ஐங்கரநேசனுக்கு மேலும் பணம் தேவை!

Ainkaranesanஇலங்கையில் சமாதானம் நிலவுவதான தோற்றப்பாட்டின் பின்னணியில் பேரினவாத அரசியல் பாதுகாக்கப்படுகின்றது. பேரினவாத அரசியல் தற்காலிகமாகத் தணிந்திருப்பது போன்ற தோற்றப்பாட்டை மேலும் வலுப்படுத்துபவர்கள் அதன் உள்ளூர் பிரதிநிதிகளே! இந்த அரசியல் வாதிகள் மத்தியில் மக்களுக்கு தெளிவான தெரிவுகள் கிடையாது. இந்த நிலையில் மக்களால் நிராகரிக்கப்படும் அரசியல் அயோக்கியர்கள் இறுதியில் தஞ்சமடையுமிடம் புலம்பெயர் நாடுகள்.

வடமாகாண சபையில் பல்வேறு ஊழல்களில் நேரடித் தொடர்புடைய ஐங்கரநேசன் அவுஸ்திரேலியாவில் தனது அரசியல் பின்புலத்தை நிறுவிக்கொள்ள முற்படுகிறார். சுன்னாகம் அனல் மின்நிலையத்தை நடத்தி அப்பிரதேசத்தையே அழித்துச் சிதைத்த எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனத்திற்குச் சார்பாக போலி நிபுணர் குழுவை அமைத்து உண்மையைப் புதைக்க முற்பட்ட ஐங்கரநேசன் அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களை மையப்படுத்தி புதிய அரசியல் வியாபாரம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளார்.

சுன்னாகம் அனல் மின்னிலையம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கிலிருந்து தப்பிச்சென்று அவுஸ்திரேலியாவில் தற்காலிகத் தலைமறைவான ஐங்கரநேசன் முதலமைச்சர் நிதியத்திற்குப் பணம் வழங்குமாறு அவுஸ்திரேலியா தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் மூன்றில் ஒரு பகுதியான சுன்னாகம் பிரதேசத்தை அழிப்பதற்கு திட்டமிட்டுத் துணைபோன ஐங்கரநேசன் சுன்னாகம் நீரைச் சுத்திகரிப்பதற்குப் பணம் சேர்த்தாலே அவர்மீது படிந்துள்ள அழுக்குகளைக் கழுவிக்கொள்ளலாம்.

தனது வாழ் நாள் முழுவதும் மக்களின் அவலத்தில் வியாபாரம் நடத்திய ஐங்கரநேசன் புலம்பெயர் தேசிய வியாபாரிகளுடன் இணைந்து நடத்த எண்ணும் அரசியல் ஆபத்தானது,