இலக்கிய சந்திப்பு இலங்கை அரச ஆதரவாலர்களால் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவது உங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லையா? இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
கரன்
41வது இலக்கிய சந்திப்பானது இலங்கைக்கு “கொண்டு செல்லப்படுவது” எமக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தந்துவிடவில்லை. இவ்வாறு நிகழாமல் விட்டிருந்தால் மாத்திரமே அது எமக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்க முடியும்.
சமீபகால புகலிட இலக்கிய சந்திப்புக்களை அவதானம் கொள்பவர்கள் சில காட்சிகளை தங்கள் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறோம். ஒரு ஐனநாயக இருத்தலுக்கான சுதந்திர வெளியாக அமையப்பெற்றிருந்த இந்த இலக்கிய சந்திப்பு ; சமீபகாலத்தில் உள்ளீடு செய்த முன்னாள் புலிகளும், இன்னாள் அரச ஆதரவாளர்களுமான ராகவன், நிர்மலா போன்றவர்களின் அரசியல் ஆடுகளமாக எவ்வாறு உருமாறியது என்பதை மிகச் சுலபமாக புரிந்த கொள்ள முடியும்.
இவ்வாறான ஐனநாயக அமைப்புக்களை சிதைத்து, தங்கள் நலன் சார்ந்த அணிகளாக மாற்றும் இவர்களின் ‘’வித்தைகளுக்கு’’ ஒரு பாரம்பரிய வரலாறே உண்டு எனலாம் !.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இருண்ட காலம் என்றால், அவை ஆயுத இயக்கங்களின் குறிப்பாக, புலிகளின் வருகைக்கு பின்னாலான காலத்தையே நாம் குறிப்பிட முடியும். இக் காலங்களில் மக்கள் மத்தியில் காணப்பட்ட கலை- கலாச்சார- பண்பாட்டு இயக்கங்கள், தொழில் சங்கங்கள், சிவில் உரிமை அமைப்புக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு அவர்களின் ஐனநாயக செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டு அனைத்தும் புலிகள் இயக்கத்தின் துணை அமைப்புக்களாக வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டன. சுதந்திரமான தனித்துவமான சிந்தனை மரபுகள் சிதைக்கப்பட்டு, இவற்றை பேணிய பேசிய மனிதர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளையும் புலிகள் விட்டுவைக்கவில்லை. புலிகளின் கருத்தியல் பிரச்சார அணிகளாக இவை ஆக்கப்பட்டன.
புலிகளின் இந்த அராஐக போக்கை எதிர்த்த, நிராகரித்த ஒருசில அமைப்புக்களை ; புலிகள் தங்கள் அரசியல் கருத்தியல் நலன் சார்ந்த நபர்களை உள்ளீட வைத்து, அவ் அமைப்புக்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி ; தங்களுக்கு சாதகமான அணிசேர்க்கை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தங்கள் மேலான்மை அதிகார வட்டத்திற்குள் கொண்டுவந்தனர். இவ் விடயத்தில் புலி சார்ந்த நபர்களின் உள்ளீட்டு நடவடிக்கைகள் பல பல தந்திரோபாய – துரோக நடவடிக்கைகளை கொண்டிருந்தன. இவ் அமைப்புக்களில் இருந்த நபர்கள் பண பலத்தாலும், அவர்களின் பலவீனங்கள் கண்டறிந்து, அவற்றிற்கு தீனி போடுவதன் மூலமும் இவ் அமைப்பு உறுப்பினர்கள் வாங்கப்பட்டு ; அமைப்புக்கள் சீர்குலைக்கப்பட்டு, புலிகளின் உப கிளைகளாக ஆக்கப்பட்டன. வடகிழக்கு பகுதிகளில் இருந்த சுதந்திரமான அனைத்து அமைப்புக்களுக்கும் இவ்வாறுதான் புலிகளால் சாவு மணி அடிக்கப்பட்டது.
அதனது தொடர்ச்சியான வரலாற்றை புலம்பெயர் சூழலிலும் நாம் அனுபவித்தோம். 1980களில் பிற்பாடு, புலிகளினாலும் ஏனைய ஆயுத அமைப்புக்களினாலும் இலங்கை பேரினவாத அரசினாலும் துரத்தி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் உருவாக்கிய பல்வேறு கலை- இலக்கிய அரசியல் தளங்கள் ; புலிகளின் நயவஞ்சக ஊடுருவலினால் தங்கள் அமைப்புக்களாக ஆக்கப்பட்டது என்பதை நாம் கண்டே வந்துள்ளோம்.
இதிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே அமைப்பு புகலிட இலக்கிய சந்திப்பென்றே கூறவேண்டும். இன்று அதற்கும் முன்னாள் புலிகளால் சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. அன்று புலிகளால் முடியாமல் போன காரியத்தை இந்த முன்னாள் புலிகள், இன்னாள் ‘’இலங்கை அரச விசுவாசத்திற்காக’’ இலக்கிய சந்திப்பை காவு கொடுத்துள்ளனர். இவர்கள் எப்பொழுதும் தங்களுடைய இருத்தலுக்காக, அரசியல் நலன்களுக்காக எந்த துரோகத் தனங்களையும் செய்யக்கூடிய நபர்களாகவே புலிகளின் பாசறையில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் காலத்தில் புலிகளுக்கு எத்தனை விசுவாச நபர்காளாக இருந்தார்களோ ; அதே விசுவாசப் பண்புகளை இன்றைய இலங்கை பேரினவாத அரசுக்கு காட்டும் போக்கை இவ் புகலிட இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதன் மூலம் மீண்டும் எமக்கு காட்டியுள்ளனர்.
சுந்தரம் (சிவ சண்முகமூர்த்தி) புலிகளால் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார். ? இக் கொலையில் ஈடுபட்டது பிரபாகரனா? இக் கொலையை நியாயப்படுத்தி அறிக்கைவிட்டதில் சில புத்திசீவிகளுக்கும் பங்கு இருந்ததாக ஒரு கதை உண்டு உண்மையா?
SHAN
சுந்தரத்தை படுகொலை செய்த நபர்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் உண்டு. இவற்றில் உண்மை விபரம் தெரியவில்லை. புலிகளிலிருந்த திருகோணாமலையச் சேர்ந்த அருணா, சால்ஸ் அன்ரனி ,பிரபாகரன் ஆகிய மூவர் கூட்டணியே சுந்தரம் கொலையை திட்டமிட்டு செய்ததாக நான் அறிந்துள்ளேன். இதனை அக்காலத்தில் புலகளோடு இருந்த நபர்களதான் உறுதிப்படுத்தவேண்டும்.
சுந்தரம் கொலை செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் பிரபாகரனுக்கு இருந்தன. புலிகளின் ஆரம்பகாலத்தில் புலிகள் அமைப்பு சுத்த இராணவ கண்ணோட்டத்தோடும், தனிநபர் கொலைக் கலாச்சாரத்தோடுமே உருவாகியிருந்தது. இதனுடைய அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நபராக பிரபாகரனே இருந்தார். புலிகள் அமைப்பு கொலை, கொள்ளை வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டத்திற்கு அப்பால், அரசியல் சார்ந்த ஒரு அமைப்பாக உருவாகவேண்டுமென சுந்தரம் போன்றவர்கள் தீவரமாக இருந்தார்கள். அத்தோடு பிரபாகரனின் தன்னிச்சையான அரசியல் அற்ற இராணுவ செயல்பாடுகளை சுந்தரம் அக்காலத்தில் கடுமையாக விமர்சித்துவந்ததோடு பிரபாகரனை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதன் மூலமே புலிகள் அமைப்பை சரியான அரசியல் திசைவழி நோக்கி நகர்த்த முடியுமென்பதிலும் மிகவும் உறுதியுடையவராக இருந்துள்ளார்.
அதன்பின் புலிகளிலிருந்து சுந்தரத்தின் வெளியேற்றமும் – காலப்போக்கில் புளொட் அமைப்பின் தோற்றமும், ‘’புதிய பாதை’’ பத்திரிகை தொடங்கப்படுதலும் நிகழ்கின்றது.
புதிய பாதையில் தமிழர் விடுதலைக்கூட்டணியினதும், அமிர்தலிங்கத்தினதும் சந்தர்ப்பவாத கருத்துக்களும், அரசியலும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இக் காலத்தில் பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் , அமிர்தலிங்கத்தினதும் ‘’அடியாளாகவே’’ இருந்தார். எனவே சுந்தரத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் பிரபாகரனுக்கும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த சில “மனிதர்களுக்கும்” இருந்தது. இதன் வெளிப்பாடே சுந்தரத்தின் படுகொலையாகும்.
இக் கொலையை நியாயப்படுத்தி யாழ்பாணத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்று அக் காலத்தில் வெளியிடப்பட்டதாக நான் அறிந்துள்ளேன். சமீபத்தில் இப் பிரசுரம் பற்றி ‘காலச்சுவடு’ சஞ்சிகையில் என்.எல்.எப்.ரி யைச் சேர்ந்தவரும், தோழர் விசுவானந்ததேவனின் நண்பருமான ரவி அருணாசலம் என்பவர் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். நண்பரே அதனை நீங்கள் வாசிப்பதன் ஊடாக உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முடியுமென நினைக்கின்றேன்.
அக் குறிப்பு…
…1982 ஜனவரி இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னாள் உள்ள சித்திரா அச்சகத்தில் வைத்துத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) சேர்ந்த சுந்தரம் என்பவரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொலை செய்தனர். சுந்தரம் புதிய பாதை என்ற அரசியல் பத்திரிகையை அச்சடிப்பதற்காகவே அங்கு வந்திருந்தார். சக இயக்கப் போராளி மீதான முதலாவது அரசியல் படுகொலை அது. தமிழ்த் தேச உணர்வாளர்கள் இடையே அது ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் கூட அடங்க மறுக்கிறது.
ஆனால் அது நடந்து ஒரு கிழமைக்குள்ளாகவே ஒரு சிலரிடம் அது அடங்கிப்போயிருந்தது. அந்த ஒரு சிலர் தங்கள் நலன் கருதித் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்த தமிழ் புத்திஜீவிகள். அவர்களில் ஒருவரான நிர்மலா (அப்போது நிர்மலா நித்தியானந்தன்) ‘இந்தக் கொலை செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அச்சகத்தில் வைத்து அதைச் செய்திருக்கக் கூடாது’ என்று எனக்கும் தோழர் விசுவிற்கும் சொன்னார். இன்னுமொரு தமிழ் புத்திஜீவி ‘துரோகத்தின் பரிசு’ என்று தலைப்பிட்டு அப்படு கொலையை நியாயப்படுத்தி விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே புத்திஜீவிகள்தாம் ஜனநாயகத்தின் பெயரிலும் கருத்துச் சுதந்திரத்தின் பெயரிலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தபடி சிங்கள பௌத்த பேரினவாத அரசைக் கட்டித் தழுவிக் கபட நாடகம் ஆடுகின்றார்கள்.
‘அச்சகத்தில் வைத்துச் செய்திருக்கக் கூடாது’ என்று நிர்மலா சொன்னதன் காரணம் அதே சித்திரா அச்சகத்தில் நிர்மலாவின் நண்பரான நுஃமான் சேர் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் நூல் அச்சிடப் பட்டுக்கொண்டிருந்தமையே. தமிழ் மக்களின் அரசியலிலும் பார்க்க நுஃமான் சேரின் நட்பு முக்கியப்பட்டிருக்கிறது நிர்மலாவிற்கு. ‘இவர்களும் மனிதர்களே’ என்ற வாக்கியத்துடன் இதைக் கடந்து அப்பால் போவோம்…..
http://www.kalachuvadu.com/issue-155/page72.asp
(மேற்கண்ட ரவி அருணாசலத்தின் இக் குறிப்பில் சிறு தவறு இருப்பதாக நினைக்கின்றேன். சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு சென்றமைக்கான காரணம் ; அங்கு தமிழ்ஈழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) புதுவருட வாழ்த்து மடல் அச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது. அதனைப் பார்வையிடவே அங்கு சென்றிருந்தார்.)
சமீபகாலமாக பேஸ்புக்கில் சக்கடத்தார் கந்தவனம் என்ற புனைபெயரில் ஒழிந்துகொண்டு இனியொரு , சபாநாவலன், ஸ்ரீரங்கன், உங்கள் மீதும் மற்றும் பலர் மீதும் ஒருவர் அவதூறுகளை பரப்பி வருகிறாரே. இப் பெயருக்குள் ஒழிந்திருப்பவரை உங்களுக்கு தெரியுமா? இச் செயலை எப்படிப் பார்கிறீர்கள்?.
உதயன்
எழுத்துலகில் ‘’புனைபெயர்’’ பயன்படுத்தல் என்பது சகஜயமானது. சொந்தப் பெயர்களில் தாங்கள் சார்ந்த கருத்துக்களை, எண்ணங்களை, நிலைப்பாடுகளை, அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கருத்தாளர்கள் ; இவற்றைத் தவிர்ப்பதற்கு புனைபெயர்களை உபயோகிப்பது நடைமுறையில் இருந்துவரும் ஒரு முறைமையாகும். புனைபெயர் கொண்ட கருத்தாளர்கள் ; கருத்துச் சுதந்திரம் என்பது சக மனிதனுக்கான, எமது பொறுப்புணர்ச்சியுடன் இணைந்த அறிவாயுதம் என்பதை புரிந்துகொள்ளும் பட்சத்தில் எவ்வித பிரச்சனையும் எழுவதில்லை. இவை ஆரோக்கியமான உரையாடல்களை தொடர துணைபுரியவும் உதவுகின்றன. ஆனால் புனைபெயர் என்ற பெயரில் ‘’முகமூடிகளை’’ அணிந்துகொண்டு தனிப்பட்ட மனிதர்கள் மீது குரோதங்களைத் தீர்க்கவும், மனித மனத்தின் இருண்ட பக்கத்தின் வேட்கையை தீர்க்கவும் சிலர் பயன்படுத்தும்போதுதான் புனைபெயரின் அரசியல் மாபியாத்தனமாக- முகமூடி அரசியலாக மாறிவிடுகின்றது.
நண்பரே நீங்கள் மேலே குறிப்பிடும் ‘’சக்கடத்தார் கந்தவனம்’’ என்னும் மாபியா முகமூடியும் இப்படிப்பட்டவரே. இவ் முகமூடிக்குள் ஒழிந்திருக்கும் அநாமியை நாம் அறிந்தே உள்ளோம். மிக மோசமான அரசியல் கலாச்சாரத்தையும், பண்பையையும், நடத்தைகளையும் கொண்ட நோர்வேயில் வசிக்கும் ‘’நியூட்டன்’’ என்பவரே அந்த நபராவார். இவரும், இவரோடு சேர்ந்த ஒரு கும்பலும் முகப்புத்தகத்தினுள் முகமூடிகளோடு நுழைந்து ‘’முன்னிலை சோசலிச கட்சி’’ என்னும் அமைப்புத் தொடர்பாக ஆரோக்கியமான விமர்சனங்களை, கருத்துக்களை, எதிர் வினைகளை முன்வைப்பவர்கள் மீது மிக கீழ்மையான காழ்ப்புணர்ச்சிகளை, புனைவுகளை கட்டமைத்து பிரச்சாரப்படுத்துவதை முழுநேரத் தொழிலாக செய்துவருகின்றனர். இந்தப் புனைபெயர் முகமூடிகளின் பின்னால் சூத்திரதாரியாக செயல்படுபவர் ‘’இரயாகரன்’’ என்பதனையும் நாம் அறிந்தே உள்ளோம். இவர்களுக்கு அனுசரனையாக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் என சொல்லிக் கொள்ளும் ‘’பழ.றிச்சட்’’ என்ற நபரும் செயல்படுகின்றார்.
இத்தகைய ‘’மாபியா முகமூடிக் கலாச்சாரம்’’ முகப்புத்தகத்தினுள் ஆரோக்கியமான உரையாடல்களை செய்யமுடியாமல் தடுத்துவிடுகின்றது. வன்முறை என்பது உடல்சார்ந்த நிகழ்வாக ஒருபுறம் இருக்கும்போது, இந்தக் கும்பலின் வன்முறை இவற்றிற்கு அப்பால் கருத்தியல் தளத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.
மீண்டும் தொடங்கும் மிடுக்கு!!!!!!!!
“திருகணி செய்து,வளையில் கட்டி,உறியாகக் காட்டல்.” என்பது எழுத்துப் போராளிகளுக்கு கைவந்த கலை போலும்.
“புலிகள் அமைப்பு கொலை, கொள்ளை வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டத்திற்கு அப்பால், அரசியல் சார்ந்த ஒரு அமைப்பாக உருவாகவேண்டுமென சுந்தரம் போன்றவர்கள் தீவிரமாக இருந்தார்கள். ….,” ———— அசோக்.
மேற்குறிப்பிட்டது “சுந்தரரிஸ’ தத்துவார்த்தமெனின்,சாகாது சுடப்பட்ட தியாகராசா எம்பி;வட்டுக்கோட்டை தபால் கந்தோரரின் ‘பாதிக்குக் குறைவான பணக் கொள்ளை”;ஒத்தைப் போலிசைச் சுட்டு,துவக்கு பறிச்சது;………………….எண்டொரு பட்டியல் நீளும்.
அட அதுவும் அரசியல் படுகொலையோ…அகண்ட அதிர்வலையோ..?
கதைச்சது ஒரு ‘புத்திஜீவி’ நிர்மலா;எழுதின புத்திஜீவி ஆராம்?பேர் எழுதத் தில் இல்லையோ?
//‘அச்சகத்தில் வைத்துச் செய்திருக்கக் கூடாது’ என்று நிர்மலா சொன்னதன் காரணம் அதே சித்திரா அச்சகத்தில் நிர்மலாவின் நண்பரான நுஃமான் சேர் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் நூல் அச்சிடப் பட்டுக்கொண்டிருந்தமையே.// ……வாய்ப்பந்தல் இரவி
சுந்தரம் சுடப்பட[தை,2,1982 ]முதலே,’பாலஸ்தீனக் கவிதைகள்”[கார்த்திகை,1981] வெளிவந்து விட்டது.
ரவி அருணாசலம் தொடர்பாக அரசியல் விமர்சனங்கள் இருக்கின்றது.என் தொடர்பாகக்கூட விமர்சனங்கள் உண்டு. அதற்காக அவர்கள் கூறுகின்ற உண்மைகள் பொய்யாகிவிடுவதில்லை.சுந்தரம் படுகொலை தொடர்பான நிர்மலா சம்பந்தப்பட்ட விடயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்திலும் என்.எல்.எப்.ரி தோழர்கள் புளொட் தோழர்கள் மத்தியில் பரவலாக தெரிந்தே இருந்தது. சுந்தரம் படுகொலையை நியாயப்படுத்தி துண்டுப்பிரசுரம் எழுதியது நித்தியானந்தன் அவர்கள் என்பதும் யாவரும் அறிந்தவிடயம்.எனவே தவறுகளை நியாயப்படுத்துவதைவிடுத்து அவை பற்றிய விமர்சன – சுயவிமர்சன நிலையை நமக்குள் தோற்றுவிப்பதே ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.
அசோக்! இரவி எழுதியதான,”நூல் அச்சிடப் பட்டுக்கொண்டிருந்த” என்பது தவறு.ஆதாரம் திகதி.அந்தத் தவறுதான் நிர்மலா கூறியதான ‘அச்சகத்தில் வைத்துச் செய்திருக்கக் கூடாது’ என்பதையும் பொய்யாக்கி விடுகிறது.
சுட வேண்டுமென்று தீர்மானித்தவர்கள்,இருக்க வைத்து சுட்டது பிழை;நிற்க வைத்து சுட்டிருக்க வேண்டும் அல்லது அச்சகத்தில் சுடாமல் குச்சொழுங்கையில் சுட்டிருக்க வேண்டுமென கருத்து சொல்வார்கள் என்பது நல்ல கற்பனை.அந்த வாய்ப்பந்தலை,வத்திக்குச்சி கொளுத்தி,ஊருக்கு காட்டிறது அசகாய சூரத்தனம் அசோக்.
பாலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இலங்கை அரசு,அந்தக் கவிதை மொழிபெயர்ப்பிற்காய்,இடதுசாரியம் பேசிய,கல்முனை காட்டி நின்ற ‘முஸ்லீம்’ விரிவுரையாளருக்கு கொம்பு சீவுமென்று,அந்தப் ‘புத்திஜீவி’ கவலைப்பட வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.சுந்தரம் சுடப்பட்டதால்.துப்பாக்கி போட்ட அட்டைப்பட மொழிபெயர்ப்பாளர் நுகுமானிடம் ஒரு விசாரணை.அவ்வளவே.இப்போதாவது எது வாய்ப்பந்தல் எனப் புரிகிறதா?
மற்றும் சுந்தரம் யார்,என்ன செய்தார் என்பதே அறியாமல்,சும்மா எழுதிக் குவிக்கிற சுப்பிறமணியம் கணக்கில,சுந்தர புராணம் வரையக் கூடாது.சுட்ட கூட்டணிப் பெயர்கள் மூன்றில் ஒன்றே சரியாகும் போது,66.7% பொய்ம்மைகள், வரலாறாக வெளிவரும்.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்.
அரசியல் பண்ணுகிறவர்களோடு அரசியல் விமர்சனம் செய்யலாம்;அவியல் செய்யிறவையோடு,பங்கிற்கு புக்கை தின்னலாம்.
போகிற சீவனை,’விமர்சன – சுயவிமர்சன நிலை தோற்றுவித்து’, ஆரோக்கியமாகப் போகப் பண்ணலாமோ! நல்ல ‘பைம்பல்’தான்.
ரவி கூறியதான நூல் அச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது என்பதே உண்மை நூல் வெளிவந்தது டிசம்பர் 1982 இல் தான். நீங்கள் இப்படி பொய் சொல்லி யாருக்காகக் குத்தி முறிகிறீர்கள்?
அப்ப புத்தகம் அடிக்கிறது,பிள்ளை பெத்துப் போடுற(1982 ஜனவரி-டிசம்பர் 1982) மாதிரி எண்டிறியள்.
சுந்தரத்தை சுட்டவர்களில் ஒருவர் சத்தியநாதன். (தங்கள் முதற்பலி என புலிப்பாசிசம் கொண்டாடும் சங்கர்) சுந்தரம் படுகொலையான பின் எப்படி நிர்மலா ராகவன் போன்றோர் புலியில் நீடித்தார்கள்? இன்றைக்கு அவர்கள் எப்படி மனித உரிமை கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேச முடிகிறது?
ஓ அதுவா! சுந்தரம் கொலை நடக்கைக்கே,அவையள் சப்பிறத் திருவிழாவில இருந்வை;இண்டைக்கு அவையள் தூக்குக்காவடி எடுக்கினம்.
எத்தனையோ பேர் – இரவி போன்றவர்கள் உட்பட – ‘சரித்திரம்’ பண்ணிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்க சில சஞ்சிகைகளும் பல இணைய வெளியீடுகளும் உள்ளன. இந்த வடிகால்கள் இல்லாவிட்டால் வலைப்பதிவுகள் என்று வருவார்கள் இந்த சரித்திரப் பிரம்மாக்கள். இந்தப் பொய்களை ஆதாரம் காட்டி தமது பக்கங்களை நிரப்புவதற்கு என்று ஒரு கூட்டம், பிரித்து ஆய்வதற்கு என்று இன்னொரு கூட்டம். பரிதாபமாக இருக்கிறது!
அசோக் அவர்களுக்கு,
சிறு தம்பி எஸ்.எம்.நியூட்டன் பற்றி நீங்கள் கோபமாக `மோசமான அரசியல் கலாச்சாரத்தையும், பண்பையையும், நடத்தைகளையும் கொண்ட மாபியா` என எழுதியதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாவம் அவர் ஒரு நாரதர். இவர் செய்யும் கலகங்களைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் எதிரிகளை போட்டுத்தள்ளுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. உள்வீட்டுக்கு கல் எறிவது தான் இவருடைய சிறப்பு, அழகு,ஸ்பெசாலிட்டி எல்லாமே.
இது பற்றி ஆதாரங்களுடன் இனியொருவில் முன்னரும் எழுதியுள்ளேன். தற்போதய உள்வீட்டு பரப்புரை இதோ……
1. நோர்வே சிறியர் இலங்கையில் புளொட் அமைப்பில் இருந்த போது சைக்கிள் செல்வராசனை தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் வைத்து பலரும் பார்திருக்க கைது செய்து இழுத்து சென்றுள்ளார். ஆனால் 25ஆண்டுகள் கடந்த பின்னரும் சைக்கிள் செல்வராசன் உயிருடன் திரும்பி வரவில்லை, அவர் பற்றிய எந்தத் தகவழும் இது வரை குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை.
இது பற்றி சிலர் புலத்தில் வைத்து நோர்வே சிறியரிடம் கேட்ட போது இவர் தான் தெல்லிப்பளை ஊர்ப்பக்கமே வந்ததே கிடையாது என்று சாதிக்கிறார்.
சைக்கிள் செல்வராசனின் மறைவுக்குக் நேரடிக் காரணமான இவரை பு.ஜ.ம.முன்னணி தலைவராக நோர்வேயில் சட்டபூர்வமாகப் பதிவு செய்துள்ளது எந்த வகையில் நியாயமானது? (ஆதாரம்: http://www.purehelp.no/company/details/996514749 )
2. சாதியத்தை எதிர்ப்பதாகக் கூவித்திரியும் இவர்கள் நடமுறையில் எதுவுமே செய்வதில்லை. உதாரணத்திற்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ ஒரு சம்பவத்துக்காக குய்யோ முய்யோ என குதித்து படம் காட்டும் இவர்கள், கூப்பிடு தூரத்திலிருந்து சாதியத்தை தினம் தினம் கேவலப்படுத்தும் நோர்வே சேதுவை இது வரை கண்டித்தது இல்லை. இது பற்றி தான் கேள்வி எழுப்பிய போதெல்லாம் மீட்டர் குமாரும், இராயாகரனும் தட்டிக்கழித்து வருகின்றனர்.
3. சம உரிமைக் கட்சியை நோர்வேயில் ஆரம்பிப்பதற்கு எந்த கொள்கையோ கோட்பாடுகளோ இல்லாதவர்களைக் கொண்டு உருவாக்கியமை. இது பற்றி தான் கடுமையாக எதிர்த்தபோதும் இதன் குழுத் தலைவராக பிறேம் என்பவரை நியமித்தது. இவர் சில மாதங்களிற்கு முன்னர் தான் நோர்வேயில் இருக்கும் இலங்கைக்கான தூதுவருடன் இலங்கை சென்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கை குழுக்கி சிங்கள இனவாதத்திற்கு பச்சைக் கொடி காட்டியவர். (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=vNe4OSbU1SM ).
இதனால் பலர் முகம் சுழித்து வெளியேறியமை. இது பற்றி தான் கடுமையாக வினா எழுப்பியதற்கு அவர்கள் தரப்பில் `இது ஒரு தந்திரோபாயம், இதனால் எமக்கு பாதுகாப்பு அதிகம்` என்று கூறப்பட்டமை !!.
4. சில வாரங்களிற்கு முன்பு `பரதேசி`திரைப்படம் பற்றி மீட்டர் குமார் // கிறிஸ்த்துவதத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் இந்த காட்சிக்கு எதிராக கிறிஸ்த்தவர்கள் வழக்கு தொடர் வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு..// என எழுதி கிறிஸ்த்துவர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டுவதன் மூலம் சம உரிமைக் கட்சியின் கொள்கைகளை அப்பட்டமாக நிராகரித்துள்ளார்.
இவ்வாரான இவர்களின் இரட்டைத்தன்மையும், மக்களை ஏமாற்றுவதும் தாங்க முடியுதில்லை…..
செய்வினையும் செயற்பாட்டுத் தினையும்..
…………………………………..
…………………………………..
‘ osted on 05/22/2013 at 12:25
அசோக் அவர்களுக்கு,
சிறு தம்பி எஸ்.எம்.நியூட்டன் பற்றி நீங்கள் கோபமாக `மோசமான அரசியல் கலாச்சாரத்தையும், பண்பையையும், நடத்தைகளையும் கொண்ட மாபியா` என எழுதியதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாவம் அவர் ஒரு நாரதர். இவர் செய்யும் கலகங்களைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் எதிரிகளை போட்டுத்தள்ளுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. உள்வீட்டுக்கு கல் எறிவது தான் இவருடைய சிறப்பு, அழகு,ஸ்பெசாலிட்டி எல்லாமே.
இது பற்றி ஆதாரங்களுடன் இனியொருவில் முன்னரும் எழுதியுள்ளேன். தற்போதய உள்வீட்டு பரப்புரை இதோ……
1. நோர்வே சிறியர் இலங்கையில் புளொட் அமைப்பில் இருந்த போது சைக்கிள் செல்வராசனை தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் வைத்து பலரும் பார்திருக்க கைது செய்து இழுத்து சென்றுள்ளார். ஆனால் 25ஆண்டுகள் கடந்த பின்னரும் சைக்கிள் செல்வராசன் உயிருடன் திரும்பி வரவில்லை, அவர் பற்றிய எந்தத் தகவழும் இது வரை குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை.
இது பற்றி சிலர் புலத்தில் வைத்து நோர்வே சிறியரிடம் கேட்ட போது இவர் தான் தெல்லிப்பளை ஊர்ப்பக்கமே வந்ததே கிடையாது என்று சாதிக்கிறார்.
சைக்கிள் செல்வராசனின் மறைவுக்குக் நேரடிக் காரணமான இவரை பு.ஜ.ம.முன்னணி தலைவராக நோர்வேயில் சட்டபூர்வமாகப் பதிவு செய்துள்ளது எந்த வகையில் நியாயமானது? (ஆதாரம்: http://www.purehelp.no/company/details/996514749 )
2. சாதியத்தை எதிர்ப்பதாகக் கூவித்திரியும் இவர்கள் நடமுறையில் எதுவுமே செய்வதில்லை. உதாரணத்திற்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ ஒரு சம்பவத்துக்காக குய்யோ முய்யோ என குதித்து படம் காட்டும் இவர்கள், கூப்பிடு தூரத்திலிருந்து சாதியத்தை தினம் தினம் கேவலப்படுத்தும் நோர்வே சேதுவை இது வரை கண்டித்தது இல்லை. இது பற்றி தான் கேள்வி எழுப்பிய போதெல்லாம் மீட்டர் குமாரும், இராயாகரனும் தட்டிக்கழித்து வருகின்றனர்.
3. சம உரிமைக் கட்சியை நோர்வேயில் ஆரம்பிப்பதற்கு எந்த கொள்கையோ கோட்பாடுகளோ இல்லாதவர்களைக் கொண்டு உருவாக்கியமை. இது பற்றி தான் கடுமையாக எதிர்த்தபோதும் இதன் குழுத் தலைவராக பிறேம் என்பவரை நியமித்தது. இவர் சில மாதங்களிற்கு முன்னர் தான் நோர்வேயில் இருக்கும் இலங்கைக்கான தூதுவருடன் இலங்கை சென்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கை குழுக்கி சிங்கள இனவாதத்திற்கு பச்சைக் கொடி காட்டியவர். (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=vNe4OSbU1SM ).
இதனால் பலர் முகம் சுழித்து வெளியேறியமை. இது பற்றி தான் கடுமையாக வினா எழுப்பியதற்கு அவர்கள் தரப்பில் `இது ஒரு தந்திரோபாயம், இதனால் எமக்கு பாதுகாப்பு அதிகம்` என்று கூறப்பட்டமை !!.
4. சில வாரங்களிற்கு முன்பு `பரதேசி`திரைப்படம் பற்றி மீட்டர் குமார் // கிறிஸ்த்துவதத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் இந்த காட்சிக்கு எதிராக கிறிஸ்த்தவர்கள் வழக்கு தொடர் வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு..// என எழுதி கிறிஸ்த்துவர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டுவதன் மூலம் சம உரிமைக் கட்சியின் கொள்கைகளை அப்பட்டமாக நிராகரித்துள்ளார்.
இவ்வாரான இவர்களின் இரட்டைத்தன்மையும், மக்களை ஏமாற்றுவதும் தாங்க முடியுதில்லை…”
Mjhuk;: gpd;Dhl;lk; (https://inioru.com/?p=35402#comment-32886)
……………….
1.
செல்வராசன் பற்றிய வரலாறு இதுவரை ‘இனி ஒருவிலும்’ வெளிவரவில்லை! (பலருக்குத் தெரியாதது.. இவர் தெல்லிப்பளை ஆஸ்பத்திரி சைக்கிள் பாக்கோரின் நபராக இருக்கலாம் எனக் கருதுகிறேன்!…)” ‘சிறியர் புளட்டில் எப்படி இருந்தார்’ என்பது அசோக்கின் அரசியலுக்குப்புரியாததுதான் வேடிக்கை! (புளட்டில் இராணுவ நடவடிக்கைளை அதன் ஏதாவது பகுதி அமைப்பு செய்ததுண்டா?) புளட்டின் இராணுவ அட்டகாசமே பிரசித்தமானது… இதுவே முதலாவது இலக்கியமும் ஆகியது..
..
இதற்கான இவர்களின் வரலாற்று ஆதாரம்:
https://inioru.com/?p=35402#comment-32886)
போலியான வக்கிரமான ..((மூல ஆதாரம்: http://www.purehelp.no/company/details/996514749))
2: ” கூப்பிடு தூரத்திலிருந்து சாதியத்தை தினம் தினம் கேவலப்படுத்தும் நோர்வே சேதுவை இது வரை கண்டித்தது இல்லை. இது பற்றி தான் கேள்வி எழுப்பிய போதெல்லாம் மீட்டர் குமாரும், இராயாகரனும் தட்டிக்கழித்து வருகின்றனர்.”
இதுபற்றி…
நான் குமார். குறிப்பிட்டநபர்: ‘கணேசன்’ எப்போது, எங்கே, எப்படி?? கேள்வி எழுப்பினாய்? என்பதை பகிரங்கமாக விடையளிக்கவும்…
இதுபற்றி…
நான் குமார். குறிப்பிட்டநபர்: ‘கணேசன்’ எப்போது, எங்கே, எப்டி?? கேள்வி எழுப்பினாய்? என்பதை பகிரங்கமாக விடையளக்கவும்…
3: ”சம உரிமைக் கட்சியை நோர்வேயில் ஆரம்பிப்பதற்கு எந்த கொள்கையோ கோட்பாடுகளோ இல்லாதவர்களைக் கொண்டு உருவாக்கியமை. இது பற்றி தான் கடுமையாக எதிர்த்தபோதும் இதன் குழுத் தலைவராக பிறேம் என்பவரை நியமித்தது. ”
நோர்வேயில் சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்கள்! என்.டீ.பீ. எவ்ஃ தான்!
இதைப்பற்றி ”கடுமையாக எதிர்த்த நீ யார்? என்பதை என் டீ பீ எப்ஃக்கு சொல்ல முடியுமா??
எனது பின்னூட்ட தோரத்தின் படி…
4: ”சில வாரங்களிற்கு முன்பு `பரதேசி`திரைப்படம் பற்றி மீட்டர் குமார் // கிறிஸ்த்துவதத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் இந்த காட்சிக்கு எதிராக கிறிஸ்த்தவர்கள் வழக்கு தொடர் வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு..// என எழுதி கிறிஸ்த்துவர்களை இந்துக்களுக்கு எதிராக கொள்கைகளை அப்பட்டமாக நிராகரித்துள்ளார்.”
எனது முகப்பில் பலரது கருத்துக்களைச் செருக்கியுள்ளளேன். ( உரிமையாகச் சொல்வதென்றால்: நான் ஒரு இலங்கைக் கிறீஸ்தவன்! ) குறிப்பாக: தமிழ் இலக்கியத்தாலும் பிறவாலும் வடக்கில் ஒடுக்கப்பட்ட ( சிவத்தம்பியின் தமிழ் இலக்கிய ஆய்வு!) நான் இந்துக்களின் எல்லா சிவகரடியாலும் பாதிக்கப்பட்டவன். எனது அப்பனின் அப்பன் ஓர் இந்து! இவனின் மதமாற்றத்தை நான் எதிர்தாலும் அவனின் கடைசி வசனம்: எதார்தமானது…
(இது மதங்களை நம்பும் மகா புரிசர்களுக்கு!)
பி.கு: ‘பரதேசி’ படத்துக்கும் இலங்கையில் இருக்கும்: இந்து – கீற்தவ முரண்பாட்டும்க்கும் ஏதாவது நடைமுறை ஏதார்தம் உள்ளதா??
” சிவசிவா ஏசுவையும் மறக்கலாமோ!”
காட்சி 1.
அரச சபையில் ஈழமாமன்னன் முழியை சுழட்டிய படி இருக்கின்றான்.
மந்திரிகளும் ராஜதந்திரிகளும் கைகளை ப்பிசைந்தபடி இருக்கின்றனர்.
மன்னன் பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை சிம்மாசனத்தை விட்டு எழுந்து
” கணேசன்’ எப்போது, எங்கே, எப்படி?? கேள்வி எழுப்பினாய்? என்பதை பகிரங்கமாக விடையளிக்கவும் … யார் நீ… யார் நீ?… ”
என்று கர்ச்சித்துவிட்டு மீண்டும் அமர்ந்து கொள்கிறார்.
இதைப்பார்த்து மந்திரிகளும் ராஜதந்திரிகளும் வந்த சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கிக் கொள்கின்றனர்.
மாமன்னன் சைகை செய்ததும் காவலர்கள் எட்டித்திசைகளுக்கும் ஓடுகின்றனர்.
இதைப் பார்த்ததும் மந்திரிகளுக்கும் ராஜதந்திரிகளுக்கும் தம்மை நோக்கி யாராவது கை காட்டிவிடுவார்களோ என்று பயம் பற்றிக்கொள்கிறது…….
காட்சி 2.
அந்தப்புரத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட சொகுசுக் கட்டிலில் ஈழமாமன்னன் சொக்கிப்போய் நித்திரையில் இருக்கின்றார்.
“மீட்டர் மன்னனா!..மீட்டர் மன்னன்!..நீர் கொலைவெறியொடு நாள் முழுவதும், நாடு முழுவதும் சல்லடை போட்டுத்தேடும் நபர் நான்தான்..உனது மனசாட்சி தான் நான்!..” குரல் கேட்டது.
மன்னர் திடுக்குற்று எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். யாரையும் காணவில்லை.
அப்போது காற்றில் ஒரு ஓலை மிதந்து வந்து மன்னரின் மடியில் விழுந்தது.
அதில்
“மனசாட்சி என்று ஒன்று இருந்தால்
அல்லது,
அது கொலை செய்யப்படாமல் இருந்தால்
அல்லது,
அது தற்கொலை செய்யாமல் இருந்தால்
அல்லது,
அது விற்பனை செய்யப்படாமல் இருந்தால்
அல்லது,
அது மீட்டருக்கு விடப்படாமல் இருந்தால்
நிலையான நிம்மதி கிடைக்கும்…..” என்றிருந்தது.
காவலாளியை கூப்பிட்டு ” தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசத்தை அழைத்து வா..” என்றார்.
தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசம் கையில் சோமபானப் போத்திலுடன் தள்ளாடி தள்ளாடி வருகிறான்.
ஈழமாமன்னனைக் கண்டதும் “மன்னா நமது புரட்சிப் படைகள் விடுதலைப்புலிகளை சுற்றிவளைத்து புரட்சிகர கோசங்களை எழுப்பத்தொடங்கியுள்ளனர்……எமது புரட்சிப்படையில் இணைந்து கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு தூது அனுப்பியுள்ளோம்……பொதுபல சேனா அமைப்பினர் எமது அமைப்பை நட்பு அமைப்பாக அறிவித்துள்ளனர்…..”
மன்னர் ஓலையை காட்டினார்.
அதைப்படித்துவிட்டு தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசம் விழுந்து விழுந்து சிரிக்கலானார்.
கடுப்பாகிய மன்னர் “தண்டனைத் தளபதியாரே காலை சூரிய உதயத்திற்கு முன்னர் ஓலை எழுத்தாளர்கள்,இணைய எழுத்தாளர்கள் அனைவரையும் இழுத்து வந்து சிரச்சேதம் செய்துவிடும்….சீ நிம்மதி கெட்டுவிட்டது..” என்றார்.
இதுவரை காலமும் இதற்காகவே காத்திருந்தது போல் “இது என் பாக்கியம் மன்னா!..” என்றான் தண்டனைத் தளபதி எஸ்.எம்.!
ஈழமாமன்னர் மீண்டும் தனது சொகுசுக் கட்டிலில் எறி, தான் எழுதி வைத்திருக்கும்
`மக்கள் புரட்சி வாழ்க`
`மாவோ வாழ்க`
`தொழிலாளர் வாழ்க` சுலோகங்களை வாசித்துவிட்டு
“நாளை மேலும் பல சுலோகங்கள் எழுதவேண்டும்” என நினைத்தவாறு புரட்சிக் கனவில் மூழ்குகின்றார்……
நேசம்மிகு தண்டனைத் தளபதி எஸ்.எம் அருள்பாலிக்க இணையத்தை திறந்து தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்குகிறான்……
(தற்காலிகமாக முற்றும்.)
அசோக்
காட்சி 1.
அரச சபையில் ஈழமாமன்னன் முழியை சுழட்டிய படி இருக்கின்றான். மந்திரிகளும் ராஜதந்திரிகளும் கைகளை ப்பிசைந்தபடி இருக்கின்றனர்.
மன்னன் பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை சிம்மாசனத்தை விட்டு எழுந்து
” கணேசன்’ எப்போது, எங்கே, எப்படி?? கேள்வி எழுப்பினாய்? என்பதை பகிரங்கமாக விடையளிக்கவும் … யார் நீ… யார் நீ?… ”
என்று கர்ச்சித்துவிட்டு மீண்டும் அமர்ந்து கொள்கிறார்.
இதைப்பார்த்து மந்திரிகளும் ராஜதந்திரிகளும் வந்த சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கிக் கொள்கின்றனர்.
மாமன்னன் சைகை செய்ததும் காவலர்கள் எட்டித்திசைகளுக்கும் ஓடுகின்றனர். இதைப் பார்த்ததும் மந்திரிகளுக்கும் ராஜதந்திரிகளுக்கும் தம்மை நோக்கி யாராவது கை காட்டிவிடுவார்களோ என்று பயம் பற்றிக்கொள்கிறது…….
காட்சி 2.
அந்தப்புரத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட சொகுசுக் கட்டிலில் ஈழமாமன்னன் சொக்கிப்போய் நித்திரையில் இருக்கின்றார்.
“மீட்டர் மன்னனா!..மீட்டர் மன்னன்!..நீர் கொலைவெறியொடு நாள் முழுவதும், நாடு முழுவதும் சல்லடை போட்டுத்தேடும் நபர் நான்தான்..உனது மனசாட்சி தான் நான்!..” குரல் கேட்டது.
மன்னர் திடுக்குற்று எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். யாரையும் காணவில்லை.
அப்போது காற்றில் ஒரு ஓலை மிதந்து வந்து மன்னரின் மடியில் விழுந்தது.
அதில்
“மனசாட்சி என்று ஒன்று இருந்தால்
அல்லது,
அது கொலை செய்யப்படாமல் இருந்தால்
அல்லது,
அது தற்கொலை செய்யாமல் இருந்தால்
அல்லது,
அது விற்பனை செய்யப்படாமல் இருந்தால்
அல்லது,
அது மீட்டருக்கு விடப்படாமல் இருந்தால்
நிலையானநிம்மதி கிடைக்கும்…..” என்றிருந்தது.
காவலாளியை கூப்பிட்டு ” தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசத்தை அழைத்து வா..” என்றார்.
தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசம் கையில் சோமபானப் போத்திலுடன் தள்ளாடி தள்ளாடி வருகிறான்.
ஈழமாமன்னனைக் கண்டதும் “மன்னா நமது புரட்சிப் படைகள் விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்து புரட்சிகர கோசங்களை எழுப்பத்தொடங்கியுள்ளனர்……எமது புரட்சிப்படையில் இணைந்து கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு தூது அனுப்பியுள்ளோம்……பொதுபல சேனா அமைப்பினர் எமது அமைப்பை நட்பு அமைப்பாக அறிவித்துள்ளனர்…..”
மன்னர் ஓலையை காட்டினார்.
அதைப்படித்துவிட்டு தண்டனைத் தளபதி எஸ்.எம்.அருள்நேசம் விழுந்து விழுந்து சிரிக்கலானார்.
கடுப்பாகிய மன்னர் “தண்டனைத் தளபதியாரே காலை சூரிய உதயத்திற்கு முன்னர் ஓலை எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் அனைவரையும் இழுத்து வந்து சிரச்சேதம் செய்துவிடும்….சீ நிம்மதி கெட்டுவிட்டது..” என்றார்.
இதுவரை காலமும் இதற்காகவே காத்திருந்தது போல் “இது என் பாக்கியம் மன்னா!..” என்றான் தண்டனைத் தளபதி எஸ்.எம்.!
ஈழமாமன்னர் மீண்டும் தனது சொகுசுக் கட்டிலில் எறி, தான் எழுதி வைத்திருக்கும்
`மக்கள் புரட்சி வாழ்க`
`மாவோ வாழ்க`
`தொழிலாளர் வாழ்க` சுலோகங்களை வாசித்துவிட்டு
“நாளை மேலும் பல சுலோகங்கள் எழுதவேண்டும்”
என நினைத்தவாறு புரட்சிக் கனவில் மூழ்குகின்றார்……
நேசம்மிகு தண்டனைத் தளபதி எஸ்.எம் அருள்பாலிக்க இணையத்தை திறந்து தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்குகிறான்……
(தற்காலிகமாக முற்றும்.)