துருக்கி இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையில் குண்டுத்தாக்குதல்

அல்-கயிதாவிலிருந்து தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல் வேறு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு அமெரிக்க ஆதரவு துருக்கி பின்புலமாகச் செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிரான போராட்டத்தை தனது எல்லைக்குள்ளேயே வெற்றிகரமாக நடத்திவரும் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் தளபதி அறிக்கை விடுத்து சில மணி நேரங்களில் துருக்கி இராணுவத் தலைமைகத்திற்கு அருகாமையில் பெரும் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கரையிலான் என்ற இத் தளபதி குர்தீஸ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடிவரும் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுவருகிறது. அந்த அமைப்பின் தலைவரான அப்துல்லா ஒசாலான் 1999 ஆம் ஆண்டு கைதான பின்னர் இவர் அமைப்பின் பிரதித்தலைவராகச் செயற்படுகிறார். துருக்கி அரசும் அதன் படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைந்து செயற்படுவதை நாம் நேரடியாகக் கண்டிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் துருக்கி இராணுவத் தலைமையகத்தின் அருகமையில் நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலைல் 28 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி இராணுவம் பயணித்த பஸ்வண்டித் தொடர் ஒன்றைக் குறிவைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ரஷ்யப் படைகளதும், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினதும் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஈடுகொடுக்க முடியாமல் திணறும் நிலையில் அதனை உருகாக்கிய அமெரிக்க ஆதரவு நாடுகளான சவுதி அரேபியாவின் தலைமையில் சிரியாவில் நுளைந்துள்ளன.