இன்றைய செய்திகள்

Tamil News articles

ராணுவத்தினரை வரவளைத்து சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்!

கடந்த பல ஆண்டுகளாகவே பலவீனமாகி விட்டதாகச் சொல்லப்பட்டு வந்த இந்திய மாவோயிஸ்ட் கொரோல்லா படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 22 பேர் பலியாகி உள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும் இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ராணுவம் புலனாவுத்துறையிலும் உத்திகள்...

Read more
திராவிடம்` என்றால் என்ன?   :வி.இ.குகநாதன்

எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது. இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ம் நூற்றாண்டில்...

Read more
புதுச்சேரி முதல்வராக தமிழிசையை நியமிக்க பாஜக திட்டம்!

புதுச்சேரி அரசைக் கவிழ்த்த பாஜக தேசியக் ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை கட்டாயப்படுத்தி கூட்டணியில் இணைத்தது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிதான் புதுச்சேரி மக்களிடையே தனித்த செல்வாக்குள்ள கட்சி. அதன் தலைவர் ரங்கசாமி தன்னை...

Read more
சோனியாகாந்தி மு.க.ஸ்டாலினுக்கு மம்தாபானர்ஜி கடிதம்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளம், தமிழகம் என நான்கு மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நான்கு...

Read more
கோவையில் வானதி சீனிவாசனின் தோல்வியை உறுதி செய்த யோகி ஆதித்யநாத்!

தமிழகத்தில் பாஜகவினர் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெல்லார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்காக பாஜக தலைவர்கள் பலரும் வந்து பிரச்சாரமும் செய்தனர். பிரதமர் மோடி, அமித்ஷா...

Read more
அற்பத்தனத்தின் அடி பாதாளத்தை தொட்டுவிட்டீர்கள்-எல்.ஆர்.ஜெகதீசன்

தன் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்குக்கூட ஆ ராசா மன்னிப்பு கேட்டுவிட்டார். பொதுநன்மைக்காக. அது அவரது முதிர்ச்சியை, பெருந்தன்மையை, சமூகப்பொறுப்புணர்வை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்பதற்கான உதாரணமாக. இதற்குமேல் இதற்குள் இப்போதைக்கு விரிவாக...

Read more
போராட்டங்கள் ஈடுபடும் பொதுமக்கள் காடையர்கள் – பிரிதி பட்டேல்

உலகம் முழுவதும் பாசிச மயமாகும் சூழலில், அதற்கு எதிரான மக்கள் அணிதிரண்டு போராடும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன. இந்தியா இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒடுக்குமுறையும் போராட்டங்களும் உச்சமடைந்துள்ளன. பொது...

Read more
வங்கதேசம் சென்ற மோடி கலவரத்தில் ஐந்து பேர் பலி!

இந்திய பிரதமர் மோடி  வங்கதேசம் சென்ற நிலையில் அவரது வருகைக்கு எதிரான போராட்டங்கள் கலவரங்களாக மாறியது. இந்த வன்முறையில் ஐந்து பேர் வரை பலியாகி உள்ளார்கள். வங்கதேச விடுதலைப் போரின் 50வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ அன்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ராகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில், சிறப்பு அழைப்பாராக பிரதமர் மோடி அழைக்கப்பட்டார். பிரதமர் மோடிக்கு அங்கு அழைப்பு விடுத்தே அன்றே அந்நாட்டில் உள்ள ஹிஃபாஸத் - இ- இஸ்லாம் என்ற அமைப்பு, இந்திய பிரதமர் மோடி மத ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சொந்த நாட்டில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் Go Back Modi என்ற கோஷம் பின் தொடர்ந்து வரும் வேளையில், நாடு விட்டு நாடு சென்றாலும் அந்த சம்பவம் தொடர்வது பா.ஜ.கவினரை சோகம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் டாக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் இடதுசாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நேற்று தீவிரமடைந்தது. மோடி வருகையையொட்டி பாதுகாப்புக்கள் தீவிரப்பட்டுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் தடைமீறி போராட்டங்கள் நடைபெற்றதால், வங்கதேச தலைநகர் டாக்கா, சிட்டகாங், பிரம்மன்பாரியா உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு ரப்பர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தாக்குதலில் தற்போது வரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Read more
Page 65 of 1266 1 64 65 66 1,266