மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதன் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயுள்ளது.
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கில் பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் பிதாமகனான ஜே.ஆர் கையாண்ட தந்திரோபாயம் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளதுளூ மக்கள் விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.
இவர்களது கூட்டு தமிழகத் தமிழுணர்வாளர்களுடனானது. இவ்விரு சக்திகளும் எமக்கு உதவுபவர்களா? பிரிவினை இல்லாத சுயநிர்ணய உரிமையை ஏன் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது? எமது வடபிரதேசக் கடல் வளம் தொடர்பான சர்ச்சையிலிருந்து எமது விவாதத்தை முன்னெடுப்போம்.
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடல் எல்லைகளை மீறுவதனால் எமது மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தடைசெய்யப்பட்ட வலைகளை அவர்கள் பாவிப்பதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளின் பிரவேசம் மன்னார், யாழ்ப்பாணம் எனப் பரந்து விரிந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அப்பாலும் சென்றுவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 2011.12.14 அன்று தினக்குரல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற செய்தியின் ஒரு பகுதி. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பட்ஜெட் விவாதத்தின்போது அவையில் ஆற்றிய உரையாக அச்செய்தி அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்ததும் எமது மீனவர்கள் கடற்றொழிலுக்காக அனுமதிபெறும் பாஸ் நடைமுறை இன்னமும் தொடர்வது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சந்தைப்படுத்துவதற்கு முயலும்போது எதிர்கொள்ளும் பாதுகாப்புப் படையின் கெடுபிடிகளையும் அவ்வுரையில் குறிப்பிட அவர் தவறவில்லை.
படையினர் வடபகுதி மீனவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேவேளை, தென்பகுதிச் சிங்கள மீனவர்கள் வடபிரதேசக் கடல் வளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாராளமாக இடமளிப்பதாக அவ்வப்போது செய்திகள் அடிபடுவதையும் அவதானித்து வருகிறோம். ஆயினும், வடபகுதித் தமிழ் மீனவர்கள் தம்மளவில் சிங்கள மீனவர்களிடமிருந்து பெறும் நெருக்கடிகளை விடவும் இந்தியத் தமிழக இழுவைப் படகுகளின் பிரசன்னம் ஏற்படுத்தும் கடல்வள அபகரிப்பால் எதிர்நோக்கும் இடர்பாட்டையே தாங்கவியலாததாகக் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடே பாராளுமன்றத்தில் எழுந்த குரல்.
தமிழக – வடபிரதேச – தெற்கு மீனவர்கள் எனும் முத்தரப்பு நெருக்கடி குறித்து மீனவர் சங்கங்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசியுள்ளனர். கடல்வளப் பயன்பாட்டின் கள நிலவரங்களில் அவர்களிடையே கை கலப்புகள் இடம்பெற்ற போதிலும், ஒரே வர்க்க உணர்வு, மேற்கிளர்ந்து தமக்குள் சுமூகத் தீர்வை எட்டியதோடு, அவ்வப்போது நீடித்த தீர்வுக்காக மீனவர் சங்கங்களின் இத்தகைய சந்திப்புகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது வரவேற்புக்குரியது. அவை திருப்திகரமான முடிவுகளை எட்ட இயலா வகையில் அவர்களது பிரச்சினைகளையும் கடந்த வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளை வளர்ப்பனவாய் உள்ளன.
இன்று பாராளுமன்றத்தினுள் யாழ்- மன்னார் மீனவர்களின் உரிமைக் குரலை எழுப்பும்போது தமிழக மீனவர்கள் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள் இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத சக்திகளால் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாவதைக் கண்டித்துத் தமிழுணர்வாளர்கள் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வேளைகளில் தமிழக மீனவர்கள் அவர்களோடு கைகோர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். ‘சிங்களக் கடற்படை எம்மைத் தாக்குகிறது – உடைமைகளை அபகரிக்கிறது – கொலை செய்கிறது’ எனத் தமிழக மீனவர்கள் போராடும் எந்தச் சந்தர்ப்பங்களிலும், அங்குள்ள தமிழுணர்வாளர்கள் தம்மை ஆதரித்து எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கியதில்லை எனத் தமிழக மீனவர்கள் தமிழுணர்வாளர்கள்மேல் குற்றச்சாட்டு முன்வைப்பதையும் கண்டுள்ளோம்.
இலங்கை வடபிரதேச மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் கெடுதி செய்கிறார்கள் என்பதாலேதான் அவ்வாறு தமிழகத் தமிழுணர்வாளர்கள் தமிழக மீனவர்களுக்கு எந்த ஆதரவையும் காட்டாது இருக்கிறார்களோ? அப்படி ஒரு குற்றச்சாட்டை தமிழுணர்வாளர்கள் முன்வைத்ததில்லை. அவர்களுக்கு உண்மையில் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ, அவர்களைச் சிங்களப் படையினர் கொல்வது பற்றியோ உணர்வு கொள்ள இயலுவதில்லை. அங்கே தமிழுக்கு என்ன அவலம் வந்துவிட்டது? அன்றாட, வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடுகிறவர்களது அற்பப் பிரச்சினைக்கு எல்லாம் தமிழுணர்வைக் கிளர்ந்தெழச் செய்தால் தமிழுக்கு ஓர் அச்சுறுத்தல் நேரும்போது பெரிதாக எதுவும் பண்ணவியலாமல் போய்விடுமே!
வயிற்றுப்பாடுகள் என்ற அற்ப விவகாரங்களுக்கு ஆட்படாத புனிதமான இந்தத் தமிழுணர்வாளர்களில் இரு பிரிவினர் உள்ளனர். எங்கேயும் இருக்க முடிவதைப்போல! தமிழுக்கு அவலம் எனக் கருதி அவசர கோலமாய்த் தீப்பாயும் நிலைவரை செல்கிற உண்மையான உணர்வாளர்கள் – இதனைத் தமது பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களுக்காக முதலீடுகளாக ஆக்கிக்கொள்ளும் போலிகள் என்பன அத்தகைய இரு பிரிவுகள். ஆரம்பத்தில் உண்மை உணர்வாளர்களாய் இருந்து, கால ஓட்டத்தில் போலிகளாய் ஆனவர்களும் உண்டுளூ ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆதாயமே குறியென இருப்பவர்களும் குறையவில்லை. முதல் உந்துதல் போலவே மடியும் வரை உண்மை உணர்வோடு வாழ்ந்தவர்களும் உண்டுளூ போலிகளே பயன்பெறும் அர்த்தமற்ற விவகாரம் இது என விழிப்படைந்து அனுபவ முதிர்ச்சியில் விரக்தியுற்று ஓதுங்குவோரே ஏராளம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நலனின் உந்துதலுடன் செயற்படும் போலிகளின் கஜானாவைப் பெருக்கவும் – அரசியல் வியாபாரிகளின் வாக்கு வங்கியை ஊதிப் பெருக்க வைக்கவுமே தமிழுணர்வு தூண்டப்பட்டுவரக் காண்கிறோம்.
மீனவர்களின் பிரச்சினையில் தமிழக மீனவர்களை ஆதரிக்க முனைந்தால் இலங்கை வடபிரதேச மீனவர்களைப் பகைக்க நேரும். அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைளூ புலம்பெயர் ஈழப்பற்றாளர்கள் தவறாகக் கருதிவிட்டால்தான் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு கஜானாவும் வற்றிப்போக நேரும்.
இந்தத் தமிழுணர்வாளர்கள் மீனவர்களின் உயிர்ப்பான போராட்டங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல், போலியான தமிழ்ப் பாதுகாப்பு முழக்கங்களுக்காய் இளம் இரத்தங்களைச் சூடேற்ற முயல்வது இத்தகைய குறுகிய மனப்பாங்கில் ஆதாயம் தேடுவதற்கானது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அத்தகையவர்களின் போலித்தனங்களை விளங்கிக் கொண்டு தமக்கான விளம்பரத்துக்காக அவர்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேற்றுக் களிபேருவகை கொள்ளச்செய்யும் புலம்பெயர் கனவான்கள் – சீமாட்டிகளின் ஆசைகளும் மறைபொருள்கள் அல்ல. இத்தகையவர்களது பணப் பரிமாற்ற – புகழ்வெறி என்பவற்றுக்கு அப்பால் உயிர்ப்பான வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தத் தெற்காசியப் பிரச்சினை என்பதை சரியாகப் புரிந்து கொள்வதென்பது வேறொரு தளத்துக்கானது.
இலங்கைத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் சிங்களப் பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு சற்றும் குறைவற்றதாய்த் தமிழகத்தின் சூறையாடலுக்கான மேலாதிக்கம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளமையை வெளிப்படுத்துவதாக இந்த மீனவர் பிரச்சினை அமைந்துள்ளது. வாழ்க்கைப் போராட்ட நிதர்சனம் பட்டவர்த்தனமாய் உணர்த்தும் இந்த உண்மையைக் கனக்கப் படித்த யாழ்ப்பாண மூளை வீங்கிகள் விளங்கிக்கொள்ள முடியல்வதில்லை. வேறு தளங்களில் தமிழகம் எம்மை அபகரிப்பது பற்றிய உணர்வுகொள்ளாமலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
வேறெதையும்விட எமக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே எமது விடுதலையின் முதல் எதிரிகள்! எமது பொருளியல் வளத்தைச் சுரண்டுவதை விடவும், எம்மீது கருத்தியல் மேலாதிக்கம் செய்து எமது மண்ணில் நட்புறவு கொள்ளவேண்டிய சொந்தச் சகோதரர்களிடையே மோதலை வளர்ப்பவர்களாய்த் தமிழகத் தமிழுணர்வாளர்கள் உள்ளனர். அவர்களது பிரதான வேட்டைக்காடாக புலம்பெயர் தமிழர்களது வளங்களும், மனங்களும் இருக்கின்றனளூ தமிழகப் பெரு முதலாளிகளின் ஏனைய சூறையாடல் களங்கள் இங்கே ஒட்டுமொத்தமான இலங்கை மண்ணையும் அபகரிப்பதற்கான மன இசைவையும் அவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கே பேரினவாதச் சக்திகள் மிகுந்த சுயாதிபத்தியத்துடன் பல்வெறு நாடுகளோடு உறவாட இயலுவதாகத் தோற்றம் காட்டியபோதிலும், உண்மையில் இந்தியாவிடம் இலங்கை தனது சுயநிர்ணயத்தை இழந்து போயுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆக, சிங்கள மக்கள் ஏனைய சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க மறுத்து, இறுதியில் தம்மிடம் இருந்ததையும் கைநழுவ விட்டுள்ளனர்.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் வெற்றி கொள்ளப்பட்டதில் அதிக ஆதாயத்தைப் பெற்றவர்கள் தமிழகப் பெரு முதலாளிகளே. இங்கே தமிழக மீனவர்களின் மேலாதிக்கச் சூறையாடலைப் பேசுகிற எமது தமிழபிமான அரசியல் கனவான்கள் இத்தகைய தமிழக – இந்தியப் பெருமுதலாளிகளது மேலாதிக்கத்தையோ, சூறையாடலையோ பற்றிப் பேசுவதில்லை. உண்மையில் தமிழக மீனவர்கள் எமது மீனவர்களைப் பாதிக்கும் சூறையாடலைச் செய்தபோதிலும், கடின உழைப்புக்கான அர்ப்பணிப்பையும் உடையவர்கள். அவர்களது தவறை உணர்த்தும் அதேவேளை, அதை விடவும் கொடிய சுரண்டலாளர்களான தமிழக – இந்தியப் பெரு முதலாளிகளையும், அவர்களது கருத்தியல் அடிவருடிகளான தமிழுணர்வாளர்களது கபடத் தனங்களையம் கண்டிக்க முன்வர வேண்டும்.
தமிழக மீனவர்கள் இத்தகைய பெரு முதலாளிகளுக்கும், தமிழுணர்வுக் கபட வேடதாரிகளுக்கும் எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்காகப் போராடும் தமிழக முற்போது சக்திகள் மட்டுமே அவர்களுடன் தோள் சேர்ந்து எமக்குமான நியாயத் தீர்வுகள் குறித்த அக்கறையுடையவர்களாய் இயங்கி வருகின்றனர். அந்த முற்போக்கு சக்திகள் தமிழுணர்வைப் போலிக் கபடதாரிகளிடம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களும் அனந்தம்.
இலங்கையினுள் ஆளும் சிங்கள இனம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி மேலாதிக்கம் புரிகிறது. அந்த ஆளும் இனமும் இந்திய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறது. இந்த மேலாதிக்கம் செய்யும் சக்திகளுக்குள்ளும் ஒடுக்கப்படுவோர் உண்டு. தமிழகம் உழைக்கும் மீனவர்களை ஒடுக்கப்பட்டோராயே நடாத்துகிறது. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா முழுமையிலும் தலித் மக்கள் போராடுவதை நிறுத்த முடிவதில்லை.
இத்தகைய அனைத்துச் சமூக சக்திகளிடையேயும் சுரண்டுவோர் – உழைப்போர் என்கிற வர்க்க பேதங்களும் உள்ளன. முன்னர், இந்த உழைக்கும் மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும் (இன – மத – சாதி பேதங்களை) கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதனை அதிகமாய் வலியுறுத்தியுள்ளோம். அது சாத்தியப்படாத வண்ணம் மேலாதிக்க சக்தி – ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு எனும் பேதம் இன்று வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம்.
ஆயினும், இன்றுங்கூட இன, மத, சாதி பேதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதன் அவசியம் இன்னும் அதிக கவனிப்பைப் பெறும் வகையில் வலியுறுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை மேலாதிக்க சக்தி – சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படும் பிரிவினர் என்ற பேதம் நிதர்சனமாயுள்ள உண்மையையும் கவனங் கொள்வது அவசியமாகும். மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், தம்மவரால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுத்துத் தனக்கான ஐக்கியப்படும் சக்தியை அணிதிரட்டுவதன் வாயிலாக மட்டுமே தமக்கான விடுதலையை வென்றெடுக்க இயலும். அதேபொல ஒடுக்கப்படும் சமூகப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் தம்மைச் சுரண்டும் தமது சமூக பெருந்தனக்காரர்களோடு தவிர்க்கவியலாமல் ஐக்கியப்பட நேர்ந்தபோதிலும் இனவாத – மதவாத – சாதியவாத மனப்பாங்குக்கு ஆட்படாமல், அனைத்து உழைக்கும் மக்களோடு ஐக்கியமுறுவதற்கு முதன்மை கொடுப்பது அவசியம். இவை குறித்துப் பேசுவது இன்னொரு அரசியல் பரிமாணமாக விரியத்தக்கது.
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் – சுரண்டலையும் தகர்க்கப் போராடும் மார்க்கத்துக்கான கருத்தியலையும், கோட்பாடுகளையும், போராட்ட வழிமுறைகளையும் வழங்கும் மார்க்சியம் – லெனினியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற சிந்தனையை எம்மிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிந்தனைமுறை கால – தேச நிலவரங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிற ஒன்றாயிலும் உலகளவிலான மார்க்சிய அணியினரே போதிய சிரத்தையுடன் அதனை விருத்தியுறச் செய்வதற்குத் தவறியுள்ளனர்ளூ அவ்வாறு விருத்தியுறுத்த நெறிப்படுத்தும் முன்னுதாரணங்கள் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இருக்கவே செய்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கொதிநிலை நீடித்த ஐரோப்பிய மண்ணில் ஊற்றெடுத்த மார்க்சியம் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என முழக்கமிட்டபோது பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாகவே ஐரோப்பா முழுமையும் முதலில் சோஷலிஸத்தை வெற்றி கொண்டு, அதனால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கும் அதனை யதார்த்தமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தவகையிலான உலகப் புரட்சியின் சாத்தியம் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலேயே தகர்ந்து போயிருந்தது.
அப்போது ஏகாதிபத்தியக் கட்டத்துக்கு முதலாளித்துவமும் பரிணமித்திருந்ததுளூ இன்னமும் ஐரோப்பிய மண்ணில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கொந்தளிப்பு நீடித்திருந்தது. புரட்சியின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்து ருஷ்யாவில் தீவிரம் பெற்றிருந்தது. ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பல்வேறு வர்க்கங்களும் – ஜாரிஸ ருஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங்களும் ஐக்கியப்பட்டுப் போராடும் விருப்புடையனவாய் இருந்தன. இத்தகைய ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலகப் புரட்சியின் சாத்தியமின்மையை வலியுறுத்திய லெனின், சமனற்ற வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவம் பலவீனமுற்றிருக்கும் தனியொரு நாட்டில் சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலும் எனக் காட்டினார். தனியே பாட்டாளி வர்க்கம் என்றில்லாமல் விவசாயிகளோடான ஐக்கியத்திலான புரட்சியைக் கையேற்க வேண்டுமென அழுத்தினார்ளூ ஒடுக்கப்பட்ட தேசங்களை அந்தப் புரட்சியில் ஐக்கியப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும், ஏகாதிபத்தியக் கட்டத்தினதும் வளர்ச்சி நிலைக்குரிய மார்க்சியத்தின் விருத்தியான லெனினியம் ‘உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்’ என வளர்ச்சி பெற்ற சுலோகத்தை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோஷலிஸம் வென்றெடுக்கப்படுவது நடைமுறையில் நிகழவில்லை. முதலாளித்துவம் தனது தந்திரோபாயங்களில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பின்னடைவுகளுக்கு உள்ளானது. ஆயினும் புரட்சியின் மையம் இன்னும் கிழக்கு நோக்கி நகர்ந்து குடியேற்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை புதிய வடிவப் பரிமாணத்தைப் பெற்றிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி வர்க்கத்தைப் பிரதான சக்தியாக அணி திரட்டி பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது மா ஓசேதுங் சிந்தனை என்ற புதிய வடிவத்தை மார்க்சிய – லெனினியம் பெற்றிருந்தது. ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த சீனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை பலவீனத்தை ஏற்படுத்திவிடும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. மார்க்சிய – லெனினியம் வசனங்களில் முடங்கியதாயில்லாத விஞ்ஞானபூர்வ சிந்தனை முறை என்பதால், ஏகாதிபத்திய நாடாக இருந்த ருஷ்ய நிலைக்குரியதாக லெனின் வலியுறத்திய சுயநரிணய உரிமை இலக்கணத்தில் சீ.க.க. மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரிந்து செல்லும் உரிமை அற்ற சுயநிர்ணய உரிமையைச் சீ.க.க சோஷலிஸ சீனத்தில் வெற்றிகரமாய்ப் பிரயோகித்து உலகின் முதல்நிலை நாடாக இன்று சீனா வளர்ச்சிபெறும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையை வழிகாட்டு நெறியாக வரித்துக்கொண்ட தேசிய விடுதலபை; போரட்டமூடாகவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்துச் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினையையும் சுயநிர்ணயப் பிரயோகத்தையும் மேலும் வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலவரத்துக்கு அமைவாக மார்க்சியர்கள் விருத்தி செய்துள்ளனர்.
பிரதானமாய், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்ற பார்வையிலிருந்து விடுபட்டு அனைத்து வர்க்கங்களிடமும் தேசிய உணர்வு உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் தேசியம் சீன – சோவியத் பிளவில் வகித்த பாத்திரம் இன்றைய மீளவாசிப்பில் வெளிப்பட்டுவரக் காணலாம் கோட்பாட்டு விவாதத்தை இரு பாட்டாளி வர்க்க அரசியல் அணிகளும் தமக்கான தேசிய உணர்வு இல்லாதிருந்திருப்பின் சுமுகநிலையில் அணுகி, பாட்டாளி வர்க்க இயக்கம் இன்றைய பின்னடைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்திருக்கவியலும்.
எவ்வாறாயினும், எமது தேசியப் பிரச்சினையை எமது வரலாற்று செல்நெறியூடு மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையைப் பிரயோகித்துப் புதிய அணுகுமுறையில் கண்டறிய வழிப்படுத்துவதாய் இந்த வரலாற்று உண்மை அமைந்துள்ளமை தெளிவு. வர்க்கப் பிளவுறாமல் விவசாய வாய்ப்புப் பெற்ற இனமரபுக் குழு ஆளும் சாதியாக மாறி ஏனைய இனமரபுக் குழுக்களை ஒடுக்கப்படும் மற்றும் இடைச்சாதிகளாக மாற்றி சமூக வர்க்கங்களாய் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதாக எமது ஏற்றத்தாழ்வு சமூக வரலாறு அமைந்துள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் ஏகாதிபத்திய நாட்டினால் சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுவது போன்ற ஒடுக்கப்படும் சாதிகளும் சமூக வர்க்கங்களாய்ச் சுரண்டப்படுகின்றன.
அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் தலித் மக்கள் தமது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாயுள்ளனர். அதேவேளை, தலித் பிரிவினரான தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தின்மீது மேலாதிக்கம் புரிய அவாப்படுகின்றனர். அவர்களும் எம்மைப் போன்ற தமிழர்களே ஆயினும் அவர்கள் இந்திய தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்துக்குரியவர்கள். (அதனுள் மூன்றாவது தேசிய வடிவமாய் அவர்களுக்கான தலித் தேசியத்தையும் உடையவர்கள்.) எமது மீனவர்கள் தலித் தேசியமாய் யாழ் வெள்ளாளத் தேசிய மேலாதிக்கத்துக்கு அடங்கிப் போகாத சுயநிர்ணயத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணயத்தையும் வலியுறத்த வேண்டியவர்களாயுள்ளனர்.
எமது கடல்வளம் இந்திய மேலாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்படும்போது, தவிர்க்கவியலாமல் எமது தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்தின் பகுதி என்பதை ஏற்கும் நிர்ப்பந்தத்தையுடையவர்களாய் உள்ளோம். இந்தியத் தேசியம் – தமிழகத் தமிழ்த் தேசியம் – தலித் தேசியம் என்பவற்றை போராடட்ங்களினூடே அவர்கள் பேணும் அதேவேளை எம்மை இவ்வகையில் இயங்கவியலாவகையில் மிக மோசமாய்ப் பிளவுபடுத்தியுள்ளனர். இந்தச் சதிக்கு நாம் தொடர்ந்து பலியாக வேண்டுமா? இந்தியாவினுள் தலித் தேசியம் – இனத் தேசியம் என்பன பிரிவினை உணர்வின்றி ஒன்றுபட்ட இந்தியத் தேசியத்தினுள் தமது சுயநிர்ணய உரிமையை விரிவுபடுத்த ஏற்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளதைப் போல எம்மால் இயலாதா?
நாம் அவ்வகையில் இயங்காற்றல் கொள்ள இயலாத வகையில் தமிழக – இந்திய மேலாதிக்கவாதச் சக்திகளின் கருத்தியல் ஆக்கிரமிப்புப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே உலக மேலததிக்கவாதத்தின் ஐந்தாம் படையாக இருந்து புலம்பெயர் தமிழுணர்வாளர்களும் எமது விடுதலைக்கு கேடு செய்கிறவர்களாயுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் இனியும் இலங்கை அல்லது ஈழத்தமிழ்த் தேசியத்துக்குரியவர்களல்லளூ தத்தமது நாட்டு தேசியத்துக்கு உட்பட்ட தமிழ்த் தேசியத்தை வேண்டுமாயின் பெற்றுக் கொள்க – இந்திய தமிழ்த் தேசியம், இலங்கையின் ஈழத்தமிழ்த் தேசியம் என இங்கே வேறுபட்டு இருப்பதுபோல, இரத்தபந்தத்தால் எம்மீது உண்மைப் பற்று இருப்பின், நாம் எமக்கான விவாதங்கள் வாயிலாக வந்தடையும் தீர்வுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் உங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதேவேளை புலம்பெயர் இனவாதிகளைக் காரணமாயக் காட்டி எமது சுயநிர்ணய உரிமையைச் சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் நாம் பிரிவினையற்ற சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகிறோம் என அழுத்தியுரைப்போம். ஏனைய இனங்களோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்புகளுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதிகளுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது இந்தப் பிரிவினை அச்சத்தினாலேயே. கடந்தகால வரலாற்றில் புலிக்கொடி ஏந்திய சோழர்களின் படையெடுப்பினால் சிங்கள பண்பாட்டின் அநுராதபுர – பொலனறுவ நகரங்கள் அழிக்கப்பட்டமை பற்றிய அச்சம் அவர்களிடம் எப்போதும் மீள் வலியுறுத்தப்படுவதுண்டு. பிரிந்து செல்லும் ஈழம் தமக்கு மீள இயலாத அழிவு என அவர்கள் அச்சங் கொள்வதை நியாயமற்றதெனக் கூறவியலாது.
அந்தவகையில் எமது பிரத்தியேக இருப்பையும், வரலாற்றுக் கட்டத்தையும் கவனங் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்போம். பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் குறித்து அழுத்தி வலியுறுத்தி உழைக்கும் சிங்கள மக்களது போராட்டங்களுடன் இணைந்து செயற்பட்டு எமது தேசிய இனத் தீர்வுக்கு வழிசமைப்போம். அனைத்துச் சிறு தேசிய இனங்களது சுயநிர்ணய அமைப்பாக்கங்களைச் சரியான முறையில் வடிவமைப்போம்ளூ சிக்கலான இந்த விவகாரத்தில் ஈடுபடாமல் பொதுப்படப் பேசிக் காலங்கழிப்பது தொடர்ந்தும் எமது அடிமைத்தனத்தை நீடிக்கவே வழிகோலும். புதிய தலைமுறை அதனைத் தகர்த்து வரலாற்றைக் கையேற்று மக்கள் விடுதலையை வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம்.
‘உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்று சேருங்கள்’
கட்டுரை ஆசிரியரின் தத்துவார்த்தக் கருத்துக்கள் இனியொருவின் கருத்தல்ல…
இந்தியாவில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களை விடுங்கள் புலம் பெயர் மக்கள் மத்தியில் உள்ள சில வியாபார நோக்கம் கொண்டவர்களே இப்படி செய்கிறார்கள். புலிகள் சொத்தை அபகரிப்பதே இவர்களின் உள் நோக்கம். இலங்கை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புலம் பெயர்ந்தோரை எப்படி வென்றெடுப்பது என்பதை விட்டுவிட்டு அவர்களை விலகிச் செல்லுங்கள் என்று வீரபாண்டியக் கட்டபொமன் வசனம் பேசுவது எப்படி நியாயம்?
நீங்கள் அடிக்கடி துணைக்கு அழைக்கும் லெனின் கூட புலம் பெயர்நாட்டில் இருந்து தான் புரட்சிநடத்தினார்.
5ம் படை என்று புலம் பெயர் தமிழர்களை ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தும் உங்களுக்கு இதே பாணியில் புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியது போலக் கதைக்கிறீர்கள்.
இந்த யாழ்ப்பாணிகள் எப்போது தான் இலங்கக்கும் இலங்கை வாழ் தமிழர்க்கும்நன்மை செய்தனர், இவர்களின் போராட்டம் இப்ப்டைத்தான்நாறிப்போகும் என்று 87 ம் ஆண்டே அறிந்த விடயம் தானே, உரிமைக்காக ஆரம்பித்த போராட்டம் இன்று போர் குற்றச்சாட்டு என்று தடம் புர்ண்டு, போய் விட்டது, இன்னும் 10 வருடத்தில் எல்லாம் காலி
எல்லாமே முன் கூட்டியே தெரியுமா? உது தெரியாம இருந்திருக்குறாங் களே இந்த படிச்ச முட்டாப்பசஙல்லாம். உந்த காலநில மாற்றத்தப்பற்றியும் ஒருக்கா சொல்லேன்டா. அதோடநாழைக்கு ஐபிஎம். ஓட பங்கு விலை என்ன போகும் எண்டும் ஒருக்கா சொல்லும் பாப்பம்.
அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் —- கட்டுரையாளர் மிகவும் விரும்பும் மக்கள் சீனா தானே இலங்கையின் மிகப்பெரிய சுரன்ட்ல் மன்னன், 10 – 12 ச்த வட்டிக்கு அல்லவா கடன் கொடுக்கின்றனர்,நீங்கள் மார்க்சிச்ட் என்று உங்களை அடையாளம் காட்டுவதால் அதனை சொல்ல விருப்ப்ம் இல்லையோ, இன்று சீனா ஒரு படு முத்லாளித்துவநாடு
புலம் பெயர் இனவாதிகள் என்பது சரியான சொற்பிரயோகம். ஒற்றமை இனிமெலும் வராது போனால் என்னாகும் என்றும் சொல்லி இருக்கலாம் .நாஙகள் கூடன் குளம் பிரவேசிக்காமல் இருப்பது போல ,தமிழ்நாட்டு புலிகள் இருந்தால்நல்லது.
தமிழன் தமிழனை சுரண்டலாம், கொல்லலாம் , இழிவு படுத்தலாம்.இது தான் புலம் பெயர்ந்த தமிழ் தேசியம்.
புரட்சிகமான போராட்டம் என்பது பகைவனுள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல.நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது – மாவோ
ஆனால் புலத்து தமிழர் தங்கள் நஞ்சை பத்திரமாக வைத்துக் கொண்டு , மற்றவர்களின் நஞ்சை ஒழிக்கப்போராடுகிரார்கள். நல்ல வேடிக்கை.
யோகன்
மிகச் சரியாக சொன்னீர்கள் யோகன். புலம் பெயர் இனவாத தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அலப்பறை தாங்க முடிவதில்லை. பொழுது போக்குக்கு துணையாக இந்தியாவிலிருந்தும் கூப்பிட்டு குடித்து மகிழ்வார்கள். Fஅசெபோக் இல் லைக் பண்ண என்றே ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். இலங்கையிலும், புலிகள் இருக்கும் வரை தங்கள் கொள்கைகளையே தரை வார்த்த கம்னிஸ்டுகள் இன்று நேபாளத்தையும் , இந்தியாவையும் துணைக்கு இழுத்து புதிய சித்தார்த்தம் பேசுகின்றனர். இரவீந்திரனின் சில கருத்துகள் நியாயமாக பட்டாலும் ,அவரும் இந்த கூட்டத்தில் சேர்ந்த ஒரு மட்டை தான். சாதிமுறை, இனப்பிரச்சனி என்பது மற்றைய நாடுகளில் இருந்து எமது பிரச்சனி வேறுபட்டது என்பதிலிருந்து பார்க்கப்படவேண்டும்.
இந்தக் கருத்து பெரும்பாலும் சரியான கருத்தாகவே படுகிறது. இதனை என்ன பிரசுரித்தீர்கள்? பின்னர் என்ன எது எண்கள் கருத்து இல்லை என்று சொல்கிறீர்கள்? அரசியலில் நேர்மை வேண்டும் புலம் பெயர் இனவாத தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அலப்பறை தாங்க முடிவதில்லை. பொழுது போக்குக்கு துணையாக இந்தியாவிலிருந்தும் கூப்பிட்டு குடித்து மகிழ்வார்கள். Fஅசெபோக் இல் லைக் பண்ண என்றே ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். இலங்கையிலும், புலிகள் இருக்கும் வரை தங்கள் கொள்கைகளையே தரை வார்த்த கம்னிஸ்டுகள் இன்று நேபாளத்தையும் , இந்தியாவையும் துணைக்கு இழுத்து புதிய சித்தார்த்தம் பேசுகின்றனர். இரவீந்திரனின் சில கருத்துகள் நியாயமாக பட்டாலும் ,அவரும் இந்த கூட்டத்தில் சேர்ந்த ஒரு மட்டை தான். சாதிமுறை, இனப்பிரச்சனி என்பது மற்றைய நாடுகளில் இருந்து எமது பிரச்சனி வேறுபட்டது என்பதிலிருந்து பார்க்கப்படவேண்டும்.
நட்புடன் இரவீந்திரனுக்கு>
முக்கியமான விடயங்கள் குறித்து> அதாவது> புலம் பெயர் தமிழர்> இந்திய தமிழுணர்வாளர்கள் குறித்து விரிவான எந்த ஆய்வும் இல்லாத நிலையில் நீங்கள் “முடிந்த முடிவுகள்” சிலவற்றை கட்டுரையில் முன்வைத்திருக்கீறீர்கள்;. இது சரியான ஆய்வு முறையல்ல. இது தமிழ் மாக்சியர்களின் கடந்த கால தவறுளில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஆய்வுகளால் ஆன பயன் எதுவுமில்லை.
எல்லை தாண்டும் தமிழக மீனவர் – வடபகுதி மீனவர் பிரச்சினை குறித்து முழு உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களில் பலர் தமிழ் நாட்டு அரசியல் – முதலாளிகளின் மீன்பிடி வள்ளங்களில் வேலை செய்பவர்கள் என்றும்> உள் து}ண்டுதல்கள் இவ்விடயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏனைய இனங்களோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்புகளுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதிகளுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது. பற்றி எழுதியிருக்கீர்கள். இப்பண்பு தனியே சிங்கள மக்களுக்கு மட்டுமுரியதல்ல. தனிப்பட்ட சில சமூகங்களைத் தவிர உலகிலுள்ள எல்லா சமூகங்களிலும் காணப்படும் அம்சம்.
என்ன விலை கொடுத்தும் சமாதானத்தை ஏற்படுத்துவேன் – என்ற கோசத்திற்கு சிங்கள மக்கள் ஆதரித்தது உண்மைதான் ( இந்த ஆதரவிற்கு வேறு காரணங்கள் உண்டு). அதே வேளை தமிழ் மக்களும் வேறு காரணங்களற்று இதனை ஆதரித்து நின்றார்கள்.
ஆயினும்> “சிங்கள மக்கள்” ஒரு இனம் என்ற வகையில் தமிழர்கள் அனுபவித்த எந்த இன்னல்கள் குறித்தும் ஆக்பூர்;வமாக முடிவெடுக்கத் தலைப்படவில்லை என்பதனையும்> தமிழர் உரிமைகள் குறித்துப் பேசுகிற சிங்கள கட்சிகள்> சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவற்று போயிருப்பதனையும் தான் காண்கிறோம்.
புலித்தலைமையற்ற இன்றய நிலையில்> இனரீதியான நடவடிக்ககைள் குறித்து> “இலங்கைச் சமூகம்” கொண்டுள்ள நிலைப்பாடும்> அக்கறையும் அச்சம் தருவன.
தற்போது> மனித உரிமை குறித்த பிரச்சினையில் (ஜெனிவா) நாடு இனரீதியாக பிளவுண்டு கிடப்பதனை தெளிவாகவே காண்கிறோம். சில முற்போக்காளார்கள் தான் இனவாத நிலை கிடந்து செயற்படுகிறார்கள். அவர்கள் இலகுவாக இனவிரோதிகளாக ஆக்கப்படுகிறார்கள். மக்கள் அதனை ஏற்கிறார்கள்.!
நான் முடிந்த முடிவுகள் எதனையும் எடுக்க விரும்பவில்லை. ஆயினும் நிலைமைகள் நீங்கள் கருதுவது போல் “இன்று இல்லை” என்று சொல்ல முடிகிறது.
சிங்கள அரசியல் சமூகத்தில் சுயநிர்ணயம் என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான எந்தச் சாத்தியப்பாடுகளை நாம் அடையாளம் காணமுடியும் ?
தமிழர்களுக்கு என தனித்துவமான ஒரு அரசியல் உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழல் இருப்பதாக கருத முடியுமா ?
சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் இன உரிமைகளை முன்வைப்பதற்கான அரசியல் சூழல் தற்போது இருப்பதாக கருதுகிறீர்களா?
ஆழமான கற்றலும் – கலந்துரையாடல்களும் அவசியம்.
நட்புடன்
விஜய்
“பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை ” என்ற கட்டுரையை தமது இணைய இதழ்களில் வெளியிட்டு அதற்கான எதிர்வினைகளை நான் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து இணைய இதலாழர்களுக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்குமான பதிலை தனித்தனியாக தர இயலாமைக்கு மன்னிக்கவும்.. குறிப்புக்களாக பதில்களைத் தருகிறேன்.
ஒட்டுமொத்தமாக புலப்பெயர்வாளர்கள் தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டுவதாக கட்டுரை அமைக்கப் படவில்லை;மீறி அந்த தொனி ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.சில நண்பர்கள் எனது முகப்புப் புத்தகத்தில் ஏற்றுக் கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.மேற்படி இரு தரப்பிலும் மூன்று பிரிவினர் உண்டு.அடைந்தால் ஈழம், இல்லையேல் தமிழருக்கும் கெடுதியே வந்தாலும் இலங்கை முழுதையும் ஆக்கிரமிப்பாளர் வசம் ஆக்குவோம் என்கிற நாடு கடந்த ஈழவாதிகள்.சுய நிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் வென்றெடுக்க முன்முடிவுகளைக் கடந்து ஆழமான தேடல்களை மேற்கொள்பவர்கள் இரண்டாம் பிரிவினர்.இரண்டிலும் சேராமல் அவ்வப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு தரப்பை தற்காலிகமாக ஆதரிக்கும் நடுநிலைச் சக்தி மூன்றாம் தரப்பினர்.
முதல் தரப்பினர் இங்கு சுயநிர்ணயத்துக்காகப் போராடக் கூடிய சக்திகளுடன் இணைந்து செயலில் முன்னேற ஏற்ற நடவடிக்கைகளில் செயர்ப்படுகிறார்கள்.கட்டுரையை ஏற்று கருத்துக் கூறிய நண்பர்கள் அத்தரப்பினர்.அவர்கள் எல்லோரும் கட்டுரையுடன் பூரண உடன்பாடு கொண்டிருப்பார் என்பதற்கில்லை.பிரதான அம்சம் இவ்வகையில் தேடல் அவசியம் என்பதால் ஆதரவை வெளிப்படுத்தினர்.நானும் முடிந்த முடிவு எதனையும் சொல்லிவிடவில்லை.அனைவரது சுதந்திரமானதும் சமத்துவமானதுமான கருத்தாடல்களின் வாயிலாகவே எமது விடுதலைக்கான பாதையைக் கண்டறியப் போகிறோம்.
ஈழவாதிகள் ஆதிக்கச் சாதித் தேசியத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் இந்தியாவின் ஐந்தாம் படையாகவும் இருப்பர்;அமெரிக்காவின் ஐந்தாம்படையினராகவும் இருப்பர்.ஆர்குத்தியும் அரிசியாக்கி,ஆண்டபரம்பரையினரான தம்மிடம் ஈழத்தைத் தந்துவிட்டால் சரி என்று இருப்பர்.இலங்கையில் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்துசிறு பான்மையினருடன் தமிழருக்கான சயநிர்ணய உரிமையை வடிவப்படுத்துவது என்ற தேடலில் ஈடுபடும் தமிழ் தேசியர்கள் ஈழ வாதிகள் எனப் பொருள் கொள்ளப்படவில்லை என்பதையும் ,அவர்கள் மேலே குறித்த முதல் பிரிவினர் என்பதால் ஈழவாதத் தொப்பியைப் போட்டுப் பார்த்து இடர்ப்பட வேண்டாம் என்பதையும் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
தமிழக தமிழ்த் தேசியர்களிலும் இரு பிரிவினர் உண்டு.பௌசர்குறிப்பிட்டதைப் போல,இந்தியாவில் தமக்குப் பிரிவினை பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் பிரிய வாய்ப்பற்ற ஈழத்தை பிரிக்கிறோம் பேர்வழிகள் எனக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கிற சுரண்டலாளர்கள் ஒரு பிரிவினர்.மக்கள் விடுதலையின் பகுதியாக ஈழத்தமிழர் சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த முன் வருகிறவர்கள் அடுத்தபிரிவினர்.
தமிழகத்தின் ஈழப் பிரிவினர் இந்தியாவில் பிரிவினை பற்றி அக்கரைகொள்ளாமல் இருக்கக் காரணம் தமது சுரண்டல் நலனை முழு இந்தியாவிலும் கடைவிரித்திருப்பதுடன் இந்தியா மேலாதிக்க ஆக்கிரமிப்புக்குரிய வாய்ப்பை பிற நாடுகளுடன் ஏற்ப்படுத்தித்தருவதனையும் பயன்படுத்தி கொள்வதற்காகவே.எமது பிரச்சனையில் தீர்வுக்கான தேடலை இடையூறு செய்து வேண்டாத உணர்ச்சி முறுக்கேற்றல்களை அவர்களது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் நலனுக்காக முன்னெடுக்கிறார்கள் என்பதில் இரகசியம் எதுவுமில்லை.
தமிழக ஈழ ஆதரவாளர்கள் பட்டியலில் சீமான்,தங்கர்பச்சான் வகையறாக்கள் முன்னிலை வகிப்பதில் சினிமாக் கைத்தொழில் தமிழகத்தின் பிரதான அன்னியசெலாவனியாக இருக்கிறது என்பதுடன் தொடர்பானதே அன்றி தற்செயலானது அல்ல.இவர்களும் ஈழ வாதப் புலம் பெயர்வாளர்கள் ஜெனிவாவில் முன்னெடுக்கிற செயற்பபாடுகளும் சிங்கள மக்களை சிங்களப் பேரினவாதிகள் ஏமாற்றி அரவணைக்கவும் வாய்ப்பேர்ப்படுத்திக் கொடுத்துள்ளனர்.இரு தரப்பு இனவாதிகளும் தமிழ் சிங்கள மக்களை பிளவுபடுத்தியுள்ளனர்.அது அவர்களுக்கு ஆதாயமானது.மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகள் மக்கள் இவ்வகையில் பிளவுபடுத்தப்படுவதை எவ்வகையிலும் விரும்பமுடியாது.
இவ்வாறு சொல்வதனால் இன்றைய நிதர்சனத்தில் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள் என்ற உண்மையைக் காணத் தவறுகிறோம் என்று பொருள் இல்லை.இந்தநிளைமையை இரு தரப்பு இனவாதிகளே ஏற்ப்படுத்தியுள்ளனர் என்பதையே வற்புறுத்துகிறோம்..சிங்கள முற்போக்கு சக்திகள் பேரினவாத அரசுக்கு எதிராக விட்டுக்கொடுக்காத கருத்தியல் போராட்டத்தை நடாத்திய போது ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு இவர்கள் இடைஞ்சல் செய்கின்றனர் ,புலிகளுக்கு உதவுகின்றனர் என்ற பேரினவாத அரசின் சூழ்ச்சி பலிக்கும் யதார்த்தம் எவ்வகையில் ஏற்ப்படுத்தப் பட்டதென்பதை அறிய மாட்டோமா?
இந்த புற நிலைமையால் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் பாரதூரமான வரலாற்றுத்தவரைச் செய்கிறார்கள் என்பது உண்மையே.கடைசி நேர யுத்தத்தில் புத்தரின் தம்மபிடகத்தொடு தேச ஹீரோக்கள் தர்ம யுத்தம் செய்தனரே அன்றி பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது புலிகளாலேயே அன்றி பேரினவாத இராணுவத்தால் அல்ல என்று போலித்தனமான நம்பிக்கை கொள்ள சிங்கள மக்கள் விரும்புவது அபத்தமானது.இத்தகைய அபத்தம் சிங்கள மக்களுக்குக் குறையாத அளவில் தமிழ் மக்களிடமும் உண்டு.புலிகளின் பல தவறுகளை ஊக்கப்படுத்தும்வகையில் புலிகளை எப்போதும் நியாயப் படுத்தி வந்த மக்களின் பொறுப்பற்ற ஆதரவே புலிகள் தறிகெட்டு செயற்ப்பட்டு அழிவைத்தேட நேர்ந்தது.
இன்றைய மோசமான தவறுக்கு சிங்கள மக்கள் ஆட்பட்டுள்ளமையால் பிறரோடு இணக்கமாக வாழ்வதில் ஒருசில இனங்களில் ஒன்றாக சிங்கள இனம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.நிச்சயமாக யாழ்ப்பாணத் தலைமையிலான ஈழத்தேசிய சக்தி உன்னத இனத்தின் பக்கத்துக்குரியதல்ல.மட்டுமன்றி ஆக்கிரமிப்புக் குணாம்சம் என்ற பண்பில் இஸ்ற்றவேல் யூதர்களுடன் முதலிடத்துக்காகப் போட்டியிடுகிறவர்களாக நாம் இருக்கிறோம்.இந்தப் பண்புள்ள ஆதிக்க சாதித் தேசியத்திலிருந்து உழைக்கும் மக்களின் சார்பான தமிழ் தேசிய வெற்றிக்காக எப்படி முயல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
அதை விடவும் சிங்கள முற்போக்கு சக்திகளின் சவாலும் கடினமானதே.எண்பதாம் ஆண்டுகளில் இருந்தே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பக்கம் வருகிற முற்போக்காளர்கள் வேட்டையாடப்பட்டு வரப்பட்டுள்ளனர்.இன்றும் அதுவே நிலை.தவிர சிங்களவர் இலங்கையில் மட்டுமே வாழும் போது,இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களும் மத்தியகிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களும் பிறருக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாயே உள்ளனர் எனக்கூறி சிங்கள மக்கள் சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கிற நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.
வர்க்க ஒடுக்குமுறை ஊடாக மட்டுமன்றி சாதி ஏற்றத்தாழ்வு சார்ந்த சமூக ஒடுக்கு முறையூடாகவும் வரலாறு இயங்கி வருகிறது.இன்றைய முதலாளித்துவ அமைப்பில் சமூக ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையாக வடிவம் கொண்டுள்ளது.சின்ன மீன் ,பெரிய மீன் ,பென்னாம்பெரிய மீன் விழுங்குவது தேசிய ஒடுக்கலிலும் நடக்கிறது.சிங்களப் பேரினம் பெரிய மீன் என்றால் இந்தியா பென்னாம் பெரிய மீனாக சிங்கலத்தேசியத்தையும் ஆக்கிரமித்துள்ளது.இதற்கு மீனவர் பிரச்சனையை கட்டுரையில் உதாரனமாக்கியிருந்தேன் .கட்டுரையிலேயே மீனவர் எதிர் நோக்கும் சிக்கல் பற்றி எழுத்யுல்லேன்;அதுபற்றி தமிழ்த் தேசியர்கள் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற அதிர்ப்தியைத் தெரிவித்திருந்தேன்.
இலங்கையின் மீனவர்களை தலித்கள் என்று கூறமுடியுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.வேறுபட்ட சாதியினர் இங்கு மீனவர்கள்;அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாயிருந்து அதற்கு எதிராக போராடி வெற்றி ஈட்டியுள்ளனர்.இருபதாம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் முன்னோடி அமைப்பான மாணவர் சங்கம் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.அப்போரட்டப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்ந்த போது அணைத்து சாதி முட்போக்காளர்களது ஆதரவுடன் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் முன்நேரிவன்தனர்.நாற்பதுகளில் தோன்றிய கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளைச் சந்தித்த போதிலும் அனைத்துப் பிரிவினரும் தத்தமது கருத்தியல் நிலை நின்று ஒடுக்கப்பட்டவர்களின் சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்தனர்.அந்தவகையில் தலித்தியத் தேவை இங்கு இல்லை எனும் பொருளில் மீனவர்கள் இந்தியா அர்த்தப்படுத்தும் வகையில் தலித் அல்ல;அதேவேளை தாழ்த்தப்பட்டவர்கள் என்று மட்டுமன்றி ஒடுக்கப்பட்டவர்கள் என்ர்கூடச் சொல்லக்கூடாது ,தலித்துக்கள் என்பதே போர்க்குணம் மிக்கது என்பதால் அவ்வாரே அழைக்கவேண்டும் என்ற குரலையும் கவனம் கொள்வது அவசியம்.
இறுதியாக ,சீனா பற்றிய கேள்வி.சீனா எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவும் இல்லை,மேலாதிக்கம் புரியும் நடவடிக்கைகளில் இறங்கவும் இல்லை.இன்றைய நிலையில் அமெரிக்காவும்,இந்தியாவுமே எமது நாட்டையும் எமது தேசிய இனப் பிரச்சனையையும் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேட முனைகின்றன.சீனா அவ்வாறு செய்ய முனைந்தால் கண்டிப்போம்.
மேற்படி இணைப்பை இரவீந்திரனின் முகப்பு நூலில் பார்த்தேன். சரியாகவே சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறன். கருத்தாடல்கள் மூலம் மேலும் தெளிவு பெறமுடியும் என நினைக்கிறன்.
ஜெனீவா முடிவு குறித்து சிங்களப் பேரினவாதிகளுக்கு கடுமையான அடி கிடைத்ததாகவும்,இதன் எதிர் வினையாக ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியத்துக்கு ஏதேனும் தீர்வு கிட்டலாம் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டு வரக் காண்கிறோம்.இது முழுமையாகச் சரியென்றும் அல்லது பிழையென்றும் கூறவியலாத விடையம் .சிங்கள மக்கள் தம்மை பொருளாதார வங்குரோத்தில் மூழ்கடித்து இருட்டில் தள்ளிக்கொண்டிருக்கும் பேரினவாத அரசை இனம்காண இடம்தராமல் ஒடுக்குமுரையாளர்களுடன் இன்னும் வலிமையாக ஒன்றிப்போகச் செய்வதாக இந்த ஜெனீவா முடிவு ஆகிவிட உள்ள வாய்ப்பே அதிகம்.
இன்று இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்னெடுக்கப்படும் பிரதான நடைமுறை நீண்ட கால அடிப்படையிலானது.இதுவரை முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரத்தை பேரினவாதிகள் வெற்றிகரமாக மாற்றியுள்ளார்கள்.இதற்கு உதவிய முஸ்லிம் தேசியம் தனக்கும் பேரினவாதிகள் பாதகத்தை ஏற்ப்படுத்திவரக் காண்கிறார்கள்.ஆயினும் சிங்களப் பேரினவாதம் தமிழ் முஸ்லிம் பிரிவினையை பயன்படுத்தி தனது நிகழ்ச்சி திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.இதே நடைமுறையே இன்று வடக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.கிழக்கும் வடக்கும் தமிழர் தாயகம் என்ற கோட்பாடு இதன் ஊடாக தகர்க்கப்படுகிறது.
கிழக்கு ஆயுதம் ஏந்திய யுத்தகாலத்தைப் பயன்படுத்தி மாற்றப்பட்டதென்றால் வடக்கு இன்றைய நாடுகடந்த ஈழ வாதிகள் மற்றும் தமிழக ஈழ ஆதரவாளர்கள் முன்னெடுக்கும் அரசியல் யுத்த அபத்தங்கள் ஏற்ப்படுத்தித் தரும் இடைவெளியைப் பயன்படுத்த வாய்ப்பளித்துள்ளது.உடன் அவசியமாயுள்ள விடயம்,சிங்கள மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதும் அதற்கு ஏற்றதாக முஸ்லிம் மக்களுடன் வலுவான ஐக்கியத்தை எப்படி ஏற்ப்படுத்துவது என்பதும் தான்.தமிழ்,முஸ்லிம் புரிதல் ஏற்ப்படாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இரு தரப்பையும் வஞ்சித்தே வருகிறது;புரிதல் ஏற்படும் வாய்ப்பு உருவாகும்போதே சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து சிங்கள மக்கள் வேறுபடும் வகையில் அவர்களிடையேயான முரண்பாடு வழிப்பட ஏற்ற நடைமுறையே இன்று அவசியம் .
இதற்கு எதிர்த் திசையிலான போக்கையே ஜெனீவா முடிவு ஏற்ப்படுத்தும் .ஏற்க்கனவே தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்கள் நியாயமான சுயநிர்ணய உரிமைகளை அடையாளப் படுத்துவதைவிட தத்தமது தரப்பு இனவாதிகளுடன் இழுபடுகிரவர்களாக இருக்கிறார்கள் .இதுபோன்ற பிரச்சினை வேறு நாடுகளில் ஆளும் இனத்தில் அதிகம் பிழையும் மூன்றாவது தேசிய இனத்தில் மிகக் குறைந்த தவறுகள் இருப்பதாகவே நிலைமை காணப்படும் .இலங்கையில் மேற்ப்படி மூன்று இனங்களும் சம அளவு தவறுகளுடன் உள்ளன .இந்தக்கருத்தை ஒவ்வொரு இனத்தைச் சேந்தவர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள் ;மற்ற இரு இனம் தொடர்பில் இந்தக் கருத்து சரியாயினும் ,தமது இனம் தொடர்பில் தவறு என்று தாமதம் இல்லாமல் சொல்லிவிடுவார்கள் .ஆக ,இந்தப் பிளவு மேலும் வலுப்பட வாய்ப்பு ஏற்ப்படுத்தி விடுகிற வகையில் ஜெனீவா முடிவு நன்மையை விட தீமையையே அதிகம் கொண்டுள்ளது . .
முதலில் வட கிழக்கை இணைக்க முடிகிறதா என்று பாருங்கள்
வடக்கு, கிழக்கு இணப்பு சாத்தியமா
வடக்குஇ கிழக்கு இணைப்பினால் தமிழீழம் கிடைத்துவிடுமா? http://www.puthiyavidiyal.com/blog/206