டக்ளஸ் தேவானந்தாவின் பேரினவாத அரசியலுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

douglasவடக்குக் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் தமிழ் இனவாதிகளை நிராகரித்திருகிறார்கள் என்றால் பேரினவாதிகளுக்கும் பேரடி கொடுத்திருக்கிறார்கள். கடந்த தேரதலுடன் ஒப்பிடும் போது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா குழு 32.07 வீதமான வாக்குகளைப் பெற்று 3 பாராளுமன்ற இருக்கைகளைத் தக்கவைத்துக்கொண்டது.

இப்பின்னடைவானது மக்கள் பேரின வாதிகளோடு கூட்டுவைத்துக்கொள்ளும் கட்சிகளை நிராகரிக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரு புறத்தில் புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்டு வட கிழக்கில் திரையிடப்படும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ‘புலிகளின் தொடர்ச்சி’ அரசியலை நிராகரிக்கும் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவின் குழுவையும் நிராகரிக்கின்றனர்.

கடந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தா குழுவின் ஒட்டு அல்லது இணக்க அரசியல் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.

வெறுமனே சலுகைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் அன்றி தமது உரிமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பெருமளவில் வாக்களித்தமையைக் காட்டுகிறது. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை முற்றாக மறுக்கும் டக்களஸ் தேவாந்தா ஓரம்கட்டப்பட்டதும் மக்களின் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதப் பாராளுமன்றத்திற்குச் சென்று சாதிக்கப் போவது எதுவுமில்லை ஆயினும் வாக்குகளை எதிர்ப்பு வாக்குகளாகவே கருத வேண்டும்.