போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் “இனியொரு சதிக் கும்பல்” : கலையரசன்

ngo

இனியொரு மீதான் அவதூறுகள் ஒடுக்கப்படும் மக்களின் அவல வாழ்வை வர்த்தகமாக்கிக்கொள்ளும் எல்லாத் தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்களின் நிதியில் ஏகாதிபத்திய ஏஜன்டுகளாச் செயற்படும் மக்கள் விரோதிகள், தேசியத்தின் பெயரால் சமூகத்தைச் சிதைக்கும் குழுக்கள், பல்தேசிய வர்த்தக மாபியாக்கள் என்று இனியொருவின் எதிரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் நாளாந்தம் எதிர்கொள்கிறோம். 2014 ஆம் ஆண்டில் இனியொருவின் மீதான திட்டமிட்ட அவதூறு ஒன்றை எதிகொள்ளவேண்டிய சூழலில் எழுதப்பட்ட கட்டுரையை இன்றைய காலத்தின் தேவைகருதி மீள்பதிகிறோம்.

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னான எதிர்ப்புரட்சிகர சக்திகள் பல்வேறு வடிவங்களில் முளைத்து வேர்விட்டிருப்பதற்கு ஈழப் போராட்டம் மட்டும் காரணமல்ல. கடந்த பத்தாண்டுகளாக நாசகார எதிர்ப்புரட்சிகர சக்திகள் உலகின் சந்துபொந்துக்களிலெல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டன. லொபிக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், புரட்சி முழக்கங்களோடு முன்வருபவர்கள், தேசியச் சுலோகங்களை முன்வைப்பவர்கள் என்று நீண்டு செல்லும் பட்டியலில் இடம்பெறும் பலர் புரட்சியை அழிப்பதற்கான முகவர்களாக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பலர் தெரிந்துகொண்டும் பலர் தெரியாமலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

முன்பெல்லாம் இலங்கை போன்ற நாடுகளில் அரசுகளுக்கு எதிரான மக்கள் அமைப்புக்களும், மக்கள் போராட்டங்களும் நாளாந்தம் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டன.. அரசுகள் தாம் எண்ணியவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையில் மக்களின் போராட்டங்கள் அச்சுறுத்தின. இப்போதோ யாராவது போராட முனைந்தால் தன்னார்வ நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புக்களும் தடுத்து நிறுத்துகின்றன. நீங்கள் போராட வேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மக்களை வீடுகளுக்குள் பூட்டிவைக்கின்றன.போராட்டங்களிலிருந்து பாதுகாக்கப்படும் அரசுகள் சிறுகச் சிறுக சர்வாதிகாரத் தன்மை பெற்று பாசிச அரசுகளாக மாறிவிடுகின்றன.

இது மட்டுமல்ல இவ்வாறான அமைப்புக்கள் அனைத்துத் தளத்திலும் தமது செயற்பாடுகளை முடுகி விடுகின்றன. அரபு நாடுகளில் புரட்சியையே கையிலெடுத்து இறுதியில் அமெரிக்கா தலைமயிலான ஏகாதிபத்திய நாடுகளிடம் ஒப்படைத்து அழித்திருக்கின்றன.

இலங்கையில் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான சிந்தனைக் குழாம் ஒன்று உருவாக்கப்பட்டு அது இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் இன்று தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் INSD நிறுவனர் சுசீந்திரனும் கலையரசனும்
பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் INSD நிறுவனர் சுசீந்திரனும் கலையரசனும்

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்பத்தப்படும் இவ்வகையான இணைப்பின் இன்னொரு ஊற்று பாரிசிலும் உருவெடுத்தது. இலங்கை அரசின் ஆதரவாளர்களும், இலங்கை அரச துணைக்குழுக்களின் முகவர்களும், தன்னார்வ நிறுவனங்களின்(NGO) ,முகவர்களும், இந்திய ஆதரவுக்குழுக்களின் பிரதிநிதிகளும் பல நாடுகளிலிருந்து சென்று பாரிசில் சந்தித்து குழுவாக இணைந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவரகள் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு எதிரானவர்கள். இவர்கள் இனிமேல் ஒன்றிணைந்து செயற்படப்போவதாக அறிவித்திருந்தனர். ஈழப் போர் ஆரம்பிக்க்ப் போகிறோம் என்று வீரவசனம் பேசும் பலர் தலைமறைவாகிவிட விரல்விட்டெண்ணக் கூடிய சிலரே இவர்களின் அரசியலை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். தோழர் அசோக் யோகன் இக்குழுவின் தோற்றத்தின் பின்புலத்தை வெளிப்படுத்த முனைந்த போது கூட்டத்தில் கலந்துகொண்ட கலையரசன் என்பவர் எழுதிய கட்டுரையே கீழே பதியப்படுகிறது:

போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் “இனியொரு சதிக் கும்பல்

“இனியொரு” (http://inioru.com/) என்ற பெயரில் இணையத் தளம் நடத்தும், “அசோக்- சபா நாவலன் கும்பல்”, 2009 ம் ஆண்டிலிருந்தே, என் மீது “INSD உறுப்பினர்” முத்திரை குத்துவதற்கு படாத பாடுபடுகின்றது. எதற்காக? யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல்? அதற்கான காரணம் மிகத் தெளிவானது.

International Network of Sri Lankan Diaspora (INSD) என்பது, ஜெர்மனியை தளமாகக் கொண்ட புலம்பெயர் இலங்கையரின் அமைப்பு. 2009 ம் ஆண்டு, இலங்கை அரசும், அரசுக்கு ஆதரவான சிங்கள ஊடகங்களும், INSD உறுப்பினர்களை “தேசத் துரோகிகள்!”என்று பிரகடனம் செய்தன. இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு, அரச புலனாய்வுத் துறையினால் அல்லது சிங்கள இன வெறியர்களினால், கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.

அதற்குக் காரணம், அந்த நேரத்தில் தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய, Channel 4 ஆவணப் படம் வெளியானது. (பார்க்க: Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished) இறுதிப் போர் முடிந்த பின்னர், நிர்வாணமான புலிக் கைதிகளை, ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோவை அநேகமானோர் பார்த்திருப்பார்கள்.

அந்த போர்க்குற்ற ஆவண வீடியோவை, சனல் 4 இடம் ஒப்படைத்தவர்கள், தொடர்புகளுக்கு ஜெர்மனியில் உள்ள  INSD அலுவலக முகவரியை எழுதி அனுப்பினார்கள். உண்மையில், அந்த வீடியோவை சனல் 4 க்கு அனுப்பியது, JDS என்ற புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களின் அமைப்பு. அவர்கள் இப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். JDS ஊடகவியலாளர்கள் சிலர், INSD உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். (JDS இணையத் தளம்: Journalists for Democracy in Sri Lanka)

2009 ஆகஸ்ட் மாதம், இலங்கையின் போர்க்குற்றங்களை காட்டும், சனல் 4 ஆவணப் படம் வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அமைச்சர் மகிந்த சமரசிங்க, “INSD என்ற புலம்பெயர்ந்த இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்களே, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வீடியோவை, சனல் 4 க்கு கொடுத்து வெளியிட்டதாக” பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும், “INSD, ஒரு ஏகாதிபத்திய சதியில் இயங்கும், புலி ஆதரவுNGO” என்றும் பழி சுமத்தினார்.

ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில், அரச ஆதரவுப் பத்திரிகைகள், INSD உறுப்பினர்களை“தேசத் துரோகிகள்” என்று தூற்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. INSD மீதான அரசின் பிரச்சாரம் காரணமாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் “INSD தேசத் துரோகிகளுடன்” தொடர்பு கொள்ள விடாது தடுக்கப் பட்டனர். INSD உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த போதிலும், இலங்கையில் இருந்த அவர்களது உறவினர்கள் பயமுறுத்தப் பட்டனர். இதனால், பல குடும்ப உறுப்பினர்கள், INSD உறவினருடனான தொடர்புகளை முற்றாகத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

“அசோக்- சபா நாவலன் கும்பல்”, சிறிலங்காவில் சிங்கள இனவெறியர்கள் செய்த அதே வேலையை, புலம்பெயர்ந்த நாடுகளில் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதே வருடம் (2009), நவம்பர் மாதம், வினவு தளத்தில், போலிப் பெயரில் ஒருவர், என் மீதான அவதூறு ஒன்றை ‘கொமன்ட்’ பகுதியில் எழுதினார். அதில்,  ” நான் ஒரு INSD உறுப்பினர்” என்று பழி சுமத்தினார்.(பார்க்கவும்: “இனியொரு சதி செய்வோம்”) அதை “நிரூபிப்பதற்காக”, ஜெர்மனியில் வாழும் INSD இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட வலைப்பூவில் (Blog), எனது “கலையகம்” வலைப்பூவுக்கு கொடுத்திருந்த இணைப்பை சுட்டிக் காட்டினார்கள். (அதன் முகவரி இது: Sri Lankan Diaspora Blog 

ஒரே வருடத்தில், ஒரே காலத்தில், இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் INSD உறுப்பினர்களை, அரசுக்கு எதிரான தேசத் துரோகிகளாக சித்தரிக்கும், விஷமத்தனமான அவதூறுப் பிரச்சாரம் நடந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்க முடியுமா? 
அந்த நண்பரின் வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு, “நான் மட்டுமே INSD யில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு உறுப்பினராக”  நினைக்கத் தோன்றும். ஏனென்றால், வேறு யாருடைய பெயரும் அதில் இல்லை. நட்பு அடிப்படையில், எத்தைனையோ பேர் என்னுடைய வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அது போலத் தான், INSD ஆதரவாளரான அந்த இளைஞரும், தனது சொந்த வலைப்பூவை பயன்படுத்தி இருக்கிறார். (INSD கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னரே, நான் அவருக்கு அறிமுகமானேன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.) மேலும், அசோக்- சபா நாவலன் கும்பல் குறிப்பிடும் Blog, INSD அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல. (INSD யின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இது: International Network of Sri Lankan Diaspora)
INSD நடத்திய மகாநாடுகளில், பல விதமான அரசியல்- சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கையில் இருந்து அழைக்கப் பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நானும் ஒரு தடவை, INSD கருத்தரங்கில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், கூட்டங்களில் கலந்து கொண்ட எல்லோரும் INSD அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகி விட முடியாது. அந்த அமைப்பினால் சேர்த்துக் கொள்ளப் பட்ட உறுப்பினர்களது பட்டியலும், வெறும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தான். ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும், INSD ஆதரவாளர் ஒருவர், தனது இணையத் தளத்தில் எனது வலைப்பூவுக்கு ‘லிங்க்’ கொடுத்தார் என்பதற்காக, என்னையும் அதனுடன் தொடர்பு படுத்துவது அபத்தமானது.
இப்போது மீண்டும், பேஸ்புக்கில், அதே “ஆதாரத்தை” கொண்டு வந்து காட்டி, அதே குற்றச்சாட்டை (INSD உறுப்பினர்) என் மேல் சுமத்துகிறார்கள். அசோக், சபா நாவலன் மாபியா கும்பல், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்தும் சொல்லி வருகின்றது என்பது தெரியாததல்ல. அவர்கள், எங்கிருந்து தமது தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை என்னால் தர முடியும்.
மேலே உள்ளது, ” புலி ஆதரவு NGO வான,  INSD ஒரு தேசத் துரோகிகளின் அமைப்பு”  என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரச ஆதரவு பத்திரிகையின் முன் பக்கம். சிங்களம் தெரிந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். (சிங்களம் தெரியாதவர்கள், நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுங்கள்.)
அசோக்- சபா நாவலன் கும்பல் என்னைப் பற்றியும், INSD பற்றியும் கூறிய அத்தனை அவதூறுகளும், இது போன்ற சிங்கள இனவாத ஊடகங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப் பெற்றவை தான். பெரும்பான்மையான தமிழ் மக்கள், சிங்கள பத்திரிகைகளை வாசிப்பதில்லை. அது இந்த சதிக் கும்பலுக்கு சாதகமானது. அப்பாவி வாசகர்களை  ஏமாற்றி, அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுப்பதன் மூலம், போர்க் குற்றவாளிகளை தப்ப வைப்பது தான், அசோக்- சபா நாவலன் கும்பலின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:

1.Sri Lankan origin German linked by government to Channel-4 execution video reveals crucial facts
2.இனியொரு சதி செய்வோம்

கலையரசன் முழுப் பூசணிக்காயை சோற்றுப் பருக்கைக்குள் புதைத்தது போல அப்படமான பொய்களை எழுதி அவரது 24 மணிநேர ஊடகமான முகநூலில் உலாவவிட்டுள்ளார்.

பொய் இலக்கம் 1
சனல் 4 காணொளிகள் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களின் முன்பதாகாவும், சிங்களப் ஊடகத்தில் அவர் குறிப்பிடும் செய்திகள் வெளியாவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பதாகவும் இனியொருவில் INSD தொடர்பானதும் அதன் நிறுவனர்களில் ஒருவரான சுசீந்திரனின் அரசியல் தொடர்பான கட்டுரைகளும் வெளியாகிவிட்டன. அவற்றில் இவர்கள் எவ்வாறு இலங்கை அரச ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்ற விபரங்கள் வெளியாகின.

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : டி.அருள் எழிலன்
புலி எதிர்ப்பு – முதலீடில்லா லாபம் : டி.அருள் எழிலன்

பொய் இலக்கம் 2 :

INSD ஐ இனியொரு கட்டுரையில் இலங்கை அரச சார்பு நிலைப்பாடு உடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டதே தவிர புலி ஆதரவு என்று எழுதப்படவில்லை. ஆனால் சிங்கள ஊடகமோ நாம் எழுதியதற்கு மாறாக புலி சார்பானது எனக் கூறுகிறது. இந்த நிலையில் நாம் சிங்கள ஊடகத்திடமிருந்து தகவல் பெற்றுக்கொண்டதாகக் கலையரசன் கூறுவது பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடி கொடிகள் எல்லாவற்றையும் சேர்த்து சோற்றுப் பருக்கைக்குள் புதைப்பதைப் போன்றது.

பொய் இலக்கம் 3:

தன்னார்வ நிறுவனங்களுக்கும் தனக்கும் எட்டாப் பொருத்தம் என எழுதும் கலையரசனின் நிழற்படம் நிறுவனர் சுசீந்திரனோடு உடன்பட்டுச் செயற்படுவதான குறிப்புக்களோடு வெளியானது. இவர்களின் சந்திபு கடந்த வாரம் பாரிசில் நடைபெற்றது.

இனியொருவில் தொடர்ச்சியாகத் தன்னார்வ நிறுவனங்கள் குறித்த தத்துவார்த்த அரசியல் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அடிப்படையில் இலங்கை அரச சார்பு, இந்திய அரசு சார்பு என்ற குறுகிய விபரங்களுக்கு அப்பால் அவற்றின் அதிகாரவர்க்க சார்பு நிலையே எமக்குப் பிரதானமானது. ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் எதிர்ப்புரட்சி அமைப்புக்களான தன்னார்வ நிறுவனங்களின் தத்துவார்த்தப் பின்னணியை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே எமது அடிப்படை நோக்கம். இந்தவகையில் இனியொருவில் வெளியான தன்னார்வ நிறுவனங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு:

தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்! : சபா நாவலன்
சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான பிரித்தானிய அரச பணத்தில் இயங்கும் மையத்தை வில்லியம் ஹக் திறந்துவைத்தார்
ஏகாதிபத்திய உலகில் மக்களை ஒன்றுதிரட்டுதலும் போராடுதலும் : அருந்ததி ராய்
எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா? : அன்பு
இலங்கையைத் தொடர்ச்சியாக அழிக்க முயலும் USAID : ‘நல்லிணக்கப் பீதியை’ ஏற்படுத்துகிறது.
அமரிக்கா 4.5 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது
NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் : சபா நாவலன்
சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்
பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம் : சபா நாவலன்
நேபாளப் புரட்சியின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள் : சபா நாவலன்

கலையரசனின் அவதூறுகளுக்கும் பொய்களுக்கும் தோழர் சிறீரங்கன் வழங்கிய பதில்கள்:
1. இப்போது கலையரசன் தான் NGO (INSD-Member] உறுப்பிரில்லையனத் தொடர்ந்துரைத்துவருவதைக் காணுகிறோமோ? இது மிகக் கேவலமானவொரு சதி அரசியலோடு பின்னப்பட்டது.

ஒடுக்குமுறையாளர்களோடிணைந்த “தான்”நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு “பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும் தமிழத்துப் பிழைப்புவாதிகள் பலரால் இந்தக் கலையரசன் வழி முன் தள்ளப்படும் “இடதுசாரிய” உரையாடல் வேடமானது மேற்குலக – ஆசிய ஒடுக்கும் நிறுவனங்களுக்கு மனித முகந் தரிக்க முனையும் அரசுசார அமைப்புகளது அரசியலே!இவர்கள்தாம் இப்போது தாம் சுத்தமானவர்களனெவும் ;தமக்கும் அந்நிய அரசுசார அமைப்புகள் -அரச ஒடுக்குமுறையாளர்களோடெந்தத் தொடர்பும் இல்லை என்கின்றனர்.அதற்காகப் பாடுபட்டுக்கொண்டு தம் தலையைக் காக்கும் கவசங்களைத் தொடர்ந்து புரட்சி வேடங் கட்டித் தயாரிக்கின்றனர்.இதற்காகச் செய்தித் தாள்கள் -தரவுகள் என எந்தெந்தத் துரும்பையும் பயன்படுத்த இவர்கள் தவங்கிடக்கின்றனர்.இதைத்தாம், அம்மணி லீனா மணி மேகலையும் தமிழ்நாட்டில் செய்து வருகிறார்.இந்தக் கூட்டம் ஒடுக்குமுறையாளர்களது முகவர்ளால் இயக்கப்படும் பல்வேறு துணை அமைப்பளது முகவர்களாகவே இருக்கின்றனர்.

இவர்களது அடிப்படைப் பண்பு, எந்தத் தரப்பிலும் ஒன்றே!அதாவது தாம் அம்பலப்பட்டுப் போவதை எந்தக் குதர்க்கத்தாலும் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து தம் பிழைப்புவாத நகர்வை வைத்துத் தமது வயிறை வளர்ப்பதுமே இவர்களது நோக்கு.ஆனால் , இவர்களை வைத்தியக்கும் ஒடுக்குமுறையாளகள் தம் முகவர்களது நோக்கோ ,இவர்கள் மூலம் பரந்துபட்ட மக்களையொடுக்குவதற்கு முதல் இவர்களால் கைகாட்டப்படும் புரட்சியாளர்களைப் பலியெடுப்பது -அல்லது வர்க்க ரீதியாக – உணர்வு ரீதியாகச் சிதைப்பது.இதைத்தாம் இரயாகரன் -கலையரசன் போன்றோர் இப்போமது மிக வேகமாகச் சந்திப்புகள் -கூட்டங்கள் கூட்டிச் செய்து வருகின்றனரென்பதைப் பகிரங்கமாக நாம் சொல்லி வைக்குந்தருணத்தில் கலையரசன் தமது உறுப்பிரென INSD கூறுகிறது.கூடவே அவர்கள் கலையரசனது இணையத்துக்கு இப்படித் தொடுப்பிட்டுள்ளது[Favourite Sites: INSD-Membersblog: KALAIYARASAN [http://srilankandiasporablog.wordpress.com/ ] ].

உண்மையில் கலையரசன் ஒடுக்கு முறையாளர்களுக்குடந்தையாவிருக்கும் NGO களின் உறுப்பினரில்லையென்றால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.அதுமட்டுமின்றித் தன்னை உறுப்பினரெனப் பகிரங்கமாகக் கூறும் அந்த அமைப்பைக் கண்டித்துத் தனது மறுப்பையும் ,தன் தொடுப்பையும் நீக்குமாறு கோரியிருக்க முடியும்.அதை, அவர்களும் நீக்க்கியிருப்பார்கள்.இது ,ஏன் நடைபெறவில்லை? இப்போதுங்கூட இது நடைபெறலாம். ஏனெனில் ,ஒடுக்குமுறையாளர்கள் தமது முகவர்களை எப்படியும் அம்பலப்படாமல் காத்துவருவதில் தெளிவாகவே இருக்கின்றனர்.இதைப் பல வடிவத்துள் நாம் பார்ப்போம்.இன்று லீனா மணி மேகலை எப்படி இந்திய ரோவினது(RAW)ஆசியோடு தனித்துவமான புரட்சிக்காரியாக – கலைஞராகச் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் காட்டப்படுகிறதோ அதே கதைதாம் கலையரசன் -இரயயகரன் போன்றோரது நடாத்தையிலும்.

2. இன்றையதும்,இனித் தொடரப்போகும் இலங்கையின் அரசியல் முரண்பாடுகள்,அதுசார்ந்த நடாத்தப்படும் கட்சி-இயக்க வலதுசாரி-இடதுசாரி அரசியலானது அந்நியத் தேசங்களது கண்காணிப்புக்குக் கீழேதாம் நடாத்தப்படுவதென்பதை எவருமே மறுக்கப்படாதென்பது எனது கருத்து.சேர்பிய “ஒற்போர்-எதிர்ப்பரசியல்”,அதன் நிறுவனர் சேர்ட்யா பொப்போவிச்சும் [Srđja Popović_Otpor! ]எத்தனையோ முடிச்சுகளை அவிழ்த்து மேற்குலக ஆதிக்கத்தைத் தனிக் குழுவுக்குள் முடக்கிக் காப்பதில் விடியும் உண்மைகளைத் தரிசிக்கும் ஊடக வலுவில் நாம் இருக்கும் இந்தத் தருணத்துள் கூட இப்படியும் கலையரசன்கள் நம்மை ஏமாற்றுவதென்பது அவர்களது புத்திசாலித்தனத்தின் விருத்திதாம்.முள்ளி வாய்க்காலில் அழிக்கப்பட்ட மக்களது பிணங்களைக் கணக்குப் பார்க்கத் தெரிந்தவர்களும்,யுத்த உச்சத்தின் முடிவில் அழிந்தவர்களது பிணங்களை வர்க்க ஒற்றுமைக்கான தெரிவாக்கியவர்களுந்தாம் சமவுரிமைக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள்.சும்மா,அந்நியச் சதிக்குத் தலையாட்டிச் செல்ல வேண்டுமென விரும்பும் மனிதர்களுக்கான தெரிவு”இன ஐக்கியம்-சமவுரிமை.இங்குதாம் கலையரசன்கள் எப்பவும்போலவே திடீரெனப் புரட்சி பேச வெளிக்கிட்டனர்.இந்தத் தளத்திலிருந்தபடி தன்னாற் காணாதிருந்த அல்லது புலிகளுக்கும் பயந்தொடுங்கியவொரு சந்தர்ப்பவாதி ஒடுக்குமுறையாளர்களுக்கான பரப்புரைகளைப் புரட்சி வேடமிட்டபடியுரைப்பதே ரொம்ப ஆபத்தானது.இதைத் தொடரும் இவரது ஒவ்வொரு நகர்வும் மக்களுக்குப் பரந்தபட்ட நலன்களது எதிர்கால எதிர்ப்பரசியலுக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதாகும்.எனவே கலையரசன்களதும் -இரயாகரன்களதும் எல்லைகளைக் குறித்தொரு மதிப்பீடு அவசியமாகிறது நண்பர்களே!
முழுமையான விவாதத்தைப் பார்வையிட :

விவாதத்தின் பின்னர் தோழர்களால் பதியப்பட்ட கட்டுரைகள்:

எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் 
அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன…http://www.vinavu.com/2012/04/25/ngo/

contributions from our Comrade Saba Navalan’s articles on the NGO’s Harvest and Civil Societies and Imperialist Components. ..
http://democracyandclasstruggle.blogspot.co.uk/2012/09/against-ngoingo-project-by-rishi-raj.html

The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest By Saba Navalan
www.countercurrents.org
Nepal is one of those lands so very rich in natural resources that it constantly pricks the eyes of multi-national companies which dominate

குறிப்பு:
புலம் பெயர்ந்த ஊடகவியலாளர் அமைப்பும், இல் உறுப்பினராகவிருந்த சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவருமே சனல் 4 இற்குத் இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கினார்கள் என்பது ஆதரபூர்வமற்று வெளியான தகவல்கள்.

Published on: Jan 28, 2014 @ 00:08

3 thoughts on “போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் “இனியொரு சதிக் கும்பல்” : கலையரசன்”

  1. I have already mentioned about Collective Responsiibility. I am convinced and confident that the Rajapakse Family is very confident that none can stick a label on them.

    1. You and your not so clever logic, I can also be confident that I am better than Einstein but does that make it true ?

  2. எனக்கு மிக நீண்டகாலமாகவே அவர்மீது ஐயம். அவரது எழுத்துக்களில் உலக அரசியலை கரைத்துக்குடித்ததுபோல பேசுவார். உண்மைக்கும் அதற்கும் தொடர்பேயிருக்காது. அவரது கூலி வேலை இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது நல்லதுதான்.

Comments are closed.