Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும் : ந. இரவீந்திரன்

இனியொரு... by இனியொரு...
04/27/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

சில இணையத் தளங்களில் வந்த கருத்தாடல்கள் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் சரியைக் கண்டறிய உதவும் என நம்புகிறேன் நன்றி. இந்தியாவில் ஆட்சியதிகார பீடமேறியுள்ள பிராமண மற்றும் ஆதிக்க சாதிகளின் தேசியங்களுக்கு எதிராக தலித் பிரச்சினை எதிர் பண்பாட்டு இயங்கங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆதிக்க சாதி ஒதுக்கப்பட்ட (தலித்) சாதி முரண்பாடு பிரதானமாகியுள்ள நிலை காரணமாக அங்கு ஆதிக்க சாதிகளுக்குரியதும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குரியதுமான இரட்டைத் தேசியம் நிலவுவதாகப் பேசுவதில் பொருளுண்டு. இன முரண்பாடு கூர்மையாகியுள்ள இலங்கைக்கு இதனை இறக்குமதி செய்யவேண்டியதில்லை என்ற குரல் கவனிப்புக்குரியது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அங்கே ஆதிக்க சாதிகள் பிரியும் வன்கொடுமைகளை விடவும் வலிமையாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழ் மக்கள் இங்கே ஒன்றிணைந்து ஒரே தேசிய இனம் என்று ஐக்கியப்பட்டு போராடவேண்டியுள்ள போது இரட்டைத் தேசியப் பிளவாக்கக் கோட்பாடுப் பாதகங்களை ஏற்படுத்தாதா?

நிதர்சனமாகப் பிளவுபட்டிருக்கும் இரு வேறுபட்ட நலங்கள் என்ற புரிதலின் பேறாக வெளிப்படும் கோட்பாடு தான் இரட்டைத் தேசியம் என்பது. மாறாக இக் கோட்பாட்டை முன்னிறுத்தி இயங்குவதால் புதிதாக எந்தப் பிளவுபடலும் ஏற்படப்போவதில்லை. இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் செயற்படும்போது தமது நலன்களுக்குத் தீர்வு கிட்டப்போவதில்லை என்று ஒரு தரப்பு விலகல் கொள்வதால் உள்ளூரப் பலவீனங்கள் வலுப்பட்டு தோல்விகள் தவிர்க்கவியலாதனவாகும். மாறாக இரட்டை தேசியத்துக்குரிய இரு தரப்பினரது நலன்களின் வேறுபாட்டை மனங்கொள்வதால் அவை இரண்டிலும் மக்கள் விடுதலைச் செல்நெறிக்குரியவற்றை கையேற்று போராடும்போது வலுவான ஒற்றுமை சாத்தியமாகி வெற்றியை நோக்கி முன்னேற இயலுமாயிருக்கும்.

ஈழத் தமிழ்த் தேசிய பிரச்சினையில் இதனை எவ்வகையில் பிரயோகிப்பது என்ற தேடலின்றி அடைந்தால் தனிநாடு. இல்லையேல் சுடுகாடு எனும் வறட்டு வாதம் முன்னெடுக்கப்படுகையில் மக்கள் விரோத சக்திகள் ஆதாயம் பெற்று விடுதலை தவறிக்கெட்டுச் சீரிழியும் அவலமே பெருகும். சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கான அவசியமுள்ள இந்தியாவில் இரட்டைத் தேசியம் பற்றிப் பேசட்டும். எமது தேசியப் பிரச்சினையில் இது குறித்து பேசமாட்டோம். என்ற கதவடைப்பு வாதத்தைத் தகர்த்தெறிந்து சபா நாவலன் இனியொரு இணையத் தளத்தில் இது தொடர்பில் விவாதிக்க முன்வந்திருப்பது ஆரோக்கியமான ஒரு அறிகுறி. மறுத்தோடியபோதிலும் அவரது தர்க்கங்களும் கருத்துரையாளர்களது வாதங்களும் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வலுவேற்றுவனவாயே அமைந்துள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கூட்டு விவாதம் இதனை மேலும் செழுமைப்படுத்தும் எந்தவொரு புதிய கண்டடைதல்களும் கூட்டு முயற்சியின் பேறேயேல்லாமல் தனிமனித முயற்சிகள் பெரிதாக எதனையும் சாதித்ததில்லை. (தனி மனிதனின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த சரியான புரிதல் இன்மை பல பின்னடைவுகளை அது குறித்த கோட்பாட்டுத் தெளிவை மிகச் சிறப்பாக வரையறைப்படுத்தியிருந்த மார்க்சிய இயக்கத்துக்கும் ஏற்படுத்தி இருந்தது. தேசிய இனப் பிரச்சினை குறித்த தேடலும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. (இது குறித்து பின்னாலே பார்க்கலாம்)

இரட்டைச் தேசியம் பற்றிய தேடல் தமிழக நகர்ப்புற சிந்தனையாளர்களுக்குரியது என சபா நாவலன் சொல்வதில் ஒரு சிறு பகுதி உண்மையுண்டு. கடந்த இரு தசாப்தங்களாக அயோத்திதாசர் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரது மறு கண்டுபிடிப்பும் அபேத்கரை முன்னிறுத்தி எழுச்சியடைந்த தலித்திய இயக்கமும் இந்தியத் தேசியம் என்பதே பிராமண ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த முன்னெடுக்கப்பட்ட சதி என அம்பலப்படுத்தின. பிராமண எதிர்ப்பை முன்னிறுத்திய வெள்ளாளர் முதலியார் நாயக்கர் எனும் ஆதிக்க சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய திராவிடர் இயக்கமும் எண்பதுகளில் எழுச்சிபெற்ற தேவர் வன்னியர் என்ற இடைச்சாதிகள் அரசதிகாரத்தில் பங்கேற்றமையும் தலித் விரோதங்களுடன் கூடியனவாகவே இருந்தன என்பதனையும் தலித்தியம் அம்பலப்படுத்தியிருந்தது. இவ்வாறு பிராமண ஆதிக்க சாதிகள் இடைச்சாதிகள் என்பவற்றை எதிர்த்து எழுச்சிபெற்ற தலித்தியம் இரு தசாப்தங்களாக இயங்கியபோதிலும் ஏதாயினும் இரு தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த வலுவற்றதாயிற்று. சாதிய நோக்கு மேலோங்கும் போது அருகிலிருக்கும் தன் போன்ற இன்னொரு சாதியையும் நிராகரிக்க வழி கோலுமேயன்றி தலித் ஐக்கியத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பதை தலித்தியம் எழுச்சியுற தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே முன்வைக்க இயலுமாயிற்று.

மாறாக இரட்டைச் தேசியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்தது. வர்க்கப் பார்வையில் சாதியப் பிரச்சினையை அணுகி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சாதி முறை தகரட்டும், சமத்துவம் நீதி ஒங்கட்டும் என்ற 1966 அக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறாகும். இதற்கு வழிசமைத்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 1925 இல் மாணவர் காங்கிரஸ் (பின்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்) மாநாடு எழுச்சியுறுத்திய தேசிய விழிப்புணர்வோடு தொடர்புடையதாகும். இருபதாம் ஆண்டுகளிலிருந்து எழுச்சி பெற்ற இந்த மக்கள் நலனாட்ட வரலாற்று முன்னெடுப்பை ஆதிக்க சாதியான வெள்ளாளர் உட்பட அனைத்து சாதியினரும் சாத்தியப்படுத்தினர். இதன் பேறாக 40 களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சிறுபான்மைத் தமிழர் மகா சபை என்பதாக ஒன்றுபட்ட அமைப்பாக்கம் கொள்வது சாத்தியமாயிற்று. அக்டோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறான தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டுமன்றி ஆதிக்க மற்றும் இடைச் சாதியினரும் அங்கம் பெறும் அமைப்பை சாத்தியமாக்கி சாதியத்துக்கெதிரான வலுவான போராட்டங்களை அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக நாட்டம்மிக்கோரும் முன்னெடுக்க வாய்ப்பேற்படுத்தியிருந்தது.

இந்தச் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை ஈழத் தமிழ்த் தேசியம் ஆதரித்திருந்திருக்க வேண்டும். இருபதாம் ஆண்டுகளில் எழுச்சியுற்ற தமிழுணர்வாளர்கள் இலங்கைத் தேசிய அக்கறையுடன் சாதியத் தகர்ப்பையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இந்தியத் தேசிய விடுதலைக் கொந்தளிப்பின் பகுதியாகவும் சர்வதேச உணர்வின் பகுதியாகவும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் விடுதலையை அவர்கள் கண்டனர். இதனை உடைத்துக்கொண்டு முப்பதுகளில் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் யாழ்.வெள்ளாளத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் ஒரு பிரிவை தொடக்கி வளர்க்க முற்பட்டபோதுதான் இரட்டைத் தேசியப் பிளவு நேர்ந்தது. எமது தேசியம் அந்நியரிடமிருந்து விடுதலை பெறுவதும் நிலவுடைமைச் சமூக முறைமைக்கான பண்ணையடிமைத்தனத்தைத் தகர்ப்பதும் என்ற இரு பிரதான கடமைகளைக் கொண்டிருந்தது. யாழ்.வெள்ளாளத் தேசியம் பண்ணையடிமைத்தனம் தகர்த்தப்படுவதற்கு எதிராக இருந்தவாறே பேரினவாதத்திலிருந்து விடுதலை பெறுவது பற்றி அக்கறைகொண்டிருந்தது. பின்னாலே செல்வநாயகம் அமிர்தலிங்கம் தலைமையிலான யாழ்.வெள்ளாளத் தேசியமும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே செயற்பட்டது. அறுபதுகளில் பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க்கும் தேசியப் பணியான சாதி ஒழிப்புப் போராட்டமே பிரதான செல்நெறியாக அமைந்தபோது ஈழத் தமிழ்த் தேசியம் அதனை ஏற்பதற்கு மாறாக இவ்வகையில் யாழ். வெள்ளாளத் தேசிய மாய்த்தன்னை அடையாளப்படுத்தியிருந்தது.

பேரினவாதக் கொலை வெறித் தாண்டவம் ஈழத் தமிழ்த் தேசிய எழுச்சியைப் பிரதான வரலாற்றுப் போக்காக ஆக்கிய பின்னர் தமிழ்த் தேசிய பிரச்சினையே பேசுபொருளாயிற்று. சாதித் தகர்ப்பு பற்றிய அக்கறை அவசியமற்றது போல பாசாங்கு செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்த சாதித் தகர்ப்புப் போராட்டம் தமிழ்த் தேசிய விரோதம் என்பது போலக் காட்டும் எத்தனிப்புகள் வலுப்பட்டன. அப்போதைய விவாதங்களின் போதுதான் இரட்டை தேசியம் பற்றி புரிதல் கொள்ள இயலுமாயிற்று.

வரலாற்று துரோகிகளாக இருந்த ஈழத் தமிழ்த் தேசியர்கள் அன்றைக்குரியதான வரலாற்றைக் கையேற்று சாதிய முறைமையைத் தகர்ப்பதில் ஆதிக்க சாதியினருட்பட அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்திய வரலாற்று முன்னுதாரணமற்ற சாதனையைச் சாத்திய மாக்கிய கம்யூனிஸ்ட்டுகளை எப்படித் தமிழ்த் துரோகிகள் என முத்திரை குத்த இயலும்?

பிளவற்ற தமிழ்த் தேசியமாயின் கம்யூனிஸ்ட்டுகளின் அந்த வரலாற்றுப் பங்களிப்பால் தமிழினம் ஒன்றுபட வாய்ப்பேற்படாமல் மகிழ்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை பெரும்பான்மையாய் அணிதிரட்டியிருந்த கம்யூனிஸ்ட்டுகளையும் அரவணைத்தவாறு தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். சாதித்தகர்ப்புப் போராளிகளான கம்யூனிஸ்ட்டுகள் எவரும் பேரினவாத சக்தியுடன் ஐக்கியப்பட்டிருக்கவில்லை சகல அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் மார்க்கம் என்கிற வகையில் சாதியத் தகர்ப்பை அங்கீகரிக்கும் தமிழ்த் தேசியத்துடன் ஒன்றுபட்டு சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் தடை எதுவுமில்லை.

ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு ஏகாதிபத்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விரோத ஐ.தே.க.வை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். இத்தகைய பிற்போக்கான யாழ்.வெள்ளாளர் தேசிய வடிவம் கொண்ட ஈழத் தமிழ்த் தேசியம் ஐ.தே.க. உடன் கொண்ட கள்ள உறவினால் 1977 ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர்.தலைமையிலான ஐ.தே.க. அரசில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனபோதிலும் ஜே. ஆரின் கூட்டாளியாக அமிர்தலிங்கத்தை செயற்பட வழிப்படுத்தியது. அதன் பேறாக ஈழப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தவறுகிறார் எனக் குற்றம்சாட்டி அனைத்து இளைஞர் இயக்கங்களும் அவரிலிருந்து பிரிய நேர்ந்தது. இறுதியாகப் பிரிந்த அவரால் அன்புடன் தம்பி என அழைக்கப்பட்டு பொதுவாகவே தம்பி என அடையாளம் பெற்ற பிரபாகரன் அணியினரால் அவரது துர் மரணம் நேர்ந்தது என்பது உலகறிந்த உண்மை.

வர்த்தக சமூகமொன்றில் பண்ணையடிமைத் தகர்ப்பு அந்நிய சக்தியிடமிருந்து விடுதலை என்ற தேசியத்தின் இரு பணிகளும் பிளவுபட்ட தேசியச் செல்நெறிகளாயின்றி ஒரே தேசிய எழுச்சியின் பகுதிகளாயிருக்க இயலும், சாதி ஒடுக்குமுறையை சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறையாக உடையதான எமது சாதியச் சமூகத்தில் ஆதிக்க சாதியினருக்கு அந்நியரிடமிருந்து விடுதலை பெற்று ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழ நினைப்பதில் மட்டுமே நாட்டம் இருக்கும்.அவர்கள் பண்ணை அடிமைத்தனத்தைத் தகர்ப்பதைத் கையேற்காதது மட்டுமன்றி அதற்கென முனையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அக்கறைகளுக்கு எதிராகப் போராடவும் வேண்டியிருந்தது. அவர்களுக்கு அடிபணிந்து உழைக்க வேண்டியவர்களுக்கு அடிமைத்தளை நீக்கம் செய்யமுனைந்தால் தமது நலன் பாதிக்கப்படும் என்பது ஆதிக்க சாதியினர் பிரச்சினை. ஏகாதிபத்தியத்தைத் தகர்க்கும் அதேவேளை, பண்ணையடிமைகளின் அடிமைத் தளைகளைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே ஆதிக்க சாதியினரின் நலனுக்கு உகந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியமோ பேரினவாதமோ அவர்களை நேரடியாகச் சுரண்டுவதுமில்லை. ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதும் இல்லை. இவற்றை உயர் சாதியினரே நேரடியாகப் புரிவதனைக் கண்கூடாகப் காண்பதால் தம்மீது ஆதிக்கம்புரியும் சாதியத் தளைகளினின்றும் விடுதலை பெறுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையாகின்றது. ஏகாதிபத்தியம், பேரினவாதம் ஆகியவற்றுடன் கூட்டமைத்தேனும் பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க்க வேண்டும் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனோடு தொடர்புபட்ட அம்சமாகின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களுக்கு நன்மை எதனையும் செய்யாததுடன், சாதி பேதத்தைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது எனக் கூறிய அம்பேத்கரும் அதைவிடவும் கொடுமையாக நடந்துகொண்ட பிராமணத் தேசியத்துக்கு எதிராக பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்க வேண்டியவராக இருந்தார்.

இலங்கையிலும் இதற்கு உதாரணம் உண்டு. சாதியத் தகர்ப்புப் போராட்டம் உக்கிரம் பெற்று வந்தபோது யாழ். வெள்ளாளத் தேசியத்தின் சைவ மேலாதிக்கத்தைச் தகர்க்கும் எண்ணத்துடன் தமிழ் பௌத்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிங்கள அரசின் அனுசரணையோடு பௌத்த சங்கம் வாயிலாக யாழ்ப்பாணத்தில் பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் அதில் இணைந்து கொண்டனர். வைரமுத்து (ஐயாத்துரை) அவர்களின் தலைமையிலான அந்த இயக்கம் நூறு மாணவர்களைப் பிக்குகளாக பயிற்சிபெற தென்னிலங்கைக்கு அனுப்ப இயலுமாயிருந்தது. இந்தப் போக்கினை ஆரம்பத்தில் டானியல் கூட ஆதரித்திருந்தார். இது தொடர்பில் யோகரட்ணம் எழுதியுள்ள தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் எனும் நூல் கவனிப்புக்குரியது.

சாதியத் தகர்ப்பில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஆகியவற்றோடு சமாதையாக மூன்றாவது செல்நெறியாக இதனை கணிக்க இயலாது யோகரட்ணம் தனது நூலில் அவ்வாறு சொல்கிறார். என்றால் அவ்வாறு பிக்கு ஆகும் நோக்குடன் பயிற்சி பெறச் சென்ற நூறு மாணவர்களில் ஒருவராக அவர் இருந்து அதன் தீவிர செற்பாட்டாளராக அவர் இருந்த தாக்கத்தின் பேறு அது. அக்காலத்தில் வலுவோடு தமிழ்ப் பௌத்தம் இயங்கியமையை நிராகரிக்க இயலாது.அந்த வகையில் இரட்டைத் தேசியத் தன்மையோடு யாழ்.வெள்ளாளத் தேசியத்துக்கு எதிர்த் தேசியமாக பௌத்த தலித் தேசியம் எழுச்சிபெற வாய்ப்பிருந்தது. அது சிங்களப் பேரினவாதத்துக்குக் காட்டிக்கொடுக்கும் நோக்குடையதாயன்றி சைவ வெள்ளாள சாதி அகம்பாவத்தை தகர்க்கும் ஒரு முயற்சி என்பதை யாழ். வெள்ளாளத் தேசியர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். மக்கள் விடுதலையை நேசிக்கும் எவரும் அன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியினர் ஆதிக்க சாதித் தேசியத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதச் சதி வலையில் வீழ்த்திருக்கக்கூடிய தலித் எதிர்த் தேசியம் சாத்தியமாகும் புற நிலை நிலவியது என்பதைக் காணத் தவறமுடியாது.

அவ்வாறு ஆகாமல் போனமை கம்யூனிஸ்ட்டுகளின் சரியான அணுகுமுறையின் பேறு. டானியல் பௌத்த மதமாற்றத்தை ஆரம்பத்தில் ஆதரித்திருந்தது பற்றி மேலே குறிப்பிட்டிருந்தோம். அதைவிடவும் அதிலிருந்து ஏன் பின் வாங்கினார் என்பதுதான் மிகுந்த கவனிப்புக்குரியது. கம்யூனிஸ்ட்டு கட்சி அத்தகைய மத மாற்றத்தை வன்மையாகக் கண்டித்து நிராகரித்திருந்தது. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பதால் அப்படி எனக் கருதலாம். அப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு ஐ.தே.க. பிற்போக்கு சக்திக்கு எதிரான முற்போக்கு அணியில் பௌத்த பிக்குகள் மிக அதிகமாய் இருந்தனர். யோகரட்ணம் பிக்கு பயிற்சியில் சந்தித்த முற்போக்கான பிக்கு குறித்து கூறியிருந்தமையையும் அவரிடம் நூலுக்கான ஆசியுரை பெற்றமையையும் அவதானிக்க இயலும். கம்யூனிஸ்ட்டுகளாக பல பிக்குகள் இருந்துள்ளனர். அவ்வாறிருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்துக்கு மாறுவதனைக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை சொந்தச் சமூகத்தில் உரிமையை வென்றெடுக்கும் வகையில் கோயில் நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வகையில் உரிமை வென்றெடுக்கப்படும் சாத்தியம் வலுத்து வந்தமையால் பௌத்தமாற்றம் வலுவிழந்து கம்யூனிஸ்ட் அணிகளான சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலும் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்திருந்த அந்தப் போராட்டத்தைக் கம்யூனிஸ்ட் தலைமை தாங்கியபோது அது வர்க்க ரீதியான அணி திரட்டப்பட்டிருந்தது அனைத்து சாதிப் பிரிவினருக்கும் அப்போராட்டத்தில் பங்கேற்க வகை செய்திருந்தது. குறிப்பாக புரட்சி மார்க்கத்தை ஏற்றிருந்த தீ ஒ வெ இயக்கத்துக்கு தலைமையேற்றிருந்த சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஒருபோதும் பங்கேற்றதில்லை.அந்த வகையில் பேரினவாதத்திற்குத் தம்மையறியாமலே ஏதாயினும் விட்டுக்கொடுப்புக்கு உள்ளாகியதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமலே சாதியத்துக்கு எதிரான அறுபதுகளின் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இது அன்றைய பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்தபோது ஒடுக்கப்பட்டோருக்கான (தலித்) எதிர்த் தேசியமாக வடிவங்கொள்ளவில்லை. விடுதலை பிளவுபடாதது என்கிற வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கும்போது எந்தச் சாதிப் பிரிவினருக்கும் எதிராக அமையாது உயர் சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கான விடுதலையின் கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறின் சாதியத்துக்கு எதிரான அந்தத் தேசியப் போராட்டம் வர்க்கப் பார்வையில் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட காரணத்தால் இரட்டைத் தேசியப் பிளவுக்கு அவசியமின்றி அனைத்துத் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருந்தது.

அவ்வாறாயின் தமிழ்த் தேசியத்தின் கோரிக்கைகளை ஏன் உள்ளடக்கியிருக்கவில்லை? பல தடவைகள் சுட்டியிருந்தது போல பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்த சாதித் தகர்ப்புத் தேசியக் கடமைக்கு எதிராக யாழ். வெள்ளாளத் தேசியமாய் வடிவங்கொண்ட ஈழத் தமிழ்த் தேசியம் செயற்பட்டமையால் அதன் தவறை எதிர்க்கும் முனைப்பில் அவசியமான தமிழ்த் தேசியத்தின் பக்கமும் கவனங்கொள்ளாத தவறு நேர்ந்தது. பேரினவாத ஒடுக்குமுறை வலுத்தபோது கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் குறித்த தேடல்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து வலதுசாரிப் பிற்போக்கு ஆதிக்க சாதித் தேசியப் பாஸீஸம் இயங்கிய சூழலில் எதையும் செய்ய இயலாமற் போயினும் இன்றைய தத்துவார்த்த விவாதங்கள் வாயிலாக தமிழ்த் தேசியத்தை ஆதிக்க சாதிப் பிளவாக்கலுக்குள்ளாக்காமல் விடுதலைத் திசை மார்க்கத்தில் முன்னெடுப்பதற்கு இரட்டைத் தேசிய நிதர்சனத்தை வலியுறுத்தி நிற்கிறது மார்க்சிய இயக்கம்.

இரட்டைத் தேசியம் பற்றி மார்க்சிய முன்னோடிகள் எங்கே சொல்லியிருக்கிறார்கள்? இப்படிக் கேட்கிறவர்களே இறக்குமதித் தத்துவம் வேண்டாம் என்று சொல்கிற வினோதங்களையும் பார்ப்போம். மார்க்சியம் இறக்குமதிச் சரக்கில்லைதான். அது ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சுரண்டலற்ற சமத்துவச் சமூகத்தைப் படைப்பதற்கான ஒரு சிந்தனை முறை. அதற்கான முதல் முயற்சி பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்டபோது அந்த அனுபவங்களின் தொகுப்பான மார்க்சியம் அங்கே பிறப்பெடுத்தது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம் பிறந்தது. ரஷ்யப் புரட்சி அதனைச் சாத்தியமாக்கியபோது தனது நாட்டின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த தேசங்கள் பிரிந்து செல்ல உரிமையுடைய சுயநிர்ணயமுடையன என்ற வாக்குறுதியுடன் அவற்றை ஐக்கியப்படுத்தும் வகையில் உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள் என்பதாக பாட்டாளி வர்க்கம் மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட தேசங்களும் சமத்துவம் படைக்கும் புரட்சிக்குரிய சாத்தியக் கூறுடையதாயிருப்பதைக் கூறாமல் கூறியிருந்தது. அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் அல்லாமல் சீனா, கியூபா, கிழக்கைரோப்பிய நாடுகள் என தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாகவே சோசலிச மாற்றியமைத்தலுக்கான சாத்தியம் ஏற்பட முடிந்தது.

இதனை எவ்வாறு புரிந்து கொள்வோம்? ஆளும் சாதி போலவே ஏகாதிபத்தியமும் ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சுரண்டும் வகையில் தேசியத்துக்கும் சாதி முறைக்கும் தொடர்புள்ளதா? இவை கொண்டு எமது சாதிச் சமூகத்தில் சோசலிசம் சிருஷ்டிப்பதற்கான மார்க்கத்தை வகுக்க முடியுமா? தேசிய விடுதலை சோசலிசத்தை எட்டும் சாத்தியம் போல சாதியத் தகர்ப்பு போராட்டம் சோசலிசத்துக்கு இட்டுச் செல்லுமா? பார்க்கவேண்டும்!

நன்றி : தினக்குரல்

தொடர்புடைய பதிவுகள்:

ந.இரவீந்திரனின் இறக்குமமதியான “இரட்டைத் தேசியம்” : சபா நாவலன்
ந.இரவீந்திரனின் இறக்குமமதியான “இரட்டைத் தேசியம்”(2) : சபா நாவலன்
ந.இரவீந்திரனின் இறக்குமமதியான “இரட்டைத் தேசியம்”(3) -ஏகாதிபத்திய சூழலில் தேசியம் : சபா நாவலன்
ந.இரவீந்திரனின் “இரட்டைத் தேசியம்”(இறுதி) – புலம்பெயர் தேசியம் : சபா நாவலன்
பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை : ந.இரவீந்திரன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஹிலாரி கிளிண்டன் ஆசியப் பயணம் : இந்தியாவிற்கும் செல்கிறார்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Presidents Counsel Dr. Jayampathy Wickremaratne said on national television that there should be two yards sticks.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...