ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, டுபாய் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் பொருளாதார நெருகடியின் விழிம்பில் காத்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி கிரேக்கத்தில் மையம் கொண்டுள்ளது. இன்று ஞாயிறு காலை 7 மணி முதல் கிரேக்க நாட்டின் வாக்களார்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியன முன்வைத்துள்ள நிபந்தனையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதற்கு வாக்களிக்கின்றனர்.
பல்தேசிய நிதி மூலதனப் பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்ட கிரேக்கத்தை மக்களின் பணத்திலும் உழைப்பிலுமிருந்து மீட்கக் கோரும் நிபந்தனைகளை கிரேக்க மக்கள் நிராகரித்தால் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
யூரோ நாணயம் இதனூடாகக் கேள்விக்கு உள்ளாகும். ஐரோப்ப்பிய நாடுகளின் பொது நாணயமாக கருதப்படும் யூரோ அழியும் நிலை தோன்றலாம்.
நவதாரளவாதம் என்ற உச்சிவரைக்கும் அழைத்துவரப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் அழியும் நிலை தவிர்க்க முடியாதது என்பதற்கு கிரேக்கம் சிறந்த உதாரணம். கிரேக்கத்தில் ஆரம்பித்து யூரோ அழியும் நிலை தோன்றுமானால் உலகப் பொருளாதரத்தில் மிகப்பெரும் நெருக்கடி தோன்றுவது தவிர்கமுடியாததாலிவிடும்.
ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் திருப்புமுனை: கிரேக்க அரசின் முடிவும் பிரதமரின் உரையும்