கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...
Read more















