் ஒப்பாரிக்கு சுமந்திரனும் தயார்!

sumanthiran_in_londonஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 வது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுவரை இலங்கை அரசின் தமிழ் ஊதுகுழலாகச் செயற்பட்டுவந்த சுமந்திரன் இப்போது இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதை முறையிடுவதற்காக ஐ.நா மனித் உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் தலைமையில் உருவான ஐக்கிய நாடுகள் நிறுவனம் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஏனைய நாடுகளயும் மக்களையும் ஒடுக்குவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. ஐ.நா வின் அங்கீகாரத்தோடு உலக மக்கள் ஆயிரமாயிராய் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் யுத்தங்கள் மக்களைச் சாரிசாரியாகக் கொன்று போட்டிருக்கின்றன. இந்த யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுமே செயற்பட்டன. நடைபெற்ற யுத்தங்கள் அனைத்துமே ஐ.நா அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே நடைபெற்றன.
சுமந்திரனுக்கும் புலம்பெயர் குழுக்களுக்கும் இவை தெரியாத புதிர்கள் அல்ல.

சுமந்திரன் அடுத்த தேர்தலில் வாக்குப் பொறுக்கத் தயாராகிவிட்டார். புலம்பெயர் பிழைப்புவாதிகள் தமது அரசியல் வியாபாரத்தை உறுதிப்படுத்த ஆரம்பித்துவிட்டன. பாவம் மக்கள்.