புலம்பெயர் தமிழ்த் தேசிய வியாபார சாம்ராஜியத்தின் முதலீடுகளும் கஜேந்திரகுமாரும்

gadendrakumarukபுலம்பெயர் நாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களிக்குமாறு குறித்த தமிழ்த் தேசியக் குழு சார்ந்தவர்களிடமிருந்து கைப்பேசிக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படன. தாயகத்திலுள்ள உறவுகளுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு நினைவூட்டக்கோரி இச் செய்திகள் அனுப்பப்பட்டன. தமிழீழம் கோரி இரத்த பொட்டுவைத்த தமிழர்களை மீண்டும் வாக்குப் பொறுக்கிகளுக்கு புள்ளடி போடுமாறு சிறிய இக் குழுவினர் கேட்பதன் பின்புலம் என்ன?
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலத்தில் அமெரிக்கக் கப்பல் வந்து மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் எனக் கூறி புலிகளை அழித்தவர்களே இக் கோரிக்கையை இன்று முன்வைக்கின்றனர்.

அவசர அழைப்பு என்ற இக்குறுஞ்செய்தி இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டக்ளஸ் அல்லது கருணாவிடமிருந்து வரவில்லை. கஜேந்திரகுமாரின் பெயரில் வந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் காலப்பகுதியில் திரட்டப்பட பெருந்தொகையான புலிகளின் சொத்துக்களையும் பணத்தையும் பதுக்கி வைத்திருக்கும் பிழைப்புவாதக் கும்பல்களே இச் செய்தியை அனுப்பி இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோருகின்றன.

புலிகளின் பெயரால் பணம் திரட்டும் கும்பல்களின் வியாபாரம் கடந்த சில வருடங்களாக மந்த நிலையிலேயே காணப்பட்டது. குறிப்பாக இலங்கை மைத்திரி அரசு ஆட்சியமைத்துக்கொண்ட பின்பு தமிழ்த் தேசிய வியாபாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது.

இவ்வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான இலங்கை முகவர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட இக் குழுக்கள் மீண்டும் தமது பணத்திரட்டலை முடுக்கிவிட்டனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நுளைந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றப்போவதாகக் கூறும் இக் குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரவர்க்கம் சார்ந்த நிலைப்பாடு சாதகமான நிலைமையை ஏற்படுத்திற்று. குறிப்பாக சுமந்திரன் முன்வைக்கும் இணக்க அரசியல் போக்கை தாக்குவது என்ற போர்வையில் கஜேந்திரகுமாருக்கு வாக்குத் திரட்டல் நடைபெறுகிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய வியாபார நிறுவனம் பரந்து கிளைவிட்டுள்ளது. வார இறுதிப் பாடசாலைகள், கோவில்கள், ஊடகங்கள், கடைகள் போன்ற வியாபார நிறுவனங்கள் போன்றன மட்டுமல்லாது கொடி, ரீ- சேர்ட், சப்பாத்து போன்ற சின்னங்களை முன்வைத்து நடக்கும் வியாபாரம் போன்ற பரந்த பண முதலீட்டைக் கொண்டது.

இந்த வியாபாரச் சாம்ராஜ்யம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ஊடாக இந்தியா வரை பரந்து விரிந்திருக்கிறது. திருச்சி போன்ற பிரதேசங்களில் பிரையாணச் சேவை முதல் பல்பொருள் அங்காடிகள் வரை இவர்களின் முதலீடுகள் காணப்படுகின்றன.

இம் முதலீடுகளை விரிவாக்க வேண்டுமானால் இலங்கையில் இவர்களின் பினாமிகள் வாழ வேண்டும். அப் பினாமிகளின் பெயரால் பணத்திரட்டலில் ஈடுபட்டுவதன் ஊடாகவே தமது மூலதனத்தை இக் குழுக்கள் விரிவாக்கிக் கொள்ள முடியும்.

தேர்தல் காலத்தில் திரட்டிய பணத்திற்கு மட்டுமல்ல கடந்த காலத்தில் இவர்கள் திரட்டிய பணத்திற்கு கணக்கு வழக்குகள் கிடையாது. தலைவர் உயிரோடு இருக்கிறார் அவர் வரும்போது கணக்குக் காட்டுகிறோம் என்பதே இவர்களின் வியாபாரத்தி தாரக மந்திரம். இது ஓம் நமச்சிவாயவை விடப் பலம் வாய்ந்தது.

இனி இவர்களின் நலன் சார்ந்து செயற்படும் ஊடகங்கள், எழுத்துக் கர்த்தாக்கள், விமர்சகப் பெருந்தகைகள், மேடைப் பேச்சாளர்கள் போன்றன புலம்பெயர் சமூகத்தின் அடிமட்டம் வரை பொய்களை எடுத்துச் செல்கின்றன.

ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை அங்கீகரிப்பது என்பது அடிப்படையில் தேசியத்திற்கு எதிரானது என்பது இக் குழுக்களுக்குத் தெரியததல்ல. தெரிந்துகொண்டே தமது வியாபார நலன்களுக்கான முதலீடாகவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஜூலியன் அசாஞ்ஸ், ஸ்னோடன், அருந்ததி ராய் போன்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரைப் பணயம்வைத்து மக்களுக்காகக் குரலெழுப்பும் நமது உலகத்தில், பணம் திரட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டம் நமது சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது.

தேசியத்தில் பற்றுள்ளவர்கள் யாராக இருந்தாலும் இக் குழுக்களை அரசியல் நீக்கம் செய்வதிலிருந்தெ சுயநிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை உறுதி செய்ய முடியும்.

மற்றொரு புறத்தில் மகிந்த போன்ற தீவிர இனவாதிகள் ஆட்சியிலிருந்தால் மட்டுமே புலம்பெயர் வியாபாரத்தச் செவ்வனே நடத்தமுடியும். இந்த அடிப்படையில் இவர்கள் மகிந்த ஆட்சியமைப்பதை விரும்புகின்றனர்.
கஜேந்திரகுமார் – புலம்பெயர் மாபியாக்கள் இணைவிற்கு எதிராக ஒரு போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அன்றி பேரினவாதக் கட்சிகளான யூ.என்.பி, யூ,பி.எப்.ஏ போன்றவற்றையோ, அவற்றின் அடியாட்களான டக்ளஸ் போன்றவர்களையோ ஆதரிக்க முடியாது,

இதனால் மக்கள் தேர்தலைப் புறக்கணிபதே சரியான வழிமுறை என்ற கருத்தை இனியொரு முன்வைத்தது.

பிழைப்புவாதிகளின் செய்திக்கு எதிராக இனியொருவின் குறுஞ்செய்தி:

அவசர அழைப்பு:
இலங்கை அரசின் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ளும் வாக்குப் பொறுக்கிகளுடன் போராட்டத்தை அழித்தவர்கள் இணைந்து நடத்தும் தேர்தல் நாடகத்தை நிராகரிக்க நினைவூட்டுங்கள். மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தி புலம்பெயர் நாடுகளில் தமது தமிழ் தேசிய வியாபாரத்தை மக்களின் அவலங்கள் மீது நடத்தும் பிழைப்புவாதிகளை ஓரம்கட்டி சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மக்கள் சார்ந்து முன்னெடுக்க ஈழத்தில் உங்கள் உறவுகளிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்க நட்புடன் வேண்டுகிறோம்.
-இனியொரு…