மகிந்த, கே.பி ஆகிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகப் பெருமைப்படும் இலங்கை அரசு

MR_KPமகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளி பாதுகாக்கப்படுவதை இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிர்மசிங்க பாராளுமன்றத்தில் அரசுக்குக் கிடைத்த தகமை போன்று தெரிவித்தார். உலகின் அதிபாங்கரக் கிரிமினல்களில் ஒருவரும் இலங்கையைச் சூறையாடிய கொள்ளைக்காரனுமான மகிந்த ராஜபக்சவை மக்கள் மத்தியில் உலாவ அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, அரசு பாதுகாத்து வைத்திருப்பது இலங்கை மக்களின் அவமானம். மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்புக்கு தேவையான குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட மூன்று பென்ஸ் கார்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட ரனில் விக்ரமசிங்க, மகிந்த தேர்தலில் போட்டியிட்டால் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதே வேளை மகிந்தவின் வேண்டுகோளிற்கு இணங்க கே.பி இன் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்ற மேலதிக தகவலையும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி இன்டர்போலால் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளில் ஒருவர்.

வன்னிப் போரில் குறுகிய பிரதேசம் ஒன்றினுள் புலிகள் முடக்கி அழிக்கப்படுவதற்கு கே.பி இன் உதவியும் பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கே.பி மலேசியாவில் நடைபெற்ற கைது நாடகம் ஒன்றின் ஊடாக இலங்கை அரசுடன் இணைந்து கொண்டார். தன்னார்வ நிறுவனம் ஒன்றை உருவாக்கிய கே.பி மீதான வழக்கு விசாரணை நடைபெற்ற போதும் கே.பி கைதுசெய்யப்படவில்லை.