கார்ல் மார்க்ஸ் மீண்டுள்ளார் : தொழிற்கட்சியின் உச்சி மாநாட்டில்…

mcdonnell-inioruநேற்றய உலகம் எப்படியிருந்து, அதன் இன்றைய நிலை என்ன என்பவற்றை மட்டுமே உலகின் தத்துவவியலாளர்களும், அரசியல் வாதிகளும், அறிவு சீவிகளும் பேசிக்கொண்டிருந்தனர். முன்னைய உலகத்தின் மாற்றங்களிலிருந்து நாளைய எப்படியிருக்கும் என எதிர்வு கூறும் தத்துவத்தை கார்ல் மார்க்ஸ் உலகத்திற்கு வழங்கிய போது அதிகாரவர்க்கம் அதிர்ந்து போனது.

அடிப்படை உணவு முதல் கணனி வரைக்கும் உற்பத்தி செய்யப்படும் கருவிகளையும் அதன் முறையையும் ஒரு சில தனி நபர்களே சொந்தமாக வைத்திருக்கின்றனர். அவர்களே உலகை ஆட்சி செய்கின்றனர். 10 டொலர்களிலும் குறைவான விலையில் உற்பத்தி செய்யப்படும் கணனி 600 டொலர்களுக்கு அப்பாவி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை உற்பதி செய்பவர்கள் தமது இலாபத்தை அதிகரித்து மக்களிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொள்கின்றனர். உற்பத்தி செய்யும் கருவிகளை மக்கள் தமது சொந்தமாக்கிக் கொள்ளும் வழிமுறையை கார்ல் மார்க்ஸ் உலகத்திற்குக் கற்றுத் தந்தார். வரலாற்றுப் போக்கில் அது நடந்தே தீரும் என அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.

கார்ல் மார்க்ஸ் என்ற தனி மனிதனுக்கு எதிராக உலகம் முழுவதும் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உலகின் உளவு நிறுவனங்கள், அரச படைகள், அரசியல் வாதிகள் போன்ற அனைத்துத் தரப்பும் கார்ல் மார்க்ஸ் மீதும் அவரது தத்துவத்தின் மீதும் அருவருக்கத்தக்க தாக்குதல்களை மேற்கொண்டது.

மேற்கு நாடுகளின் பாடப்புத்தங்களில் கார்ல் மார்க்ஸ் ஜனநாயகத்திற்கு எதிரன தத்துவத்தை முன்வைத்தார் என குழந்தைகளுக்குப் போதித்தனர். அதனை தமது ஜனநாயகம் என அழைத்தனர்.

இன்று பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதையும் கொள்ளையிட்டு மக்களை ஒட்டச் சுரண்டி உலகின் பெரும் பகுதிய வறுமையின் விழிம்பிற்கு அழைத்துவந்துள்ளன.

இந்த நிலையில் கார்ல் மார்க்சிற்கு எதிரான அவதூறுகளைக் கேட்டே வளர்ந்த ஐரோப்பிய மக்கள் கூட கார்ல் மார்க்சைத் திரும்பிப்பார்கும் நிலை தோன்றியுள்ளது.

கடந்த வாரம் பிரித்தானியாவில் நடைபெற்ற பிரதான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் உச்சி மாநாட்டில் பேசிய நிழல் நிதித் துறைச் செயலாளர், ஜோன் மக்டொனல் கார்ல் மார்க்சை இனி மேல் நிராகரிக்க முடியாது என்றார். மார்க்சின் தத்துவம் பொதுவான சிந்தனைப் போக்காக வளர்ந்து விட்டது என்று கூறிய அவர், 130 வருடங்களின் பின்னரும் கார்ல் மார்க்ஸ் கூறியவை உண்மையானவை என்றார்.

இதற்கு முன்னர் தன்னை மார்க்சிஸ்ட் என வெளிப்படையாகக் கூறிய ஜெரமி கோர்பின் தொழிற்க் கட்சியின் தலைவராக அமோக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் கார்ல் மார்சின் தத்துவம் ஐரோப்பிய நாடுகளைச் சோசலிசப் புரட்சியை நோக்கி அழைத்துச் செல்லும் ஆரம்ப நிலை காணப்படுகிறது எனலாம்.

உலகின் ஒரு பகுதியில் சமூக மாற்றத்திற்கான அனத்து நிலைமைகளும் காணப்பட்ட அதன் மறுபகுதியில் அடிப்படைவாதிகளும் பிற்போக்கு வாதிகளும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வென்றெடுப்பதற்குப் பதிலாக அடிப்படைவாதிகளைப் போன்று செயற்படும் ஒரு குழு உலாவருகின்றது. அது தமிழர்களின் தலைமை எனப் பீற்றிக்கொள்கிறது. கடந்த காலத்தின் தவறுகளை விமர்சித்க்து புதிய முற்போக்கு அரசியலை முன்வைப்பதையே தவறு எனக் கூறும் இந்த அடிப்படைவாதிகள், இஸ்லாமிய மற்றும் இந்துப் பயங்கரவாதிகளுக்கு ஒப்பானவர்கள்.

One thought on “கார்ல் மார்க்ஸ் மீண்டுள்ளார் : தொழிற்கட்சியின் உச்சி மாநாட்டில்…”

Comments are closed.