வடமாகாண சபைத் தேர்தல்
எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே!
சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதி;ர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது.
1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள். காரணம் மாகாணசபைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை துளியேனும் திருப்திப்படுத்தாதது மட்டுமல்ல, பேரெழுச்சி பெற்று நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடூர கரங்களில் இருந்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க எந்த வழியிலும் உதவப் போவதுமில்லை என்பதுமாகும்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி என்பது எமது திண்மமான நிலைப்பாடு. தமிழர் தேசத்தை இருகூறிட்டு வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தி தமிழ் மக்களின் தேசிய அரசியலை வடமாகாணத்திற்குள் முடக்கிவிட சிங்களம் கங்கணம்கட்டி நிற்கின்றது.
எமது சம்மதமின்றி எம்மீது திணிக்கப்பட்ட ஓர் அரசியல் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, அதனைத் தொட்டுப்பார்க்கத் தாயராகவும் இல்லை. மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்குவதனை எத்தகைய காரணங்களினாலும் நியாயப்படுத்திவிட முடியாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இது எமது தேசிய உரிமைப் போராட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
அறிவிக்கப்பட்டுள்;ள மாகாணசபைத் தேர்தலின் புறச்சுழலை அவதனிக்கும்போது உரிமைக்கான எமது போரட்டம் பதவிக்கான போரட்டமாக மாற்றப்பட்டு விட்டதென்ற வேதனையான உண்மை எம்மை கலங்கவைகிறது. மேலதிகமாக, தமிழ்த் தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தரப்புக்கள் இந்த மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் கொடுப்பதன் ஊடாக ஒரு இன அழிப்பில் இருந்து தமிழ்த் தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இனப்பிரச்சினையின் பரிமாணத்தை மாற்றி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இருக்கக் கூடிய ஓர் அதிகாரப் போட்டி என்ற புதிய வடிவத்தை கொடுப்பதற்கு துணைபோகின்றனர்.
எம் உறவுகளே…
வெளிசத்திகள் தத்தமது நலன்களை இத்தீவில் நிலைநிறுத்திக்கொள்வதற்காக இத்தேர்தலில் தமிழ் மக்களை முழுமையாகப்பங்கேற்க வைத்து மாகாணசபையை தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக்காண்பிக்க முயல்கின்றன. அந்த யதர்த்தத்தினை உணர்ந்து தமிழ் மக்களின் நலன்களை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக புறக்கணித்து நிற்கின்றது. எமது ஆதரவு எந்த ஒரு கட்சிக்கோ, சுயேட்சைக் குழுவிற்கோ இல்லை. நாம் இத்தேர்தலில் தம்மை ஆதரிப்பதாக கூறுபவர்களிடத்தில் விழிப்பாக இருக்குமாறும் தயவாக வேண்டுகின்றோம்.
இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் மாகாண சபைகளைத் தமிழ்மக்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என யாரும் காட்ட முற்படின் அது 26 ஆண்டுகாலம் மாகாண சபைகளை நிராகரித்து நடைபெற்;ற உரிமைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த அனைத்து ஆன்மாக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகவே நாம் பார்க்கின்றோம். இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை நாம் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்
///// தமிழ் மக்களை முழுமையாகப்பங்கேற்க வைத்து மாகாணசபையை தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக்காண்பிக்க முயல்கின்றன. //////
அப்பட்டமான பொய் இது . ஐயா விக்கினெஸவரன் மாகாண சபைத் திட்டதை தீர்வாக ஒருபொழுதும் ஏற்கவில்லை . அது தீர்வு இல்லை . அதில் எதுவும் இல்லை . வெறும் ஏமாற்று வித்தை இப்படி எல்லாம் பலமுறை ஐயா விக்கினேச்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக ஈழத் தமிழர் அரசியலை பாவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட “கிண்டுஸ்தான்” பெட்டியில் முதலாவது கேள்வியே மாகாண சபைத் திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது தான் . பன்னாடைகளுக்கு அந்த நல்ல பதில் பிடிபடவில்லை தங்கடை தமிழக பிராடுகளைத் திட்டியதுதான் பிடிபட்டது .
மாகாணசபை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் கீழே உண்டு பாருங்கள் .
இந்த பொய்யர்கள் தேர்தலைப் புறக்கணித்து டக்லசை முதலமைச்சராக்க பார்க்கிரார்களா அல்லது டக்லசுக்கு தான் மக்கள் ஆதரவு என்று நிரூபிக்கப் பார்க்கிறார்களா ?
“கிண்டு”ஸ்தான் டைம்ஸ்சில்
21 ஜூலை
நீதிபதி விக்கிநேச்வரனிடம் கீழே உள்ள கேள்வி கேட்கப்பட்டது அவரது பதிலைப் படித்துப் பாருங்கள்
தமிழ்நெட்டின் அசிங்கமுகம் தெரியும்
Q: What is your opinion on the 13th Amendment to the Constitution?
13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன ?
———————————————————————————————————————————-
A: The 13th Amendment gives with the left hand and takes away with the right hand. Whatever the rights that have been given are not actual but only imaginary.
13 ஆம் திருத்த சட்டம் இடது கையால் கொடுத்து வலது கையால் எடுக்கப்படுகின்றது . 13 ஆம் திருத்த சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் என்பன வெறும் கற்பனை மட்டுமே .
(குறிப்பு —— இப்ப சொல்லுங்கோ தமிழ்நெட் ஜெயச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சொல்லுறமாதிரி மாகாணசபையைநீதிதேவன் குணானிதி ஐயா விக்கினேஸ்வரன் தீர்வாக ஏற்றுக் கொள்கிறாரா ? இவ்வாறு ஜூலை 2013 இல் நீதிதேவன் குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்க பன்னாடை தமிழ் நெட் ஜெயச்சந்திரன் பாய்ச்சிய நஞ்சில் கஜனும் விழுந்து ஐயா விக்கினேஸ்வரன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை தீர்வாக சொல்கின்றார் என அப்பட்டமான பொய்யை நேற்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் சொல்ல தமிழ்நெட் அதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது . தானே சொல்லி அறிக்கை விடப்பண்ணி தானே வெளியிட்டு சுய இன்பம் காண்பதைப் போன்ற வேலை இது . மிக வெளிப்படையாக சிம்பிளா சொன்னது விளங்காமல் இருக்க நியாயம் இல்லை . அப்படியானால் என்ன இலாபத்திற்காக இப்படிச் செய்கின்றார்கள் ? கருத்து முரண்பாடு இருக்கலாம் அப்பட்டமான பொய்யை பரப்பக் கூடாது அது சொல்பவரை தான் இறுதியில் தோற்கடிக்கும் )
———————————————————————————————————————————–
For the simple reason, the Governor has been given the right of acting as a sort of an intermediary between the law being passed and the law being formulated. As soon as the law is formulated, you have to get his consent with regard to allocation of finance and other things. If he does not accept, nothing will take place.
நான் இப்படிச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் மாகாண சபையில் இயற்றப்படும் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையே தொடர்பாளராக கவர்னர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .
சட்டம் இயற்றப்பட்டவுடன் நிதி ஒதுக்கீடு மற்றும் விடயங்கள் தொடர்பாக கவர்னரிடம் இருந்து உடன்பாடு பெற வேண்டும் கவர்னர் எற்றுக் கொள்ளாவிடில் எதுவும் நடக்காது .
(குறிப்பு ;—— இப்ப சொல்லுங்கோ தமிழ்நெட் ஜெயச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சொல்லுறமாதிரி மாகாணசபையைநீதிதேவன் குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் தீர்வாக ஏற்றுக் கொள்கிறாரா ? அந்த மனுஷன் மாகாண சபை என்பது மண்குதிரை என்பதை இவ்வளவு சிம்பிளா விளங்கப்படுத்தியும் அதை புரிஞ்சு கொள்ளாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் , தமிழ் நெட் ஜெயச்சந்திரனும் ஐயா மாகாணசபையை தீர்வாக எற்றுக் கொள்ளுறார் என அப்பட்டமான பொய்யை யாருக்காக பரப்புகின்றார்கள் ? கருத்து முரண்பாடு இருக்கலாம் அப்பட்டமான பொய்யை பரப்பக் கூடாது அது சொல்பவரை தான் இறுதியில் தோற்கடிக்கும் )
——————————————————————————————————–
There is tremendous amount of interference by the Central Government.
எதுவும் மாகாண சபை சட்டத்தில் மிக அதிகமான சொல்லில் (வடிக்கமுடியாத ) அரசாங்கத்தின் தலையீடு இருக்கின்றது .
(குறிப்பு ;—— இப்ப சொல்லுங்கோ தமிழ்நெட் ஜெயச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சொல்லுற அர்த்தம் மாதிரி மாகாணசபையைநீதிதேவன் குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் தீர்வாக ஏற்றுக் கொள்கிறாரா ?
அந்த மனுஷன் மாகாண சபை என்பது மண்குதிரை என்பதை இவ்வளவு சிம்பிளா விளங்கப்படுத்தியும் அதை புரிஞ்சு கொள்ளாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் , தமிழ் நெட் ஜெயச்சந்திரனும் ஐயா மாகாணசபையை தீர்வாக எற்றுக் கொள்ளுறார் என அப்பட்டமான பொய்யை யாருக்காக பரப்புகின்றார்கள் ? கருத்து முரண்பாடு இருக்கலாம் அப்பட்டமான பொய்யை பரப்பக் கூடாது அது சொல்பவரை தான் இறுதியில் தோற்கடிக்கும் )
————————————————————————————————————
According to some, the 13th Amendment is an imaginary thing, which gives the impression that the Provinces have been empowered under the Amendment. But all the rights are subject to the interference by the Central Government.
தலையீடு சிலரது கற்பனையில் 13 ஆம் திருத்த சட்டம் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்றது என்ற கற்பனையில் சிலர் இருக்கின்றார்கள் . ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட அத்தனை அதிகாரங்களும் அரசாங்கத்தின் தலையீட்டுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது .
(குறிப்பு ;—— இப்ப சொல்லுங்கோ தமிழ்நெட் ஜெயச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சொல்லுற அர்த்தம் மாதிரி மாகாணசபையைநீதிதேவன் குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் தீர்வாக ஏற்றுக் கொள்கிறாரா ?
ஐயா விக்கினேஸ்வரன் தீர்வாக ஏற்றுக் கொண்டார் என்ற அர்த்தம் பட ஒரு பொய்யை பரப்பும் தமிழ் நெட் ஜெயச்சந்திரனும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் யாருக்கு சேவகம் செய்யப்பார்க்கின்றார்கள் என்று .
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு
பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள்
Great. Now only I know that there is a Jaffna Press Club. So, now there is one dissenting voice. I thought that the people were looking for ward for the elections. The Jews lived for how long to see the next Pas Over in Jerusalem.
The Jewish people celebrate Passover as a commemoration of their liberation over 3,300 years ago by God from slavery in ancient Egypt that was ruled by the Pharaohs, and their birth as a nation under the leadership of Moses. It commemorates the story of the Exodus as described in the Hebrew Bible especially in the Book of Exodus, in which the Israelites were freed from slavery in Egypt.
Passover commences on the 15th of the Hebrew month of Nisan and lasts for either seven days (in Israel) or eight days (in the diaspora). In Judaism, a day commences at dusk and lasts until the following dusk, thus the first day of Passover only begins after dusk of the 14th of Nisan and ends at dusk of the 15th day of the month of Nisan. The rituals unique to the Passover celebrations commence with the Passover Seder when the 15th of Nisan has begun. In the Northern Hemisphere Passover takes place in spring as the Torah prescribes it: “in the month of [the] spring” (בחדש האביב Exodus 23:15). It is one of the most widely observed Jewish holidays.