இலங்கையின் கொலைக்களம் இப்போது இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இலவசமாக பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் திரையரங்குகளில் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் கலம் மக்ரே இந்த முடிவிற்கு வந்துள்ளார். இலங்கை அரசுடனான நட்பைப் பாதிக்கும் என்றும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும் காட்சிகளைக் கொண்டது என்ற அடிப்படையிலும் இத்தடையை இந்திய திரைப்படக் கட்டுப்பாட்டகம் விதித்தது. ‘உண்மைகளைக் கட்டுடைப்பதற்கான அரசியல் தடை’ என இத் தடையை விமர்சித்துள்ள தயாரிப்பாளர்கள், இலவசமாகப் அனைத்து மக்களும் பார்வையிடும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர்.
கீழ்வரும் இணைப்பின் ஊடாக ஆவணப்படத்தை முழுமையாகப் பார்வையிடலாம்.
http://nofirezone.org/watch
பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஊடக காட்சிப்படுத்தப்பட்ட இறுதி ஆவணம் புலிகள் மக்களை வெளியேற விடாமல் பணயமாகப் பயன்படுத்தினர் என்று கூறுவதால் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களால் முன்னிலைப்படுத்தபடவில்லை. தவிர, கலம் மகெரே, ஐ.நா மற்றும் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதில்லை என்றும் இந்த நாடுகளும் இணைந்தே இனப்படுகொலையை மேற்கொண்டன என்றும் கூறிவருவதால் பிந்தங்கிய ஏகாதிபத்திய சார்பு கொண்டவர்கள் -தாம் இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் எனக் கூறிக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள்- ஆவணப்படத்தை நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவினால் தலைமை தாங்கப்பட்டு, பேரினவாத முலாம் பூசப்பட்டு, இந்திய மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு நடத்தப்பட்ட இந்தத் தசாப்தத்தின் மிகப்பெரும் மனிதப்படுகொலையின் ஆவணம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.
No Fire Zone. It all came in the Daily Mirror. The Final Forward Defense Line held for weeks with heavy artillery firing round the clock. Now Sarath Fonseka can start talking about what happened at Mullivaikkal.