ஐங்கரநேசனின் மற்றுமொரு ‘தேசிய’ ஊழல்!

Ainkaranesanதமிழ்த் தேசியத்தின் பெயரால் யாழ்பாணத்தில் நடக்கும் வியாபாரத்தில் முன்னணி வகிப்பவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது குழாமும் என்பது பலரதும் கணிப்பு. இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழ்த் தேசியத்தின் பெயரால் எதிர்த்துவந்த வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரனேசன் (அய்யா) கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முற்பட்டார்.

இத்திட்டத்தால் மீன் வளம் பாதிக்கப்படும் என வடக்கு மீனவர் சங்கங்கள் சில எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.

இதனை எதிர்கொள்ளும் வகையில் மீனவர்களே இல்லாத மீனவர் சங்கம் ஒன்றை வட மாகாணசபை விவசாய அமைச்சர் தோற்றுவித்துள்ளார்.

அந்த மீனவர் சங்கம் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

இதற்கு முன்னர் சுன்னாகம் அனல் மின்னிலயைத்த நடத்தி யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிய நஞ்சாக்கிய நிறுவனத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் போலி நிபுணர் குழு ஒன்றை வட மாகாண சபை உருவாக்கியது. அந்த நிபுணர் குழு இன்று காணாமல் போய்விட்டது.

ஊழல்கள் வாக்குப் பொறுக்கும் அரசியல் வழமையானதே. ஆனால் தேசியத்தின் பெயரால் புலம்பெயர் பிழைப்புவாதிகளுடன் அழிவுகளை நிகழ்த்துவது வடம்காண சபைக்குக் கைவந்த கலை!

One thought on “ஐங்கரநேசனின் மற்றுமொரு ‘தேசிய’ ஊழல்!”

  1. இரணைமடு நீர் வழங்கல் விவகாரத்தில் இக் கட்டுரையாளர் குழம்பிப்போயுள்ளார். அவரது நிலைப்பாடு என்ன?
    இவ்விடயத்தில் வடமாகாணசபையின் நிலைப்பாடு சரியானதே, ஏனெனில் விவசாயம் அழிந்தால் பின்பு என்ன செய்வது. ஆனால் வேறுவிடயங்களில் பிழை நிறையவுள்ளன. அமைச்சரவைக்கு ஒதுக்கியநிதியில் பெரும்பகுதி செலவிடப்படவில்லை. இப்போதுதான் அவசரமாக செலவிடப்படுகிறது. இவ்வாறு உரியமுறையில் திட்டங்கள் வகுக்கப்படாமல் அவசரமாக இறுதிமாதத்தில் மட்டும் பெரும்பகுதி செலவிடப்படும்போது ஊழல், வீண்செலவுகள், முறைகேடுகள் இடம்பெறும். அதிகாரிகளிற்கு அரச செலவீனங்களிற்கு பற்றுச்சீட்டு தயாரிக்கும் முறையிலையே தெளிவில்லை. ஒரு கொள்வனவிற்கு 5 நிறுவனங்களிடம் கேள்விப்பத்திரம் {tender)கோரப்படவேண்டும், இவர்கள் தங்களின் ஒரே நபரிடம் 5 வெவ்வேறு பெயர்களில் பத்திரம் பெறப்பட்டு முறைகேடு இடம்பெறுகிறது. அமைச்சரும், செயலாளர்களும் பஐிரோ (official)போன்ற வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு வேறு அலுவலக வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகிறது.

Comments are closed.