மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்

மார்ச் 8 இல் இன்னொரு அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறபோதிலும், இன்றும் பெண்கள் பால்நிலை சமத்துவத்திற்கு வெகுதூரத்திலேயே உள்ளனர்.

holly book imagesஉலகளவிலேயே இன்றளவும் மிகமிக ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் என்றால் அது பெண்கள்தான். இதனைத் தரம், அளவு (quality and quantity)என்ற இரு கோணங்களிலும் நிரூபிக்கமுடியும். பெண் ஒடுக்குமுறைக்குப் பல காரணங்களிருந்தபோதும் அவற்றுள் மிக முக்கிய இடத்தினை வகிப்பது மதமேயாகும்.

மற்றைய அடக்குமுறைகளை ஆகக்குறைந்தளவு மனதளவிலேனும் எதிர்க்கமுடியும், ஆனால் மதரீதியான ஒடுக்குமுறையினை மனதளவில் எதிர்ப்பதற்குக்கூட தெய்வக்குற்றம் என்றரீதியில் பயப்படவேண்டியுள்ளது. மற்றைய ஒடுக்குமுறைகள் மனிதருடன் தொடர்புடையது ஆனால் இந்த மதரீதியான ஒடுக்குமுறையானது கேள்விகளிற்கப்பாற்பட்ட கடவுள் தொடர்பானது. எனவேதான் மதமே பெண் ஒடுக்குமுறைகளில் கடுமையானது.

மதங்களினை நோக்கி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போதெல்லாம் மதங்களில் தவறில்லை, மதங்களினைப் பின்பற்றுவோரிலும், மதகுருமார்களிலுமே தவறு என்றுகூறி மதங்களிற்கு காலகாலமாக வெள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. இவ்வாதத்தினை எதிர்கொள்வதற்காகவே இந்த சிறு ஆய்வில் மதங்களின் புனிதநூல்களில் இடம்பெற்றுள்ள பெண்ணடிமைத்தனக் கருத்துகளும் அவற்றின் நடைமுறைகளும் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுசெய்யப்படுகின்றன. இப் புனிதநுல்கள் கடவுளால் அருளப்பட்டவை என்று மதங்கள் கூறுவதனால் மேற்குறித்த மதங்களிற்கு வெள்ளையடிக்கும் முயற்சி இங்கு பலனளிக்காது.

இந்துமதத்தின் பெண்ணடிமைத்தனம்:

மற்றைய மதங்களில் புனிதநூலிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும் என்றால் இந்துமதத்தில் புனிதநூல் எது என்பதிலேயே பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்தச்சிக்கலிற்குள் சிக்காமல் இந்துமத புனிதநூல்களில் எவ்வாறு பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்படுகிறது எனப்பார்ப்போம். பகவத்கீதையின் 9வது இயலின் 32வது பாடலில் (9:32)பெண்கள் அனைவருமே (சாதிவேறுபாடின்றி )பாவயோனியில் பிறந்த பாவிகள் எனக்கூறப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் அனைவரும் சூத்திரர், வைசியருடன் சேர்த்து தாழ்த்தப்பட்டவர்களாகக் கூறப்படுகிறது. இதனாலேயே சூத்திரர், வைசியருடன் பெண்களும் பூசகர்களாக வரமுடியாதநிலை (கருவறைத்தீண்டாமை), அவர்களிற்கு கல்விகற்கும் உரிமையில் பாரபட்சம் போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

gitaமேலும் கீதையில் கர்மா(முற்பிறவிப்பலன்)என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சியடையமுடியாத நிலை நுட்பமாக தோற்றுவிக்கப்பட்டது. ரிக் வேதத்தின் ஒரு பகுதியில் (Rig veda8:33:17)பெண்கள் புத்திக்கூர்மை குறைந்தவர்களாகக் கூறப்படுகிறது. யசூர் வேதமும்(Yaiur veda-Taittriya samhita)பெண்களை மந்த புத்தியுடையவர்களாகவும் பலம் (உடல், உள)குறைந்தவர்களாகவும் கூறுகிறது. இவற்றின் நீட்சியே பின்னர் பெண்புத்தி பின்புத்தி என்ற முதுமொழியாகவும், இன்றும்கூட பெண்கள் முடிவெடுக்கத்தகுதியற்றவர்கள் என்ற நிலைப்பாடாகவும் தொடர்கிறது.

மனுதர்மத்தின் ஒரிடத்தில்(Satapatha brahmana 14:1:1:31)பெண்களை பொய்யர்கள் எனக்கூற , மற்றொரிடத்தில் (manusmrthi 7:149-150)பெண்களை மிருகங்கள் மாதிரி கருதி இவற்றுடன் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும் எனக்கூற, மேலுமொரிடத்தில்(manusmrthi 9:2-4) பெண்கள் பகல் இரவு எனஎப்போதும் ஆண்களில் தங்கியிருக்கவேண்டும் எனவும் பெண்கள் சுதந்திரத்திற்குத் தகுதியற்றவர்கள் எனத்தெளிவாகவும் நேரடியாகவும் கூறப்படுகிறது. ஸ்திரிதர்மானது (Stri dharma)கணவனைக் கடவுள் போல வழிபடவேண்டும் எனக்கூறுகின்றது. புனிதநூல்கள்தான் இவ்வாறு என்றால் புராணங்களின் நிலை இன்னமும் மோசம். இராமயணத்தில் சீதையின் தீக்குளிப்பு , சூர்ப்பனகை மார்பு, மூக்கு என்பன அறுப்பு என கேவலமான முறையில் இராமபிரான் என்ற கடவுள் சித்தரிக்கப்படுகிறார். மகாபாரதத்திலோ கிருஸ்ணர் கோபியப்பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் உடையினை களவாடிவிட்டு, உடை தேவையாயின் நிர்வாணமாகக் குளத்திற்கு வெளியே வருமாறு கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் கூறும் சிலர் கடவுளிடம் மறைப்பதற்கு என்னவிருக்கிறது எனக்கேட்கிறார்கள்.

இதனையே இன்று நித்தியானந்தா, பிரேமானந்தா, யெயந்திர சுவாமிகளும் கேட்கிறார்கள் போலும். மற்றொரு சிவனின் அவதார புராணக்கதையினை அடிப்படையாகக்கொண்டே சதி, உடன்கட்டையேறல் போன்ற முறைகள் 19ம் நூற்றாண்டு வரை நடைமுறையிலி ருந்து பின்பு ஆங்கிலேயர்களால் சட்டமூலம் தடைசெய்யப்பட்டது. ஆயினும் இன்றுவரை கணவனை இழந்த பெண்கள் விதவைகள் எனக்கூறப்பட்டு பல்வேறு அவலங்களிற்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்கள்.

மேலும் கடவுள்களிற்கே பல மனைவிகள் எனக்கூறப்பட்டு பலதார மணம் ஊக்குவிக்கப்படுகிறது. இவற்றின் உச்சமாக நளாயினி கதை காணப்படுகிறது. இவ்வாறு இந்துமதத்தின் பெண் ஒடுக்குமுறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கிறிஸ்தவமும் பெண்ணடிமைத்தனமும்:

crownகிறிஸ்தவ மதத்தினைப் பொறுத்தவரையில் பெண்அடிமைத்தனமானது மனிதனின் படைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது. அதாவது (Genesis 2:4- 3:24)முதலில் ஆண் படைக்கப்பட்டு, பின்பு ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண் படைக்கப்பட்டாள் என்பதன் மூலம் ஆண்களிற்கான முன்னுரிமையும், பெண்களின் தங்கியிருக்கும் நிலையும் வெளிப்படுத்தப்படுகிறது. இதன் உச்சமாக ஆணின் மகிழ்சிக்காகவே பெண் படைக்கப்பட்டாள் எனக்கூறப்படுகிறது. (Genesis 2:18-20) (Woman was created for the glory of the man). மேலும் வைபிளின் சில பகுதிகளை(Luke1:41 & Luke 18:15) ஆதாரமாகக்கொண்டு பெண்களிற்கு அவர்களின் உடல் மீதான உரிமையே (கருக்கலைப்பு உரிமை ) மறுக்கப்படுகிறது.

இதனால் சிக்கலான மருத்துவநிலைகளின்போது கூட கருக்கலைப்பு உரிமை மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு தாய் மரணிக்கும் சந்தர்ப்பங்களும் இடம்பெறுகின்றன. வைபிளின் இன்னொரு பிரிவில் (Genesis 3:16)காணப்படும் “துன்பத்தில் பிள்ளை பெறுவாய்” என்ற வசனமும் பெண்ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகே உள்ளது. இதன் நீட்சியாகவே இங்கிலாந்தினைச் சேரந்த ஐேம்ஸ் யங் சிம்சனால் மயக்கமருந்து (chloroform) கண்டுபிடிக்கப்பட்டபோது கிறிஸ்தவ திருச்சபை கடும் எதிர்ப்பினை வெளியிட்டது.

ஏனெனில் இந்த மயக்கமருந்தினைப் பாவித்து பிரசவநோக்கிலான அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் . (Genesis 3:16)காணப்படும் “துன்பத்தில் பிள்ளை பெறுவாய்” என்ற தேவவசனம் பொய்த்துப்போகும் என்ற பயமே காரணமாகும். இப்போது புரிகிறதா மதத்தின் மனிதாபனம். மேலும் பழைய ஏற்பாட்டில் புதைந்திருக்கும் பெண்ணடிமைத்தனக்கருத்துகளோ கணக்கிலடங்காது.

இஸ்லாமும் பெண்அடிமைத்தனமும்:

Folio_from_a_Qur'an_(8th-9th_century)குரானினில்(Quran 4:3)ஆண்களிற்கு பலதார மனைவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் முகமது நபிகளிற்கு 12 மனைவிகள், அதில் முக்கியமான ஆயிசாவிற்கு திருமணத்தின்போது 9வயது, நபிகளிற்கு53வயது.இவ்வாறு இஸ்லாத்திற்கு முன்னுதாரணம் தரப்பட, அது இன்றுவரை பரவலாகப் பின்பற்றப்பட்டுவருகிறது . குரானின்படி(4:11) சொத்துப்பங்கீட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதாவது சொத்தில் இரு பங்கு ஆணிற்கு , பெண்ணிற்கு ஒரு பங்கே உரித்துடையவர். இன்னொரு பகுதியில்(2.282)சாட்சி சொல்லும் விடயத்தில் ஒரு ஆணின் சாட்சிக்குப்பதிலாக இரு பெண்களின் சாட்சி தேவைப்படுகிறது. இவற்றின் உச்சமாக அமைகிறது வசனம்(4:15) இதன்படிபெண் ஏதாவது மானக்கேடான செயலில் ஈடுபட்டாள் என்று சந்தேகதித்தாலேயே அவளை மரணம்வரை வீட்டிலேயே தடுத்துவைக்கும் அதிகாரம் ஆணிற்கு வழங்கப்படுகிறது. மனைவியினை அடிப்பதனை நியாயப்படுத்துவதாகவும், பெண் தன்னைத்தானே நிர்வகிக்கமுடியாதவள் எனவும் குரான்(4:34) குறிப்பிடுகிறது.

குரானது(4:24) வசனமானது போரில் கைப்பற்படும் பகுதியிலுள்ள பெண்களை எவ்வாறு நடத்துமாறு கூறுகிறது என்றால் அது நாகரீக உலகமே வெட்கித்தலைகுனிய வேண்டியவிடயம். இதற்கு வேறு விளக்கம் கூறுவோர் தயவுசெய்து முகமது படையினரின் வரலாற்றினையும், முகமது வழிநடத்தலையும் ஓரு முறை திரும்பிப்பார்ப்பது நல்லது. இதன் நீட்சியே இன்றைய IS பயங்கரவாதிகளின் பாலியல் கொடுமைகள். இதே வசனத்தினை (4:24)அடிப்படையாகக்கோண்டே சவூதியிலிருந்து சடலங்களாக திரும்பிவரும் வீட்டுப்பணிப்பெண்களின் (அடிமைப்பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் ) விடயத்தினையும் நோக்கவேண்டும். பெண்களின் நிலமை மிக மோசமாக உள்ள நாடுகளின்(UNDP Gender-related development index)பட்டியலில் 80வீதத்திற்கு அதிகமான நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகவிருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல.

பொதுவாக மதக்கலவரங்களின் போது பாதிக்கப்படும் முக்கிய பகுதியினராக பெண்கள் காணப்படும்போதும், அவர்களை ஒடுக்குவதில் மதங்களிற்கிடையில் முரண்பாடு எதுவமேயில்லை.

பெண்கள் கடந்துவந்தபாதை:

soviet_women_flagபெண்கள் இன்னமும் பால்நிலை சமத்துவத்திற்கு வெகு தொலைவிலேயே உள்ளனர் என்பது எவளவு உண்மையோ , அந்தளவு உண்மை அவர்கள் இரு நூற்றாண்டிற்கு முன்னர் இருந்தநிலையிலிருந்து வெகுதூரம் முன்னேறிவந்துள்ளனர் என்பதுமாகும்.. இந்த உலகளாவிய முன்னேற்றத்திற்கு இரு நிகழ்வுகள் காரணமாகக்காணப்பட்டன.

1.பிரென்சுப் புரட்சி- (இதன்பின் மதமானது சட்டவாக்கத்திலும், நடைமுறைகளிலும் தூரத்தே வைக்கப்பட்டது)

2. சோவியத்தின் சோசலிசப்புரட்சி- (இதன்போது மதத்தின் இருப்பே கேள்விக்குள்ளானது)

இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும் மோசமானதாகவே இருந்திருக்கும்.

பெண்களின் இன்றைய நிலை:

கடந்தகாலத்தினைப் பார்த்தோம். இப்போது நிகழ்கால நடைமுறைக்குக்கு வருவோம். அண்மையில் யுனெஸ்கோ ஆதரவில் UNDP இனால் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் வாழ்க்கைத்தரம், பெண்களின் உரிமைகள் தொடர்பான ஆய்வின்(UNDP Gender-related development index)முடிவில் ஒரு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அத்தரவரிசையில் அடிமட்டநிலையில் மோசமான நிலையிலுள்ள நாடுகளாவன முறையே ஆப்கானிஸ்தான், கொங்கோ குடியரசு, ஈராக், நேபாளம்(உலகின் ஒரேயொரு இந்துநாடு), சூடான், கௌதமாலா,மாலி, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சோமாலியா ஆகியனவாகும். இந்த நாடுகள் எல்லாவற்றையும் நோக்கினால் பொதுவான அம்சம் யாதெனில் இவற்றில் மதரீதியான சட்டங்கள் , மதப்பாரம்பரியங்கள் என்பன கடுமையாகப் பின்பற்றப்படுவதே அப் பொதுவான இயல்பாகும்.

உதாரணமாக சவூதியினை எடுத்துக்கொண்டால் அது செல்வந்த நாடாகக்காணப்பட்டபோதும் இப் பட்டியலில் மோசமான நிலையில் காணப்படுவதற்கு மதத்தின் பங்களிப்பே முக்கியகாரணமாகும். அதேபோன்று அப்பட்டியலில் சிறப்பான நிலையிலுள்ள நாடுகளினை (முறையே ஐஸ்லாந்து, நோர்வே, அவுஸ்ரேலியா, கனடா, அயர்லாந்து, சுவீடன், சுவிஸ்லாந்து, யப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ்)எடுத்துக்கொண்டால் இவற்றில் மதரீதியான சட்டங்கள்,பாரம்பரியங்களை விட பொதுச் சிவில் சட்டத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.எனவே இந்த தரவரிசைப்பட்டியலானது மதப்பாரம்பரியங்களிற்கும் பெண்களின் வாழ்கைக்குமுள்ள நேரடித்தொடர்பினை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

முடிவு;

french imageமுடிவாகக்கூறுமிடத்து மதங்களானது ஆணாதிக்கவாதிகளால் பிற ஆதிக்க நோக்கங்களுடன் பெண்ணடிமைத்தனத்தினையும் நிலைநாட்டும் நோக்குடனேயே தோற்றுவிக்கப்பட்டன. மதப்புனிதநூல்கள் , மதப்பாரம்பரியங்கள் என்பவும் இவ்வாதிக்க நோக்கத்துடனேயே தோற்றுவிக்கப்பட்டன. மதப்பிற்போக்குத்தனத்தினை உடைப்பதன் மூலம் மட்டுமே பெண்விடுதலை சாத்தியமில்லைத்தான், ஆனால் இந்த மதப்பிற்போக்குத்தன மறுப்பின் மூலம் பெணவிடுதலைக்கான முக்கிய ஒரு தடைக்கல் உடைக்கப்படும். இந்த உண்மையினை உணராதவ ரையில் மார்ச்-8 மகளிர் தினங்கள் வெறும் சம்பிரதாயச்சடங்குகளாகவே அமையும்.

14 thoughts on “மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்”

 1. ஆணும் பெண்ணும் இயற்கையிலேயே வேறுபட்டவர்கள். உதாரணமாக பிள்ளைபேறு, மூளையின் அளவு, உடல்பலம். அதனால்தான் விளையாட்டுக்களே(100 meter run- men & women ) தனித்தனி. இதில் மதங்களில் தவறு இல்லை.

  1. உடலமைப்பிற்கும் உரிமைகளிற்கும் தொடர்பு இல்லை, அப்படிப்பார்த்தால் வெள்ளை நிறத்தோலிற்கு ஒரு நியாயம், ஏனையோரிற்கு நியாயம் என்பதும் உடலமைப்பு தொடர்பானதே. மூளையின் அளவிற்கும் செயலிற்கும் தொடர்பில்லை. பெண் சமத்துவத்திற்கும் மதத்திற்கும் இன்றும் வெகுதூரம்.

 2. எல்லா மதங்களைப் பற்றியும் பேச எனக்குத் தகுதியில்லை. ஆனால் மதமே பால் அடக்குமுறையை அல்லது சமத்துவமின்மையை ஆதரிப்பது என்பது வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு நடந்து கொள்வது என்பது வேறு.
  இந்து மதத்தில் பெண்அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கதைகள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துங்கள். பிரேமானந்தா நித்தியானந்தாவை வைத்து இந்து மதத்தை அளவிட வேண்டாம்.
  கிறிஸ்தவத்தில் ஆதமிடமிருந்து பெண் பிரித்தெடுக்கப்பட்டு இன்னெரு உயிராக்கப்பட்டாள் என்றும் ஒரு விளக்கம் உண்டு. இதற்காக பெண் தாழ்ந்தவள் என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா?
  துன்பத்தில் பிள்ளை பெறுவாய் என்பதைப் போலவே துன்பப்பட்டு சம்பாதிப்பாய் என்று ஆணுக்கும் கூறப்பட்டுள்ளது. இதனை ஆண் துன்பப்பட்டு சம்பாதிக்க பெண் சும்மாயிருந்து தின்பாள் என்று பொருள் கொண்டால் அது ஆண் அடிமைத்தனமாகிவிடும்.
  மற்றப்படி மேற்கு நாடுகளோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளோ இந்தியாவோ கொள்வதற்கு மதங்கள் காரணமல்ல. அப்படிப்பார்த்தால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் யுனியன் சூறையாடியதற்கும் “புரட்சி”யை ஏற்றுமதி செய்ததற்கும் மார்க்ஸிசமே காரணம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டதாகி விடும்.

  1. @ a voter, இந்து மத நூல்கள் எவ்வாறு பெண் ஒடுக்குமுறையினை ஆதரிக்கிறது என்பதனை உரிய சான்றுகளுடன் இனியொரு வெளிப்படுத்தியுள்ளதே. கிருஸ்ணரின் செயலிற்கும் நித்தியானந்தாவின் செயலிற்கும் என்ன வித்தியாசம்? .மேலும் துன்பத்தில் சம்பாதிப்பாய் என்பது இரு பாலாரிற்குமே பொருந்தும், எனவே அது எவ்வாறு ஆண் ஒடுக்குமுறையாகும் ,அது உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறையாகக்கொள்ளலாம். அதுசரி குளோரபாம் மருந்திற்கு திருச்சபை எதிர்த்தது எந்த நியாயம். அது சரி சூரிய மைய கண்டுபிடிப்பு விவிலியத்திற்கு மாறானது என்று கூறி புருனோ என்ற விஞ்ஞானியினை உயிருடன் எரித்த திருச்சபையல்லவா?

 3. இந்து மதத்திலுள்ள கருத்துகள் பால் சமநிலைக்கு எதிராக இருப்பதை இனிஒரு சுட்டிக் காட்டியிருப்பது உண்மைதான். ஆனால் தம்மைத்தாமே சாமிகள் என்று அமைத்துக் கொள்பவர்களை வைத்து மதத்தை எடை போடுவது தவறு. இது கிறித்தவ அமைப்புகளிற்கும் பொருந்தும்.
  பைபிளில் துன்பத்தில் வியர்வை சிந்தி உழைப்பாய்; நிலம் தனது பலனைத் தர மறுக்கும் என்பது ஆணை நோக்கித்தான் கூறப்பட்டது. இன்னும் கூறப்போனால் கடவள் தடைசெய்த கனியைப் புசித்ததால் (பெண்ணும் புசித்தாள். ஆனால் ஆண் புசித்த பின்னரே) இந்த சாபங்கள் வருவதாக பைபிள் கூறுகின்றது. இந்த இடத்தில் ஆணைவிட பெண் தாழ்ந்தவளாக கூறப்படவேயில்லை. பின்னர் வந்தவர்கள் தமது கருத்துகளைத் திணித்து அப்படியான நிலையை ஏற்படுத்த முயற்சித்தனர்.
  இதுதான் மார்க்சியத்திலும் நடந்தது. சோவியத் தனது பாதுகாப்பிற்காக பல நாடுகளிற்குப் படைகளை அனுப்பி அதற்குப் புரட்சி என்று பெயரிட்டது. இன்றும் ஸ்டாலின் மாவோ உட்பட பலர் செய்த தவறுகள் வெளிப்பட்டுள்ளன. இதனை மார்க்சியத்தின் தவறாக ஏற்றுக் கொள்வீர்களா அல்லது தனிநபர்களின் தவறாகக் கருதுவீர்களா?
  பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை திருச்சபை நிராகரித்ததுடன் படுகொலையும் செய்துள்ளது. இதனைத் தவறு என்று அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம் அவற்றை அன்று தலைமையில் இருந்தவர்களின் தவறாக அவர்கள் காட்டுகின்றார்கள்.
  ஒரு மதத்தைத் தவறென்று சொல்வதற்கு அது கூறும் தத்துவத்தைத் தவறென்று எண்பிக்க வேண்டும். மார்க்சியத்தைத் தவறென்னு கூற அது கூறும் சுரண்டல் தத்துவத்தையோ வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையோ தான் தவறென்று எண்பிக்கவேண்டுமேயன்றி லெனின் தண்ணியடித்தார் ஆகவே மார்க்சியம் தவறானது என்று கூறுவது எள்ளப்படத்தக்கது.
  நித்தியானந்தாவையோ கடந்த காலத் திருச்சபைத் தலைவர்களையோ வைத்து அவர்கள் சார்ந்த அமைப்புகளை அமைப்புகளை அளவிடுவது பொல்பொட்டை வைத்து மார்க்சியத்தை அளவிடுவதற்கு சமனானது.

 4. இன்னொரு விடயம்: இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல. இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டுப் டையெடுப்புகளிற்கு எதிராகச் சகல இந்தியர்களையும் இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டு. இந்தக் கூட்டு ஏற்பட முன் பல மதங்கள் இருந்தன. அவற்றிடையே முரண்பாடுகளும் இருந்தன. (சைவம் சமணம் பௌத்தம் வைணவம் )

  1. நித்தியானந்தா போன்ற நபர்களைக்கொண்டு இந்துசமயம் மதிப்பிடப்படவில்லை, மாறாக மத நூல்கள் எவ்வாறு இவர்கள் முன்னுதாரணமாக பயன்படுத்தப்படுமளவிற்கு படைக்கப்பட்டுள்ளன என்பதையே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதுவே ஐ எஸ் பயங்கரவாதிகளிற்கு குரான் முன்னுதாரணமாகவுள்ளது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
   மேலும் வியர்வை சிந்தி உழைப்பாய்; என்பது ஆண்களை மட்டுமே குறிக்கிறது என்ற உங்கள் வாதப்படி பார்த்தாலும் அதுவும் ஒரு பெண் ஒடுக்குமுறையே . எவ்வாறெனில் ஆண்களிற்கு மட்டுமே உழைப்பு உரிமை என்பதும் ஒரு பெண் ஒடுக்குமுறையே.
   அந்தகாலம், இந்தகாலம் என்ற சப்பைக்கட்டுக்கள் சரிவராது. புனிதநூல்கள் கடவுளால் அருளப்பட்டவை என மதங்கள் கூறுவதால் அவை எக்காலத்திற்கும் பொருத்தமாகவே இருக்கவேண்டும்.

 5. 1. நித்தியானந்தா போன்ற நபர்களைக்கொண்டு இந்துசமயம் மதிப்பிடப்படவில்லை, என்றால் கிறிஸ்தவ மதத் “தலைவர்களைக்” கொண்டு கிறிஸ்தவ மதம் மதிப்பிடப்படுவது ஏன்?
  2. பைபிளில் ஒரு கட்டத்தில் முழு மனித இனமே கடவுளால் சபிக்கப்பட்டது. அதில் பெண் பிள்ளை பெறுவதும் ஆண் உழைப்பதும் அடங்கும். ஆனால் ஆண் மட்டும் தான் உழைக்கவேண்டும் என்று பைபிளில் எங்குமே கூறப்படவில்லை. உழைப்பு ஒரு உரிமையாக பைபிளில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்களே சொல்லவேண்டும்.
  3. பைபிளின் படி கடவுள் காலத்திற்கு அப்பாற் பட்டவர். ஆனால் காலத்திற்குள் இறங்கி வேலை செய்பவர். சில கட்டளைகள் சில காலத்திற்கும் சில மனிதர்களிற்கும் வழங்கப்பட்டன. இதுபற்றி அறிய நீங்கள் பைபிளை முழுமையாகப்படிக்க வேண்டும்.
  4. குரான் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. ஏனென்றால் அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.

  1. 1.கிறிஸ்தவ மதத்தலைவர்கள் மட்டும் கவனத்தி்ல்கொண்டு கிறிஸ்தவம் மதிப்பிடவில்லை. வைபிளின் பல
   வசனங்கள் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளதே
   2.”பெண் பிள்ளைப்பெறுவதும், ஆண் உழைப்பதும் அடங்கும்” என்று நீங்கள்தானே கூறுகிறீர்கள். உழைப்பு பெண்ணிற்கும் பொது என்று நீங்கள் கூறவில்லையே. இதன் மறுபக்கம் உழைப்பின் மூலமான வருமானமும் பெண்களிற்கில்லை, பெண்கள் வருமானத்திற்கு ஆண்களில் தங்கியிருக்கவேண்டும் என்பதுதானே உங்களது கருத்தின் உட்கிடை
   3.வைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள புவிமையக்கொள்கை, புவி தட்டைவடிவானது போன்ற கருத்துக்கள் எக்காலத்திற்கு பொருந்தும்?

 6. உங்கள் அரைகுறை அறிவை வெளிப்படுத்துகின்றீர்கள். எல்லா மதங்களையும் ஒருவரால் அறிய முடியாது. ஆனால் அறியாத விடயங்களில் வாதம் செய்ய வேண்டியதில்லை.
  1. எனது வாதமே எந்த மதத் தலைவர்களதும் செயல்கள் மதத்தை அளவிடப் பயன்படத்தக் கூடாது என்பதே.
  2. நான் சொன்னது; “ஆண் மட்டும் தான் உழைக்கவேண்டும் என்று பைபிளில் எங்குமே கூறப்படவில்லை” உங்கள் பதில் “உழைப்பு பெண்ணிற்கும் பொது என்று நீங்கள் கூறவில்லையே”
  3. பைபிளில் எங்கே புவி மையக் கொள்கை புவி தட்டைவடிவானது போன்ற கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

  கட்டுரையாசிரியருக்கு;
  ஆணின் மகிழ்சிக்காகவே பெண் படைக்கப்பட்டாள் என்ற பகுதி நீங்கள் தந்த பைபிள் பகுதியில் இல்லை.

  Genesis 3:16
  https://www.biblegateway.com/passage/?search=Genesis+3:16&version=NET

  Genesis 2:18-20
  https://www.biblegateway.com/passage/?search=Genesis%202:18-20&version=NET

  Luke1:41
  https://www.biblegateway.com/passage/?search=Luke%201:41

  Luke 18:15
  https://www.biblegateway.com/passage/?search=Luke%2018%3A15-17&version=NET

  1. ஆணின் தனிமையினை போக்குவதற்கே துணையாகவே பெண் படைக்கப்பட்டாள். இதுதான் பெண் அடிமைத்தனம்
   Genesis 2:18New International Version (NIV)
   18 The LORD God said, “It is not good for the man to be alone. I will make a helper suitable for him.”

   o There are three glories specified in this passage: man (who is God’s glory), woman (who is man’s glory), and the woman’s hair (which is her own glory). Keeping these three glories in mind is critical to understanding the meaning of Paul’s prescription. Specifically, the woman’s hair is given to her both as a covering and as a glory (both are mentioned in verse 15. Consequently, the covering Paul mandates in verse 10 covers two glories: the woman’s glory (her hair) and the woman’s head (for she is man’s glory). Only the man (God’s glory) is uncovered.

   கிறிஸ்தவ புவிமையக்கொள்ளை
   Geocentric is suggested in several Biblical passages, depending on how these passages are interpreted. In order of appearance, the verses are:
    Joshua 10:12-13: On the day the LORD gave the Amorites over to Israel, Joshua said to the LORD in the presence of Israel: “O sun, stand still over Gibeon, O moon, over the Valley of Aijalon.” So the sun stood still, and the moon stopped, till the nation avenged itself on its enemies, as it is written in the Book of Jashar. The sun stopped in the middle of the sky and delayed going down about a full day.
    1 Chronicles 16:30: Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
    Psalm 19:6: It [the sun] rises at one end of the heavens and makes its circuit to the other; nothing is hidden from its heat.
    Psalm 93:1: The LORD reigneth, he is clothed with majesty; the LORD is clothed with strength, wherewith he hath girded himself: the world also is established, that it cannot be moved.
    Psalm 96:10: Say among the heathen that the LORD reigneth: the world also shall be established that it shall not be moved: he shall judge the people righteously.
    Psalm 104:5: (Bless the LORD . . .) Who laid the foundations of the earth, that it should not be removed for ever.
    Ecclesiastes 1:5: The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose.

   புவி தட்டை
   1 Chronicles 16:30: “He has fixed the earth firm, immovable.”
   Psalm 93:1: “Thou hast fixed the earth immovable and firm …”
   Psalm 96:10: “He has fixed the earth firm, immovable …”
   Psalm 104:5: “Thou didst fix the earth on its foundation so that it never can be shaken.”
   Isaiah 45:18: “…who made the earth and fashioned it, and himself fixed it fast…”
   Suffice to say that the earth envisioned by flat-earthers is as immovable as any geocentrist could desire. Most (perhaps all) scriptures commonly cited by geocentrists have also been cited by flat-earthers. The flat-earth view is geocentricity with further restrictions.

   1. சுயமாக எழுதப் பழகவும். Please read the passages you have specified and identify whether they really mean anything. Additionally, when reading from places, cross check and use rational thinking to decide whether it is correct.

    1. The word “helper” comes from a translation. Check with scholars on the original Hebrew word and its meaning. It does not mean assistant.
    2. Who told you that the Tamil word for glory is “மகிழ்ச்சி”? “மகிமை” is the right word.
    3. “Geocentric is suggested in several Biblical passages, depending on how these passages are interpreted” This is from your words. That is exactly what I said. Remember it is only an interpretation. It is not directly mentioned in the Bible, but people interpreted it that way. By the way, the words “depending on these passages” show you just copied from some site,
    4. None of the passages you use suggest that earth is the center of universe.
    5. Some words like “earth is fixed” is actually translated into established in many places.
    example: 1 Chronicles 16:30 “Tremble before him, all the earth!
    The world is firmly established;….” (This is from the same NIV you were quoting)
    There are passages state earth is round. Please read the Bible to quote. Not other passages.

    1. ” glory” தமிழில் மகிழ்ச்சியினைக் குறிக்கும். புவி மையக்கொள்கையினை புருனோவினை உயிருடன் எரித்தபோதும், கலிலியோவினை மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்தபோதும் கூறியிருக்கலாமே. இதனை செய்தது தனி மனிதர்கள் அல்ல, மாறாக திருச்சபையும், போப்புமே, அப்போது எந்த மதவாதியும் வாயே திறக்கவில்லையே. எங்கே போனது மனிதாபிமானம். கோடிக்கணக்கான ஆண்டுகளாக பல மாற்றங்களிற்குள்ளாகி பரிணாம வளர்ச்சியில்
     பூமியில் வந்த மனிதனை உங்களது வைபிள் ஆறு நாட்களில் பூமியினைப்படைத்துவிட்டு ஏழாவது நாள் ஒய்வு எடுத்தார் என பீலா விடும் கூட்டம் சுயசிந்தனை, அரைகுறை அறிவினைப் பற்றி எல்லாம் எழுதுவது வியப்பாக உள்ளது.

 7. Glory என்ற சொல் pride, pleasure இரண்டு பொருள்படவும் வரும். எவ்வாறாயினும் man is glory of God, woman is golry of man என்ற வார்த்தையில் கடவுளிற்கு அடுத்தபடியில் ஆணும், அதற்கு அடுத்த படியிலேயே பெண்ணும் உள்ளாள். அது பெண் ஒடுக்குமுறைதானே.
  வைபிளில் பூமி தட்டை என்று குறிப்பிடப்படவில்லையா இதனை போப்பிற்கும், திருச்சபையிற்கும் முதலிலேயே கூறியிருக்கலாமே அவர்கள் வீணாக கலிலியோவினை துன்புறுத்தியிருக்கமாட்டார்கள் அல்லவா. இதற்காகத்தான் இந்துமதம் ஒரு புத்தகத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதில்லை.

Comments are closed.