இராணுவத்தை வெளியேற்றமாட்டோம் மாறாக மதிப்பளிப்போம் : ரனிலின் பேரினவாத அச்சுறுத்தல்

ranilவன்னி இனப்படுகொலையில் சாரி சாரியாக மனிதப் படுகொலைகளை நடத்திய இராணுவம் தான் கொன்று போட்டவர்களின் பிணக் குவியல்களின் மேல் குடியிருக்கிறது. வடக்கிலும் கிழக்குல் இராணுவம் நிலை கொண்டிருப்பது இலங்கையின் ஏனைய பகுதிகளில் நிலை கொண்டிருப்பதைப் போன்றதல்ல. பொதுவாக இலங்கையின் எந்தப் பகுதியிலுமிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது என ரனில் தெரிவித்துள்ளார். பேரினவாதிகளின் நேரடி அச்சுறுத்தல் தொடர்வதையே ரனிலின் கருத்துக்கள் காட்டுகின்றன.

இராணுவ மயப்பட்டுள்ள இலங்கையில் இராணுவத்தை கவுரவத்துடன் நடத்துவோம் எனக் கூறியுள்ளார். தமிழ்ப் பேசும் மக்கள் உட்பட இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் இராணுவமும் அரச படைகளும் மனிதர்களாக மதிப்பதில்லை. இந்த நிலையில் இனப்படுகொலை இராணுவத்தைக் கவுரவப்படுத்துவதாகக் கூறும் இலங்கையின் பிரதமர் ரனில் பேரினவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் இராணுவத்தினர் அகற்றப்பட மாட்டார்கள் என்றும் கடந்த காலத்தினை போலன்றி எதிர்காலத்தில் இராணுவத்தினர் கௌரவமாக நடாத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் 83 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற யுத்தத்தை தற்போது நிறைவுக்கு கொண்டு வந்ததில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ள நிலையில் கடந்த அரசாங்கம் இராணுவத்தினரை உரிய முறையில் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிலமையை, மைத்திரி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இல்லாது ஒழிப்போம் என உறுதி அளித்தது போல் இராணுவத்தினருக்கான உரிய மரியாதை இனிவரும் காலங்களில் சரியாக வழங்கப்படும். அவர்களுக்குரிய வேலைகள் பகரிந்தளிக்கப்படும் என்றார்.