ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான முரண்பாடு நாசகார சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இவற்றிற்கு புனையப்படும் தகவல்கள் எந்த ஆதாரமும் அற்ற அப்பட்டமான பொய். உதாரணமாக கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் அழைத்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்துக்கொண்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்கள் என்று அழைக்கப்படும் முகநூல் மற்றும் வட்ஸாப் போன்றவற்றின் ஊடகப் பரப்பப்பட்டது.
முல்லைத் தீவில் கலைஞரின் இழப்பைக் கொண்டாடும் வகையில் வெடிகள் கொழுத்தப்பட்டன என்ற பொய்ச் செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. சீமான் என்ற புனைபெயரைக் கொண்ட சைமன் செபஸ்தியனின் புலம் பெயர் வன்முறைக் குழுக்கள் உடபட பல அழிவு சக்திகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளைத் தவிர இலங்கையின் கண்டி மற்றும் ஹப்புதள போன்ற பகுதிகளிலிருந்தும் இந்த முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் திட்டமிட்டு பரப்பபட்டன.
தகவல்கள் வெளிவரும் பகுதிகளே சந்தேகத்திற்கு உரியனவாக அமைந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துத்துவா கும்பல்கள் என்பது வியப்பிற்குரியதல்ல; ஆனால் சில கிறீஸ்தவ மிசனரிகளின் நிதி வழங்கலில் இயங்கும் அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் இப் பொய்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆபத்தானது.
மக்களின் இழப்பைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் நடத்தும் பிழைப்புவாதிகளே இவ்வாறான புனைவுகளை மதவாத மற்றும் இனவாத சக்திகளின் பின்னணியில் பரப்பிவருகின்றனர். ஈழத் தமிழர்களுக்கும் இந்த நாசகார சக்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலதிக வாசிப்பிற்கு:
கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது என்ற வரலாற்றுக் கடமை
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு எமது அஞ்சலி!: மக்கள் அதிகாரம்