சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையே தேவை : நாடகமாடும் விக்கி

vikneswaran_mahinda_013-500x264வடமாகாண முதலமைச்சர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் குழு வட மாகாண முதலமைச்சரை நேற்று சந்தித்துப் பேசியது. இதன் போதே முதலைமைச்சர் இக் கோரிக்கையை முன்வைத்தார். அமெரிக்கா பின்னணியில் நின்று வன்னிப் படுகொலைகளை நடத்தியதும், போர்க்குற்ற விசாரணை என்று நாடகமாடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், இன்று தனது அடிமைகளின் ஆட்சி ஏற்பட்டதும் போர்க்குற்ற விசாரணையைக் கைவிட்டதும் விக்னேஸ்வரனுக்குத் தெரியாதவையல்ல.

புலம்பெயர் நாடுகளில் வன்னிப் படுகொலைகளுக்குத் துணை சென்ற ஏகாதிபத்திய உளவாளிகளே இன்று சர்வதேச விசாரணை என்று கூற ஆரம்பித்துள்ளனர். உலகின் கொலைகார அரசான அமெரிக்கா திட்டமிட்டு நடத்தும் இலங்கை அரசியலில் அமெரிக்கா நியமித்துள்ள எதிரணியே விக்னேஸ்வரனின் பின்னணியில் செயற்படும் புலம்பெயர் அமைப்புக்கள். புதிய மக்கள் சார்ந்த அரசியல் இயக்கங்கள் தோன்றாமலிருப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த எதிரணியின் பின்புலம் தெளிவாக ஆராயப்பட வேண்டும்.

vikneswaranதனது முதலமைச்சர் அதிகார காலப்பகுதியிலேயே சுன்னாகம் நிலக்கீழ் நீர் மாசடவதற்கும், சொந்த நிலமும் விவசாயமும் அழிக்கப்படுவதற்கும் துணை சென்ற விக்னேஸ்வரன் சர்வதேச விசாரணையை மட்டும் கோருவது சந்தேகத்திற்குரியது.

சுன்னாகத்திலிருந்து பல மைல்கள் தொலைவு வரைக்கும் நீரும் நிலமும் நாசப்படுத்தப்ப்பட்டுள்ளது. அதனை நடத்திய நிறுவனம் இன்று எந்த தண்டனையுமின்றி தப்பித்துக்கொண்டது. அழிப்பு நடத்திய நிறுவனத்திற்கு சார்பாக திட்டமிட்டு சாட்சியங்களைத் திரட்டி குற்றங்களிலிருந்து விடுவித்து சாரிசாரியாக மக்களின் அழிவிற்குத் துணை சென்ற விக்னேஸ்வரனின் நாடகமும் அவரின் புலம்பெயர் எஜமானர்களின் சதித் திட்டத்தையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சர்வதேச விசாரணை என்பது இன்று சாத்திமற்ற ஒன்றாகிவிடது. அமெரிக்கா மற்றும் போராட்டத்தை அழித்த புலம்பெயர் முகவர்கள், விக்னேஸ்வரன் போன்ற அவர்களின் உள்ளூர் அடியாட்கள் இணைந்த சதித்திட்டத்திற்கு அப்பால் புதிய மக்கள் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்.

4 thoughts on “சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையே தேவை : நாடகமாடும் விக்கி”

  1. எல்லோரும் கெட்டவன் என்றால் யார் நல்லவன் ?

  2. “புதிய மக்கள் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்”
    யாரால்? எப்போது?? எங்கே???
    ஒரு பிரபல்யத்தை நாய் கடித்தால் அந்த நாயின் படம் பத்திரிகைகளில் வெளிவரும் … இனிஒருவும் விக்கியை துரத்தி துரத்திக் கடிக்கிறது … எல்லாம் வல்ல ஆண்டவன் இனிஒருவை மன்னிக்கட்டும் … விக்கிக்கு இனிஒரு கருத்துக்களைப் பார்வையிட நேரம் இருக்குமா ?????

  3. கூரை ஏறி கோளிபிக்க தெரியாதவன் எல்லாம். வைகுண்டம் பொக வேளிக்கிட்டானாம்.

    Sent from my 4G Ready Samsung Galaxy S4 on Three

Comments are closed.