கடவுள் பாதி, மிருகம் பாதி…

kamalதமிழ் சினிமாவின் புத்திசீவி கிரிமினல்கள் வரிசையில் கமல்ஹாசனுக்கு முதலிடத்தைக் கொடுக்கலாம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அதனோடு இணைந்து வேலை செய்வதே தனது ‘நற்பணி மன்றம்’ என்றும் அரசுக்கு எதிராகத் தான் மூச்சுகூட விடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக அரசிற்கு எதிராக தான் கருத்துத் தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது என தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோது தான் வீட்டிலிருந்து யன்னல் வழியாகப் பார்த்துக்க்கொண்டிருந்ததைத் தவிர அத்தனையும் பொய் எனக் கூறும் கமல், வரிப்பணம் தொடர்பாகவெல்லாம் எதுவும் கூறவில்லை என தமிழக அரசின் பாதங்களில் ‘சாஷ்டங்கமாக விழுந்து’ சரணடைந்தார்.

தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்வதாக தன்னைத் தானே புகழும் கமல்ஹாசன் ஹலிவூட் தொழிலாளிகளை இறக்குமதி செய்து தமிழ்ச் சினிமாவை மட்டும் சாக்கடைத் தரத்திற்கு இழுத்துச் செல்லவில்லை, அவரது ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தே அழைத்துச் சென்றார்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் – என்பது கமல்ஹாசனுக்கு வைரமுத்து எழுதிக்கொடுத்த பாடல். அது தான் கமல்ஹாசன் என்பதை அவர் இப்போது மட்டுமல்ல பல தடவைகள் நிறுவுயுள்ளார்.

ஒரு பெரியாரிஸ்ட் பார்பனீய இசுலாமிய எதிர்பாளனாக எப்படி வாழலாம் என்பதை கமல்ஹாசனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.