புலம்பெயர் புலிப் பினாமிகளால் கொழும்புக்கு அனுபப்பட்ட போர்க்குற்ற விசாரணை

warcrimeinvestigationஇலங்கை தொடர்பாக ஐ.நா சபையின் அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அரசின் தீர்மானமும் புலம்பெயர் நாடுகளில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. புலிகளையும் பிரபாகரனையும் அழிப்பதில் பங்காற்றிய புலம்பெயர் ‘புலி ஆதரவுக்’ குழுக்கள், தலைவர் போராட்டத்தை எமது கைகளில் ஒப்படைத்துள்ளார் என்று ஆரம்பித்த அரசியல் இன்று அமெரிக்க அரசின் ஆதரவோடு கொழும்பில் மையப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கில் ஆயுதம் தாங்கிப் போராடிய புலிகள் இயக்கத்துடன் செயற்படாத பினாமிகளாலும், கடந்த காலங்களில் உளவு நிறுவனங்களுடன் செயற்பட்ட ஆலோசகர்களாலும் பின்னப்பட்ட புலம்பெயர் தமிழ்த் தேசிய வலையமைப்பை ஏகாதிபத்தியங்கள் கையாள்வது இலகுவானதாக அமைந்தது.இப் பினாமிகளின் தந்திரோபாயமும் அரசியலும் இலகுவானதாகவே அமைந்தது.

1. தம்மைச் சுற்றிவர உள்ள அப்பாவி மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது.
2. புலிகளை அழிக்க முடியாத ஒன்றாகப் பிரச்சாரம் செய்வது.
3. புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காடாமல் தவறுகளை மட்டும் தெரிவு செய்து வளர்த்தெடுப்பது
4. இவர்களிலிருந்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுகளை மேற்கொண்டு துரோகிகள் ஆக்குவது.
5. புலிகளின் தோல்விக்குப் பின்னரும் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் ஏனைய நாடுகள் மீது மட்டும் பழி போடுவது.

மேற் குறித்த இந்த நடவடிக்கைகளை சூத்திரம் போன்று கையாண்ட புலம்பெயர் பினாமிகள் தம்மைச் சுற்றி இஸ்லாமிய, இந்து மத அடிப்படை வாதிகள் போன்ற கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்.

ஒரு புறத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களில் அடியாட்களான இவர்கள் மறு புறத்தில் இன்றைய இலங்கை அரசிற்கு ஜனநாயக முகமூடியை அணிந்துவிடுவதிலும் தமது பங்கை வகித்தனர்.

இலங்கை என்ற நாட்டை தனது அடிமையாக அமெரிக்கா மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளுள் ஒன்று தான் இன்றைய தீர்மானமும் அமரிக்காவின் ஒட்டுமொத்த அரசியலும். அதனைக் கூட அருவருப்பான அடிப்படைவாதமாக மாற்றும் இக் குழுக்கள், சிங்களவன் அமெரிக்காவை வென்றுவிட்டான் என்றும், தாம் அமெரிக்காவை மேலும் திருப்திப்படுத்த வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறி ISIS போன்ற கருத்துக்களைப் பொது வெளியில் முன்வைக்கும் குழுக்களதும் தனி நபர்களதும் நோக்கம் மக்கள் சார்ந்ததல்ல.

புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளில் பெரும்பாலானவர்கள் இப் பினாமிகளின் அரசியலுக்கு எதிரானவர்களே.

அமெரிக்கத் தீர்மானமும் உள்ளக விசாரணையும் தயவு தாட்சண்யமின்றி எதிர்க்கப்பட வேண்டும் அது அடிப்படைவாதிகளின் நிலையிலிருந்து எதிர்க்கப்படுமானால் பேரினவாதிகளை வலுப்படுத்தும்.

2 thoughts on “புலம்பெயர் புலிப் பினாமிகளால் கொழும்புக்கு அனுபப்பட்ட போர்க்குற்ற விசாரணை”

  1. The title suggests if not for them the investigation would have been proposed elsewhere. Inioru has gratifications when things fail for Tamil people. These folks definitely need to see some shrinks.

  2. முற்றும் உண்மை! புலிகளின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் அரசியல் பண்ணும் பினாமிகள் யாரும் முன்னை நாள் புலிகள் இல்லை. ஆபத்து வந்தால் அவர்கள் தப்பி ஓடி விடுவார்கள். கொஞ்சாம் ஆழமாக குடைந்து பார்த்தால் பல பேர் கடந்த காலங்களில் புலிகளுக்கு எதிராக இந்திய இலங்கை அரசுகளோடு ஒட்டியிருந்தவர்கள். அவர்களில் ஒருவர் தேசியத் தலைவர் சொன்னார் என்று ஒரு போடு போடுவார், அதைக் கேட்ட மற்றவர் ஐயோ தேசியத் தலைவா… என்று கண் கலங்குவார், இவர்களின் நாளாந்த வாழ்க்கையே நாடகம் தான்.

Comments are closed.