கருணாவை மறுக்கும் சரத் பொன்சேகா :அனைத்துத் தரப்புகளும் பிரபாகரன் தொடர்பான உண்மையை மறைக்கின்றன

prabakaranபிரபாகரன் மரணித்தது எவ்வாறு என்பது தொடர்பாக ,வன்னி இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தவாறுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னை நாள் தளபதியும் பின்னர் மகிந்தவின் அடியாளாக மாறியவருமான கருணா குறிப்பிடுகையில் பிரபாகரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறியிருந்தார்.

இப்போது பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளவில்லை போரில் மோட்டார் அல்லது ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என எக்ஸ்பிரஸ் நியூஸ் சேர்விஸ் என்ற இந்திய ஊடக முகவர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் அருகிலிருந்தே சுட்டுக்கொல்லப்பட்டதாக தடையவியல் விசாரணைகள் கூறுகின்றன என்றார்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்ற போதும் இதுவரை பிரபாகரனின் மரணம் தொடர்பான விசாரணையை நடத்துமாறு எவரும் கோரவில்லை. குறிப்பாக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு அமெரிக்க அரசை மன்றாடும் எந்த அமைப்புக்களும் பிரபாகரனின் மரணம் தொடர்பான விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

இலங்கை உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்போவதாகக் கூறிவரும் நிலையில் பிரபாகரனின் மரணம் தொடர்பான உண்மைகளைத் தெளிவுபடுத்துமாறு கோரினால் இலங்கை அரசை சிக்கலுக்கு உள்ளாக்கும்.

எது எவ்வாறாயினும் பிரபாகரனை அனாதையாய் உலாவ விடுவது ‘தமிழ்த் தேசிய’ வியாபாரிகளின் பிழைப்பிற்குத் தேவையான ஒன்றாகும். பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார் என்ற மாயையை ஏற்படுத்துவதன் ஊடாகவே இக் குழுக்கள் தமது இருப்பைப் பேணிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முடியும். அதே வேளை இலங்கை அரசும் தமது குற்றங்களை மறைக்கமுடியும்.

இந்த வகையில், பல விடையங்களைப் போலவே இலங்கை அரசுடன் புலம்பெயர் அடிப்படைவாதிகளும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.

கலம் மக்ரே இன் நேர்காணல்: