வேலியே பயிரை மேய்வதன் உள்ளர்த்தம் இது தானா?

j_c_weliamunaஜெர்மனியில் பேர்லினில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் அமைப்பு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்னாஷனல். ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக பல மில்லியன்கள் செலவில் ஐரோப்பிய அரசுகளின் நிதி உதவியில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது. இவ்வமைப்பிற்கு எதிராகவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டன.

ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனலின் ஆளுனர்களில் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி ஜே,சீ.வெலியமுனவும் ஒருவர். யூ.என்.பி அரசியல் வாதியான வெலியமுன மீதும் பல தடவைகள் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மைத்திரி-ரனில் அரசு பதவியேற்ற பின்னர் சிறீலங்கன் ஏர்லைன்சில் ஏற்பட்ட ஊழல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வெலியமுன பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

ஊழல் குற்றங்களை விசாரணை செய்வதற்காக வெலியமுனவிற்கு வழங்கப்பட்ட பணத்திற்கு கணக்குகள் காட்டப்படவிலை என்றும், வெலியமுன அப்பணத்தைச் சூறையாடியிருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூன்றாமுலக நாடுகளில் தலையிடும் நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகளால் ஆரம்பிக்கப்பட்ட வெளிப்படைத் தன்மை என்ற பெயருடைய இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி மட்டுமல்ல அதனை ஆரம்பித்த பீட்டர் ஈகன் மீதும் ஊழல் குற்றங்கள் ஆதரத்துடன் முன்வைக்கபட்டன.

தவிர சிறீ லங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரித்தானியப் பிரிவு தொடர்பாக இனியொரு வெளியிட்ட தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு அனுபிவைக்கப்பட்ட போதும் எதுவித பதில்களும் கிடைக்கவிலை.(விமானங்களைக் கடத்திப் பதுக்கிய ராஜபக்ச கும்பல்: அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின)

ஊழலை அறிமுகப்படுத்தும் ஏகாதிபத்தியங்களே ஊழலுகு எதிராகப் போராடும் கேலிக்கூத்து அமைப்பான ரான்ஸ்பரன்சி என்ற ஊழல் பேரரசு மகிந்த ராஜபக்ச அரசுடனும் சுமூகமான உறவுகளைப் பேணி வந்தது குறிபிடத்தக்கது.