சத்தியப்பிரமாணம் செய்யும் போதே பிரிவினையைத் தூண்டிய புதிய பிரதமர் ரனில்

ranil-wickremesinghe-swornஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நாட்டைப் பிரிப்பது தொடர்பாக பொதுவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை பிளவடைந்துவிடும் என மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பிரச்சாரம் சிங்கள மக்களால் கூட நிராகரிக்கப்பட்டது. அவ்வாறிருந்த போதும் பிரிவினை தொடர்பான கருத்தை ரனில் விக்ரமசிங்க பிரதானப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

இலங்கையில் பிரிவினையத் தடுக்க வேண்டுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறுவதற்கு அரசியல் தலைமைகள் இல்லை.

இலங்கையிலுள்ள மலையக, வடகிழக்கு மற்றும் முஸ்லீம் தமிழர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் தேசங்கள் இணைந்த பரஸ்பர சந்தேகங்களற்ற கூட்டாட்சி ஏற்படும்.

SRI-LANKA-ranilஇலங்கையில் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் போன்ற பேரினவாதிகளாலோ அன்றி தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கி பாராளுமன்ற கதிரைகளைக் கையகப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலோ இக் கருத்துக்களை முன்வைக்க முடியாது,

தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்துப் பிரிவினையைத் தூண்டுவது ரனில் போன்ற பேரினவாதிகளே.

காலனியாதிக்கத்திற்குப் பிந்தய காலம் முழுவதும் இலங்கையைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் நோக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளே சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமையை மறுத்துவந்தன. அவ்வாறு மறுப்பதன் ஊடாக பிரிவினைத் தீயை எரியவிடன. அதுவே உரிமைக்கான போராட்டமாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் எழுந்தது,

5 thoughts on “சத்தியப்பிரமாணம் செய்யும் போதே பிரிவினையைத் தூண்டிய புதிய பிரதமர் ரனில்”

 1. Ranil’s stand is perfectly correct. For all purposes stop this nonsense: right to secede. Let us live together forever.

 2. இரண்டு பத்திரத்தில் – ஒன்று பிரதமர் பதவி – அடுத்தது சத்திய பிரமாணம். சத்திய பிரமாணத்தில் நாட்டை பிரிப்பதில்லை என ஒரு வரி உண்டு. இதை பல காலமாக இருக்கிறது.

  1977 தேர்தலுக்கு பின் என நினைக்கிறேன் தமிழர் விடுதலைக் கூட்டணி சத்யபிரமாணம் எடுக்காமல் இருந்து – பின்னர் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

  இது ரணில் எழுதி வாசித்தில்லை.

 3. இன்னும் சிலர் நடக்காத கனவுகளோடு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்பதே இப்போதைய நிலை. 13வது திருத்தச் சட்டமும் அதுதான். பெடரல் என்பது பிரிவினை அல்ல. சுவிசில் இருப்பதும் – Germanyயில் இருப்பதும் பெடரல்தான். பெடரல் என்றால் என்ன என்று தமிழரோ – சிங்களவரோ உணரவில்லை. அதை தலைவர்களும் விளக்கவில்லை. விளக்குவதும் இல்லை. உலகின் அநேக நாடுகளில் பெடரல் முறையில்தான் ஆட்சி நடக்கிறது. பெடரல் என்பதை தனி நாடாக நினைப்பது அறிவீனம்.

  https://www.ch.ch/en/swiss-federalism/
  https://en.wikipedia.org/wiki/States_of_Germany

  இவை நாடு பிரிந்ததாக கருத்தாகாது.

 4. ஐயோ ஐயோ… இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் உறுப்பினராகச் செயலாற்றும் எவரும் இடதுசாரி வலதுசாரி என்ற வேறுபாடின்றி தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற வேறுபாடின்றி 6ம் திருத்தத்திற்கு அமைவாகச் சத்தியப்பிரமாணம் செய்தேயாக வேண்டும்.
  இன்னும் சில நாட்களில் பிரிவினையைத் தூண்டும் சம்பந்தன் – பிரிவினையைத் தூண்டும் சுமந்திரன் – பிரிவினையைத் தூண்டும் மகிந்த ஆகிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

Comments are closed.