Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்:தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்

இனியொரு... by இனியொரு...
01/24/2016
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

niranjanசும்மா சொல்லக்கூடாது கண்டியளோ! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!

வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.

முட்டாளோட எட்டாள் வந்தாலும் சமாளிக்க ஏலாது எண்டதுக்கு ஒரே உதாரணம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் தான் தமிழ் நாட்டுப்புற திருவிழாவாக(folk festival) கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில ,நாதஸ்வரமும் மேளமும் பாவிச்சு ஒரு மார்கழி கச்சேரி வச்சாங்கள்.கடந்த 10வருடமாக சிலம்பு நடத்தி வந்த பொங்கலை உடைத்து இந்த வருடம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சென்தனியில் வாழைகுழை கட்டி பொங்கல் செய்துள்ளது

பொங்கல் புக்கையில துட்டுவரும் என்றால் வாழக்குலை என்ன வாழைத் தோட்டத்தையே இறக்குமதி செய்து பொங்கல் வைக்க நமது சேர்க்கஸ் கொம்பனி தயார்!

உடைப்புகளை செய்வதில் தற்போது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை .தமிழ் சமுகத்தின் ஒற்றுமையை குலைத்து,சின்னாபின்னமாக்கி அவையின்ர காசில கையையும் வாயில மண்ணையும் வைக்கிறதுதான் இந்த TCCன்ர பிளான்.

இலண்டனில இருக்கிற பல அமைப்புகளும், பாடசாலகளும், பல்கலைகளகங்களும் பல வருடமா பொங்கல் நடத்திவருகினம் இந்த பொங்கல் நிகழ்வுகள் எல்லாம் தமிழ்மக்கள் கூடிமகிழ்ந்திருக்கும் ஒரு கலை ,கலாச்சார நிகழ்வாகவே நடந்தப்படுகிறது எனலாம்.

இந்த வருடம் புதிதாக நமது சேர்க்கஸ் கொம்பனியான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பொங்கல் பிசினஸ் 23ம் திகதியே நடந்தது. டெஸ்கோவில் மட்டுமா சேல் திகதி நீடிக்கப்படும், நாங்களும் போடுவமில்லை!

றால் போட்டு சூறா பிடிப்பது கேள்விப்பட்டிருக்கிறோம். புக்கை போட்டு சுறா பிடித்த கதை தெரியுமோ? அதற்கு இலவச ரெயினிங் வேணுமென்றால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள். ரீசீசீ நடத்திய தள்ளுபடிப் பொங்கலில் வடையும் புக்கையும் இலவசமாகப் போடப்பட்டது. தேத்தண்ணியிலிருந்து மிச்சமெல்லாம் துட்டூ! இவங்கட தேத்தணியை விட கோஸ்டா லாத்தே மலிவு கண்டியளோ.

தேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று தலையங்கம் வேற.

date-1024x724கடைகள், வியாபார நிறுவனங்களின் பனர்கள் பொங்கலின் புக்கைக்கு மேல் நிழலாக விழுந்து கொண்டிருந்தது. ஒரு விளம்பரத்திற்கு 100 பவுண்ஸ் தேசியக் கட்டணம் அறவிடப்பட்டு ரீசீசீ இன் தேசியப் பொக்கட்டுகளுக்கு தீனி போட்டது. என்ர நண்பர் ஒருவர் புலம்பெயர் தேசியக் கூத்துக்களைப் பயங்கரமாகத் திட்டும் ‘வீர நாக்கை’ கொண்ட பெருமையுடையவர். அவரே தேசியக் கட்டணம் கட்டி விளம்பரம் போட்டது எனக்கு புரியாத புதிராகவிருந்தது.  நேரத்தை மண்ணாக்கி அவருக்கு போன் பண்ணி கேட்டபோது தான் உண்மையின் தரிசனம் கிடைதது. தற்செயலாக் காசு மட்டும் கொடுக்கேல்லை எண்டால், துரோகி என்று கதைகட்டவே ரீசீசீ இன் விசேட சேவைப் பிரிவு களமிறங்கிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக போனாப் போகுதெண்டு 100 பவுண்சை கடாசி விட்டனான் என்றார்.

நண்றி உரை ஆற்றிய TCC இன் தேசியப் பேச்சாளர் சொன்னதின்ர சாராம்சம் என்னவேண்டா ‘மக்களே இந்தியாவில் யல்லிகட்டை தடைசேய்து விட்டார்கள் எண்டு கவலையடைய வேண்டாம் நாம் மல்லுகட்டு என்று ஒன்றை தொடங்கியுள்ளோம் இதில் நீங்களும் இணைந்து ஏனய தழிழ் அமைப்புக்கள் நடத்தும் விழாக்களை குளப்பி பணம் புடுங்கலாம் TCCன் இணைந்து பயணியுங்கள்’

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றுவதற்காக வட மாகாண சபை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்படுகிறது…

எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றுவதற்காக வட மாகாண சபை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்படுகிறது...

Comments 5

  1. தமிழ் பித்தன் says:
    10 years ago

    போன வருடம் தை பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வைபரில் அனுப்பினான்.அதில் கார்த்திகை பூ படம் போட்டு வாழ்த்து அனுப்பினான்.
    அதற்க்கு tcc நபர் ஒருவர் இது தேசிய பூ இதை பயன் படுத்துவது தவறு ஏன்று
    கூறினார்.ஆனால் இப்போது தேசிய தலைவரின் பதாகையும் ,பானைக்குள்
    தேசிய கொடியையும் வைத்து பொங்கல் பொங்கி உள்ளார்கள் ?

  2. Mathu says:
    10 years ago

    தமிழ்ப் பித்தன்,
    உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ ஆய்வு செய்து கண்டு பிடிக்கிறாங்கள். தமிழன் எண்டு ஆக்களைக் கட்டிவைச்சு நீங்கள் ஆய்வு செய்து நீங்கள் கண்டுபிடிச்சது என்ன? ஆகக் கூடி தமிழன் கண்டுபிடிச்ச ஒரே மிஷின் பாக்குவெட்டி! நீங்கள் இப்ப பானைக்கே கொடி வைக்கலாமா இல்லையா என்று ஆய்வு செய்கிறீங்கள். இது தான் இண்டைக்கு மக்களின்ட பிரச்சனை! நீங்கள் ஆய்வு செய்து முடிவுக்கு வரும் போது தமிழர்கள் இருக்க மாட்டார்கள். உங்களுக்கு அனியாயம் எல்லாத்தையும் விமர்சிப்பதற்கு எப்ப துணிவு வருகுதோ அப்பதான் நீங்கள் நியாயமான மனிதர்களாகக் கணிக்கப்படுவீர்கள். ஹிட்லர் அழிக்கப்பட்ட பிறகும் மக்கள் அவரின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். எல்லா அமைப்புக்களும் 20 வருசங்களாக ஜேர்மனியில் ஹிட்லர் ஆதரவாகவே இருந்தன. மக்கள் உண்மையைப் பேசப் பயந்தார்கள். இரடாவது தலை முறை தமது பெற்றாரைத் திருத்த வேண்டும் என்று தொடங்கிய போராட்டமே ஜேர்மனியைக் ஹிடலரின் சிந்தனையிலிருந்து ஒரளவு விடுவித்தது. ஒரு வேளை உங்களின் பிள்ளைகள் வளர்ந்து உண்மையைப் பேச வெளிக்கிடுவார்கள். அப்போது மாற்றங்கள் வரலாம். ஆனால் திருந்துவதற்கு தமிழர்கள் இருக்க மாட்டார்கள்!
    ரிசிசி மட்டுமா? நாடுகடந்த தமிழீழ்ம், பிரிஎப் கொண்டாடிய பொங்கல் விழா எல்லாம் ஒரே மாதிரித் தான் இருந்தது. எந்த வித்தியாசமும் இல்லை. பல உண்மைகளை புதைத்து இந்த குழுக்கள் எல்லாம் தமிழ் மக்களைப் பிரித்து மேய்கின்றன. அடுத்த சந்ததி இவர்களைப் பார்த்துக் காறித் துப்பும்!

    • Lala says:
      10 years ago

      மது , ஜேர்மனியில் இட்லரின் சிந்தனையை அடுத்த தலைமுறையிலாவது இல்லாமல் செய்து விட்டனர் . ஆனால் ரஷ்யா , சீனாவின் நிலைமை என்ன என்பதை வசதியாக மறந்து அல்லது மறைத்து விட்டீர்கள் . உலக வரலாற்றில் மிகப்பெரிய படுகொலையாளிகளாக அறியப்பட்ட ஸ்டாலினதும் , மாவோவினதும் சிந்தனைகள் இன்னமும் இருப்பது மட்டுமல்ல அவர்களது மனித குலத்திற்கெதிரான படுகொலைகளுக்கு இப்போதிருக்கும் சீன , ரஷ்ய அரசுகள் வெள்ளையடித்து வருகின்றன.

  3. thinesh says:
    10 years ago

    BJP Leaders Meet Sri Lankan Tamils Association & Social Representatives
    http://telo.org/?p=149925

  4. தமிழ் பித்தன் says:
    10 years ago

    கூரை ஏறி கோழி பிடிக்க இயலாதது எல்லாம் ,வய்குண்டம்
    போக அசை படுதாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...