சீனாவின் புலிப்படைகள் சிரியாவை நோக்கிச் செல்கின்றன

china-ISIS-war5000 சீன இராணுவத்தினர் ரஷ்யப்படைகளுக்கு ஆதரவாக சிரியா போர்க்களத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக கிரம்லீன் அறிவித்துள்ளது. சைபீரியன் “Siberian Tiger” புலிகள் மற்று இரவுப் புலிகள் “Night Tiger” ஆகிய இரண்டு சீன விசேட படைப் பிரிவுகள் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சீன மக்கள் காங்கிரஸ் அனுமதியளித்துள்ளது. சீன அரசின் முதலாவது சர்வதேச இராணுவத் தலையீடாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையின் முன்னதாக சீனா தனது முதலாவது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் நிறைவேற்றியது.

அமெரிக்க அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஐ.ஸ்.ஐ.எஸ் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுவருவதாகக் கூறும் ரஷ்யப்படைகளுடனான சீன இராணுவத்தின் இணைவு உலகில் பல்வேறுபுதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.

மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக யுத்தம் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கை இராணுவமயப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய யுத்தச் சூழல் இன்று சீன மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போட்டிக்கான யுத்த களமாக மாற்றமடைந்துள்ளது.

சீன – ரஷ்ய இணைவால் ஒபாமா நிர்வாகம் நிலை குலைந்துள்ளதாக அமெரிக்க அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.