ராம்குமார் என்ற அப்பாவியைச் சித்திரவதை செய்து கொன்ற போலிஸ் கூலிப்படை :வெளியான ஆதாரங்கள்

swathi1சுவாதி கொலை வழக்கின் சந்தேக நபரான ராம் குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்’ என்று நுகர்வு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி அறிவுக் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்புச் செய்தி கடந்த நாளை ஆக்கிரமித்துக்கொண்டது. சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போராடுகிறது என்ற பல்தேசிய வர்த்தக ஊடகங்களின் கருத்தை செய்தியாக்கி வெளியிடும் அதே ஊடங்கள் சுவாதியையும் ராம் குமாரையும் இன்னும் பல நாட்களுக்கு கொலை செய்துகொண்டேயிருக்கும்.

சுவாதி என்ற பெண்ணின் கொலைக்கு எந்த வகையிலும் தொடர்பற்ற ராம் குமாரைக் கைது செய்த தமிழ் நாடு போலிஸ் அவரை சிறை வளாகத்தினுள் கொலை செய்துவிட்டு தற்கொலை என மக்களை நம்பவைத்திருக்கிறது என்ற ஆதாரங்கள் ஆங்காங்கு வெளிவந்துகொண்டிருக்கின்றன.

2010 ஆம் ஆண்டின் பின்னர்  உலகமயமாதல் தனது உச்சத்தை எட்டிய பின்னர், அதன் இறுதிக் கட்டம் பல போர்களையும் சமூக முரண்பாடுகளையும் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. இந்தியா போன்ற நாடுகளில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகாரவர்க்கம் தனது சமூக இருப்பை உறுதி செய்துகொள்ள முற்பட்டதன் கோரமே இதுபோன்ற   கொலைகளதும் அரசியல் பகைப்புலம்.

இந்திய பார்பனீய அதிகாரவர்க்கத்தின் கூலிப் படைகளான போலிஸ் கிரிமினல்களே சுவாதியின் கொலையளிகளைக் காப்பாற்றும் நோக்கில் நடத்திய கொலை வெறியாட்டத்தில் ராம்குமார் என்ற அப்பாவி பலியானார் என்ற தகவல் தமிழச்சி என்ற பிரான்சில் வசிக்கும் ஒருவர் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட பரபப்பு ஊடகங்கள் புதிதாக ஊடக மொழியாக்கம் செய்து செய்திகளை வெளியிட்டன.

இலங்கையில் தேசியம் என்ற பெயரில் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதாகக் கூறும் தலைவர்களும் ஊடகங்களும் வேளாள ஆதிக்க சாதி வெறியை மௌனமாக அங்கீகரித்துக்கொண்டிருக்க தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யபடும் சீரியல் கலாச்சாரம் அந்த வெறியை ஆழப்படுத்தும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

தமிழச்சி வெளியிட்ட ஆதாரங்கள்:

சுவாதி படுகொலை விசாரணையில் இன்னும் பல கொலைகள் தொடரும். அது ராம்குமாரோடு முடியாது!

—————–

சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது.

முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது.

காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி.

“தேவர் பேரணி மாடசாமி பில்டிங் காண்ரக்டர் இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம்.

சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு.

இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் அவரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன்.

நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

முத்தூர் வாசிகளே!

உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி.

ஒருவேளை இவனெல்லாம் ‘அப்ரூவர்’ ஆனால் கூட காவல்துறையே தற்கொலை செய்துவிடும்.

பொதுமக்கள் செய்தால் தான்டா கொலை.
அதையே காவல்துறை செய்தால் தற்கொலைடா.
இதுதாண்டா தற்போதைய தமிழ்நாட்டு போலிஸ் பாணி.

இந்த அரசியல் புரியலன்னா உன் மரணமும் தற்கொலையில் தான்டா முடியும்!

(பி.கு: இப்படி ஒரு நபர் அந்த ஊரிலேயே இல்லை என்றும் செய்திகள் வரும். அதையும் நாம் பார்ப்போம்)
#தமிழச்சி
18/09/2016
சுவாதி படுகொலை / ராம்குமார் படுகொலை – சிபிஐ விசாரணை தேவை.
————
swathiஇராயபேட்டை அரசு மருத்துவர், படுகொலை செய்யப்பட்ட இராம்குமார் உடல் பரிசோதித்து அளித்த மருத்துவ சான்றிதழில்,
“ராம்குமார் இடது கண்ணில் காயம், இடது மார்பில் காயம், இடது கையில் காயம்” என்று குறிப்பிட்டுள்ளார். காயத்தின் அடையாளம் மற்றவரின் தாக்குதல் காரணமாக ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை” என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மீண்டும் சமூக ஆவலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
#தமிழச்சி
18/09/2016
#RamkumarSuicide #swathimurdercase #Swathi