நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்: ஹில்டன் ஹோட்டலில் போர்க்குற்ற விசாரணை!

hiltonபராக் ஒபாமா பரஞ்சோதின்ர தவறணையில கள்ளடித்தால் சனம் என்ன நினைக்கும்? ‘மாண்பு மிகு’ மகிந்தவோ மைத்திரியோ மணியண்ணை கடையில பிளேன் டீ அடித்தால் இமேஜ் என்ன ஆகிறது? …இப்படியெல்லாம் ரூம் போட்டு சிந்தித்து சிறப்பான முடிவை எடுத்து ஹில்டன் ஹோட்டலில் ஹோல் எடுத்து இமேஜ் ஐ எகிற வைத்துள்ளார்கள் மாவீரர் பிசினஸ் கும்பல் ஒன்று!

ஹை புரபைல் தேசியம் எண்டால் காடு மேடுகளையே நடத்துறது? அதெல்லாம் குறுக்கால போன தேசியம் கண்டியளே! வைன் கோப்பையும், லைட் மியூசிக்கும் போட்டு ஐஞ்சு நட்சத்திர ஹொட்டல்ல தேசியம் நடத்துறதைப் போல வருமே?

குந்தியிருக்க குடிசை கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊனமுற்ற போராளிகள், சிதைந்து போன குடும்பங்கள், அனாதைகள் தெருவில நிற்கேக்க ஏன் இந்த ஹை புரபைல் தேசியம் எண்டு கேக்காதையுங்கோ. இதெல்லம் சும்மா ஒரு குசும்பிலதான் இவையள் நடத்தீனம் எண்டு குளம்பாதையுங்கோ.

எல்லாம் விசையத்தோட தான் பாருங்கோ.

சந்திரனில முதல்ல கால் வைத்தவனுக்கு மேல் இண்டைக்கும் கை வைக்க ஏலாது தெரியுமோ? மூக்கிலை மட்டுமல்ல மூக்குக்கு உள்ளையும் விரலை வைச்சு வியக்கிற மாதிரி மாவீரர் பிசினசை ஓகோ என்று லாபத்தில நடத்திக்காட்டின ரீசீசீ கொம்பனிக்கு மேல ஒருத்தரும் கைவைக்க ஏலாது என்று நினைச்சால் தப்பு!

ரீசீசீ இன்ற பிசினசை முன் மாதிரியாகப் பின்பற்றி இப்ப புதிய வியாபாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எல்லாம் லெச்சுமி கடாட்சம் தான் கண்டியளே!

ஒரு காலத்தில ரீசீசீ இன்ற சுருட்டல்ல பங்கு இல்லையெண்டதும் தனியா இயங்கிய தலைமைச் செயலகம் இப்ப ரூம் போட்டு யோசித்ததில் ஹில்லடன் ஹொட்டலைப் போல தேசிய ஹொட்டல் இல்லை என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தனர்.

niranjanமாவீரர் துயிலும் இல்லம் என்ற கோயில் ஒன்றை கட்டி பனிக்கட்டிக்கு மேல உருண்டு உருண்டு பிரதட்டை பண்ண வெளிக்கிட்ட தலைமைச் செயலகம் அதன் அங்குரார்பண நிகழ்வை ஹில்டன் ஹொட்டலில் தடல் புடலாக வைன், சாராயம் மற்றும் லைட் மியூசிக் அண்ட் இறைச்சி வகைகள் சகிதம் கொண்டாடுகிறார்கள்.

வருங்காலத்தில ரீசீசீ தன்ர மாவீரர் தினத்தை தலைமைச் செயலகத்திடம் டெண்டருக்கு விட்டாலும் விடலாம்!

அவங்கள் மெத்தப் பெரியாக்கள் பாருங்கோ! பிசினஸ் அங்குரார்பண நிகழ்வு எண்டால் இப்படித்தான் இருக்க வேணும்! உந்த்த பாழாப்போன போன அப்பாவிச் சனம் அவங்கள் பிசினஸ் செய்யுறாங்கள் எண்டு தெரியாமல் நம்பி நடுத்தெருவில போகுதுகள்!

போகிற போக்கில்  மப்பு தலைக்கேற ஹில்டன் கோட்டல் கூரையில நிண்டு போர்க்குற்ற விசாரணை நடத்தினாலும் நடத்துவாங்கள்.

2 thoughts on “நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்: ஹில்டன் ஹோட்டலில் போர்க்குற்ற விசாரணை!”

  1. Anna neengalum avaikalukku melam adithathaga arinthom. een ungalukku pangu tharaatha kovamaa?

  2. இதுகள் திருந்தாது, எம் சனம் குளிரில் நடுங்கி நடுங்கி கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை சுருட்டிய குழுக்கள் ஓசிப் பணத்தை விடுமா, ஐரோப்பாவில் எத்தனை இளசுகள் இவங்களால் மனம் தொந்து திரிகின்றாங்கள் என்று யாருக்கு புரியும், தேசியம் என்று மரீனா ரீல் விட்டு மக்களிடம் பணத்தை சுருட்டி இவங்க நல்ல ஆடம்பரமாகவே அன்றும் இன்றும் இனி என்றும் வாழுவார்கள், வைன் விஸ்கி இறைச்சி குடித்து சாப்பிட்டு, மக்கள்தான் மிக கவனமுடன் இருக்கவேண்டும்,

Comments are closed.