ரொனி பிளேர் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஜெரமி கோபின்

Blair_1ஈராக் ஆக்கிரமிப்பின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மிகவும் தீவிரமகக் கடந்த வாரத்திலிருந்து எழ ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் அதிக ஆதரவு பெற்ற வேட்பாளரான ஜெரமி கோபின் ரொனி பிளேர் நடத்திய போர் சர்வதேசச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டது எனவும்,பொய்யான தகவல்களை மக்களுக்குக் கூறி ஈராக்கை ஆக்கிரமித்து யுத்ததைச் சட்டவிரோதமாக நடத்தியமைக்காக போர்க்குறம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜோன் சில்கொட் என்ப்வரது தலைமையில் ஈராக் மீதான சட்டவிரோதப் படையெடுப்பும் போர்க்குற்றமும் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. 9 மில்லியன் ஸ்ரேலின் பவுண்ஸ் செலவில் நடத்தப்பட்ட இந்த விசாரணை முடிவுகள் வெளியிடப்படாமல் இன்னும் இழுத்தடிக்கப்படுகிறது.

விசாரணை முடிவுகள் வெளியிடப்படாமைக்கான காரணங்களை பிரித்தானிய அரசு முன்வைக்கவில்லை. எது எவ்வாறாயினும் பிளேர் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலான கோரிக்கையாக எழுந்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை அறிக்கை

வெளியிட்ப்படும் காலப்பகுதியில் பிளேரின் கொழும்புப் பயணமும், அரச அதிகரிகளுடனான சந்திப்பும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.