மட்டக்களப்பு பிக்குவின் பின்புலம் : தேசப்பற்று அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்

nationalismisthelastweaponஇலங்கையைப் பொறுத்தவரை பேரினவாத ஒடுக்குமுறை சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலாக அந்த நாட்டின் ஒவ்வோர் அங்கத்திலும் ஊறிப்போயிருக்கிறது. சிங்கள பௌத்தத்தின் விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையின்றி சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்வதற்கு ஒப்புக்கொண்டால் அதனை நல்லிணக்கம் என அழைக்கிறார்கள். சிங்கள பௌத்த விரிவாக்கத்திற்கு எதிரன அரசியலை இலங்கை அரசு பிரிவினை என அழைப்பதன் ஊடாக தனது கருத்தியலை வலுப்படுத்திக்கொள்கிறது. இதன் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான சுய நிர்ணைய உரிமை கோரும் அரசியல் என்பது இலங்கையின் சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தை பலப்படுத்துவதாகவே இதுவரை முன்னெடுக்கப்படுவந்துள்ளது.

பிரிந்து செல்லும் உரிமையைக் கோருவதற்குப் பதிலாக பிரிந்து செல்வது மட்டுமே தமது நோக்கம் என்று ஆரம்பிக்கும் தமிழ்த் தேசியம் சிங்கள மக்களுக்கும் உலக மக்களுக்கும் தம்மை பிரிவினைவாதிகளாக இனம்காட்டுகிறது. ஒன்றோடு ஒன்று மோதுவது போன்று தோற்றப்பாட்டை வழங்கும் இரண்டு தரப்புக்களுமே தேசியவாதிகளோ தேசப்பற்றுக்கொண்டவர்களோ அல்ல. தேசியவாதம், தேசப்பற்று என்பன மக்கள் சார்ந்த அரசியலின் ஊடாக முன்னெடுக்கப்படாவிட்டால் அது ஆபத்தானவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக மாறிவிடும். தேசப்பற்று என்பது அயோக்கியர்களின் இறுதி ஆயுதமாகப் பயன்படும் என்பதை பலர் இதுவரை நிறுவியுள்ளனர்.

சிறீதரன், ஐங்கரநேசன், விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் என்ற வாக்குப் பொறுக்கிகளில் ஆரம்பித்து புலம்பெயர் நாடுகள் வரை தேசியத்தின் பெயரால் வாழ்வாங்கு வாழும் இன்றையை அயோக்கியத்தனம் இதற்கான உள்ளக உதாரணம். டொனால்ட் ரம்ப், மரீன் லூ பென் என்று ஆரம்பித்து ராஜபக்ச வரைக்கும் தேசப்பற்றின் பெயரால் அதிகாரத்திலுள்ள அனைவரதும் அயோக்கியத்தனமே இன்றைய உலகம்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற பௌத்த துறவின் தீவிர பௌத்த சிங்களப் பற்றும் வன்முறையும் அனைவரும் அறிந்ததே. பொலநறுவையிலிருந்து மட்டக்களப்புச் செல்லும் வழு முழுவதும் புத்தர் சிலைகளை அமைப்பேன் என்றும், மட்டக்களப்பை பௌத்தமயமாக்குவேன் என்றும் அறிக்கைவிடுத்த இத் துறவி பொலிஸ் படை பார்த்துக்கொண்டிருக்க கிராமசேவகர் ஒருவரைத் தாக்க முற்பட்டதும் அறிந்ததே.

மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடிமயர்த்த மேற்கொண்ட சட்டவிரோத முயற்சியை தடுக்க முயன்ற, கெவிலியாமடு கிராமசேவகர் உட்பட அரச அதிகாரிகள் மீது வன்முறையைப் பிரையோகித்த இத் துறவி தொடர்பான மேலதிக தகவல்களை இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் இத் துறவி, பொலிஸ் ஒருவரையே தனது பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்த முயன்றார் என்ற தகவல்களை அந்த இணையம் வெளியிட்டுள்ளது.

பிரிவினையையும், இனவாதத்தையும் சட்டவிரோதம் எனக் கூறும் இலங்கையின் நல்லிணக்க அரசு இத் துறவி மீது எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ள்வில்லைஎன்பதே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம், அதனை அயோக்கியர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதற்கு பௌத்த துறவி உதாரணம்பௌத்த துறவி போன்றவர்களை முன்வைத்து தமது வாக்கு வங்கியையையும், பணப்பையையும் நிரப்பும் தமிழ் தலைமைகள் இனவாதத்திற்கு உதாரணம்.

-நிவேதா