இரவு முழுவதும் ட்ரோலர் படகு நட்சத்திரங்கள் தெறிக்கும் கடலின் அழகை கடந்து செல்கிறது. நாம் தமிழ் நாட்டுக்கரைகளை எதிர்பார்த்துக்கொண்டு பயணித்தோம். உறக்கமின்றி வானையும் கடலையும் பார்த்துக்கொண்டே மறு நாள் காலை மற்றோரு கரையை அடைந்தோம். நாமெல்லாம் தமிழ் நாடு என்று எண்ணினோம். ட்ரோலரிலிருந்து எம்மை இறங்கச் சொன்னார்கள். கரையை அடைந்ததும் தான் அது தமிழ் நாடு இல்லை என்று தெரிந்துகொண்டோம். இன்னொரு எல்லையை நாம் அடைந்திருந்தோம். நாம் அடைந்த இடம் இரணை தீவு.
அங்கிருந்துதான் இந்தியாவை நோக்கி விசைப்படகு ஒன்று பயணிக்கும் எனவும் அதில் தான் எம்மைக் கூட்டிச் செல்வார்கள் எனவும் அப்போது தான் அறிந்தோம். நாம் அங்கு தரயிறங்கிய போது எம்மைப் போல பலர் அங்கு இந்தியா செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
அங்கே அனைவரும் இந்தியா நோக்கிய படகுக்காகக் காத்திருக்கிறோம். அப்போது அங்கு ஏற்கனவே எமக்காகக் காத்திருந்த ஓட்டி ராஜன் மற்றும் மன்னார் ஞானி ஆகியோர் என்னிடம் வருகின்றனர். டெலோவின் முக்கிய உறுப்பினரான ஞானி என்னிடம் கேட்கின்றார் என்னால் கண்ணாடி இல்லாமல் சுட முடியுமா என்று. நான் உடனே சுதன் எனக்கு தந்த கடிதத்தை அவர்களிடம் காண்பிக்க முற்படுகிறேன். ஞானி கடித்ததைப் பார்க்கவில்லை. கடிதம் தரப்பட்டிருந்தால் போகலாம் ஆனால் இந்தியாவில் பயிற்சியெடுக்க அனுமதிப்பார்களோ தெரியாது என்றார். தீவிலிருந்து பதினைந்து பேர் வரையில் தான் இந்தியக் கரைகளுக்கு ஒவ்வொரு தடவையும் அழைத்துச் செல்லப்படுவதால் நாங்கள் அங்கு ஐந்துநாள் வரை வரையில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
ஐந்தாவது நாளில் எனது முறை வருகிறது. ஓட்டி ராஜன் தான் படகைச் செலுத்துகிறார். தமிழ் நாட்டுக் கரை நோக்கிய பயணம் ஆரம்பமாகிறது. படகில் என்னோடு பயணம் செய்த அனைவருமே முகமறியாதவர்கள். வழியில் இலங்கை நேவிப்படை எம்மைக் கண்டு துரத்துகிறது கடலில் வேகமாகச் செலுத்திச் செல்கிறோம். கடலின் இருள் கவ்விய நீர் வெளியில் இலங்கைக் கடற்படை அழிப்பட்தற்காத் துரத்திவர அதற்கு ஈடு கொடுக்காமல் ராஜன் படகைச் செலுத்துகிறார். நீண்ட இன்னல்களின் மத்தியில் நள்ளிரவு கடந்த வேளையில் தமிழ் நாட்டுக் கரையி அடைகிறோம். இலங்கைக் கடற்படை துரத்தியதில் குறிப்பிட்ட நேரத்திற்கு எம்மால் வந்தடைய முடியவில்லை. எமக்காக ராமேஸ்வரம் கடற்கரையில் யாரும் காத்திருக்கவில்லை.
கரையில் இறக்கபட்ட எம்மை, கடற்கரையிலிருந்து உள் நோக்கி நடந்து செல்லுமாறு ஓட்டி ராஜன் பணிக்கிறார். அங்கே தொலைவில் தெரிந்த மின் விளக்கு வெளிச்சத்தை நோக்கிச் செல்லுமாறும் அங்கே சிறீராம் லாட்ஜ் என்ற விடுதியை அடையுமாறும் கூறுகிறார்.
விடுதியைச் சென்றடைந்ததும் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொன்னால் அவர்கள் ஏனையவற்றைச் செய்து தருவார்கள் என்று எமக்குச் சொல்லிவிட்டு அவர் மறுபடி கடலுக்குள் திரும்பிவிட்டார்.
ஓட்டி ராஜன் என்னை அழைக்கிறார். கண்ணாடி, என்று விழித்த அவர், லாட்ஜ் வரை கூட்டிச் செல்வதற்கு நீதான் பொறுப்பு என்கிறார்.
எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. ஒரு தேசத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்களைப் பயிற்சிக்கு ஆட்சேர்க்கும் அமைப்பொன்றில் குறைந்தளவு ஒழுங்கமைப்புக்கூட இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
அன்னிய நாட்டின் எல்லையில் யாரையும் தெரியாமல், நள்ளிரவு கடந்த வேளையில் நாங்கள் பதினைந்து பேர்வரை தனியே விடப்பட்டிருந்தோம். அச்சமும் வியப்பும் மேலிட நாங்கள் அனாதரவாக நின்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தைத் தேடிப் போவது பாதுகாப்பானதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எம்மோடு வந்த அனைவரையும் கரையிலேயே இருக்குமாறு சொல்லிவிட்டு நான் காத்தான் என்ற ஒருவருடன் விளக்கை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறோம். அங்குதான் சிறீராம் லாட்ஜ் இருபதாகச் சொல்லப்பட்டது.
ராமேஸ்வரம் நகர்ப்பகுதியை அடைந்தவுடன் எமக்கு வியப்ப்பு மேலிடுகிறது. நாம் இருவரும் மிகுந்த சத்தத்துடன் இலங்கை வானொலியைக் கேட்கிறோம். எல்லாக் கடைகளிலுமே இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன.ஒரு கணம் இலங்கையின் இன்னொரு பகுதிக்கு வந்தடைந்து விட்டோமா என்ற அச்சம் மேலிடுகிறது. அங்கே நின்ற குதிரை வண்டில்களையும் இந்தியத் தமிழையும் கேட்டபோது தமிழ் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறோம் என உறுதிப்படுத்திக்கொண்டோம்.
ஒருவாறு சிறீராம் லாட்ஜைக் கண்டுவிட்டோம். அங்கே உள்ளேசென்று நாம் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொல்லவேண்டும். நாம் இருவரும் அது பாதுகாப்பானதா என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்துகொண்டு லாட்ஜின்முன்னால் அங்குமிங்கும் நடந்து நோட்டம் விடுகிறோம்.
அப்போது அங்கு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நீங்கள் யார் எனக் கேட்கிறார். நாங்கள் நடந்தவற்றைக் கூற அவர் தான் எமக்குக் காத்திருப்பதாகக் கூறுகிறார். அவருடன் நாங்கள் கடற்கரைக்கு வந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு லாட்ஜை நோக்கிச் செல்கிறோம். நாங்கள் கடல் நீரில் நன்றாக நனைந்திருந்தோம். லட்ஜிற்குள் சென்றதுமே எங்கள் அனைவரையும் பின்புறத்தில் சென்று குளிக்கச் சொன்னார்கள்.
நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.
எனக்கு இன்னொரு முறை தூக்கிவாரிப் போட்டது. நானோ அவர் இயக்கம் மாறி வந்துவிட்டார் என்று எண்ணி நீங்கள் எந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்ன அவர் நாகப்படையில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காவே தான் வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு விபரங்களைக் கூறுகிறேன். உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தின் தலைவர். நாங்கள் நாகப்படை இல்லை டெலோ என்று கூறப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்கிறேன்.
அதற்கு எந்த சலனமும் இன்றி, எந்த இயக்கமானால் என்ன பயிற்சிபெற்று இராணுவத்தை அடிப்பதுதானே நோக்கம் என்று பதில் சொல்கிறார்.
தொடரும்…
முன்னைய பதிவுகள்:
நான் வேறு இயக்கத்தில் இருந்தவன் உங்களுடைய ஆக்க்ம், கவிதை போல செல்கிறது. ஒவ்வொரு சம்பவமும் வசனமும் பழைய நினைவுகளை மீட்டிச் செல்கிறது. நெஞ்சைத் தொடும் நினைவுகள். இதையெல்லாம் மீண்டும் பார்ப்பதற்கு ஆண்டவன் எம்மை உயிருடன் வாழவைத்ததே பெரிய விசயம்.நன்றி கிளின்டன்.
Clinton,
Could you please tell me where ‘odi rajan’ lives now a days. i know that gnani lives somewhere in sri lanka.
Kajan, He was in LTTE after Suthan & Ramesh issue. I think he was killed in sea with Aruna & others on 28/04/1986. I spoke to him at Vetharniam (border) in Feburary 1986.
நாங்கள் புறப்பட்டவேளை கடல் மிகவும் அமைதியாக இருந்தது படகோட்டி மிகவும் உற்சாகமாக இருந்ததால் நாமும் இருந்தோம் படகு வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் இருந்து வேதாரணியம் என்ற இடம் நோக்கி புறப்பட்டது. எமது துரதிஸ்டம் நடுவழியில் ஒரு மீனவ படகுடன் மோதி படகினுள் கடல்நீா் வரத்தொடங்கியதால் பயணம் தடைப்பட்டு திரும்பினோம்.
அதன் பின்பு சாத்திர சம்பிரதாயங்களின்பால் பயணம் சில நாட்கள் தடைப்பட்டு பின்பு மிகவும் மோசமான காலநிலையில் தொடங்கினோம்,பெரும் காற்றும் மழையும் ஒயாமல் அடித்தது,நடுக்கடலில் படகோட்டிக்கு திசையை அறிந்து கொள்வது கடினமாகியதால் படகை நிறுத்தவேண்டி வந்தது ஆனால் அது மிகவும் ஆபத்தானதாக தென்பட்டதால் பயணத்தை எந்தத்திசை என்றில்லாமல் தொடரவேண்டிய நிலை இறுதியில் ஒருவாறு வேதாரணியம் மின்விளக்கை பார்க்கமுடிகிறது என்று படகோட்டி கூறியபோதே எமக்கு நம்பிக்கை வந்தது.
படகில் காலணிகளை எடுத்துச்செல்ல படகின் உரிமையாளா்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் நாங்கள் எமது காலணிகளை ஒரு பையில் வைத்து மறைத்து எடுத்து சென்றோம் ஆனால் அவைகளில் அரைவாசிக்குமேல் படகேறும் வேளை தவறவிட்டுவிட்டோம்,நாங்கள் வேதாரணியத்தில் இறங்கியவேளை எம்மை வளிகாட்ட வந்தவருக்கு முதல் தடவையென்றதால் அவருக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை மிகவும் இருட்டில் நடக்கத்தொடங்கினால் பயங்கர முட்கள் காலை பதம்பார்க்கத்தொடங்கின இதில் ஏறக்குறய 13 பேரும் ஒரு காலணியே அணிந்திருந்தோம் அல்லது தவறான சோடிகள். ஒருவாறு பலமைல்கள் நடந்து விடிந்தவேளை தனியே ஒரு காலணியுடன் வந்தவா்கள் அவைகளை உதறிவிட்டோம் ஆனால் இரண்டு காலணிகளுடன் வந்தவா்களும் உதறவேண்டிய நிலை காரணம் வேறுவேறு நிறங்கள் காற்சட்டைகளை அணியமுடியாமல் அல்லது முடிந்தவா்கள் அதன் மேல் சாரங்களை அணிந்து காலணிகளே இல்லாது சென்னைவரை சென்றோம்.
இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கிவிடுகின்றன.
மாதகலில் தோழர்களோடு பயணம் செய்யக் காத்திருந்தோம். தோழர் சின்னவனும் எங்களோடு பயணம் செய்வதற்கு வருவதாக சொன்னதால் மிக உச்சாகம். பெண்தோழர்கள் நாங்கள் ஐந்துப்பேரும் 6 ஆண் தோழர்களும் வீட்டுக்கு வெளியில் மணலில் இருந்து கதைதுக்கொண்டிருந்தோம். அப்போதான் வீட்டுக்கு வெளியில் வான் வந்து நின்றது. 10 மணியிருக்கும். படகில் ஏறுவதற்கு ஆண் தோழர்கள் உதவி செய்வதைக் கூடநான் விரும்பவிலை. அவ்வளவு ஓர்மம். ……… என் குடும்பத்தோடு கூட பகிர்ந்துகொள்ள பயமாகும் நிகழ்ச்சிகள். கிளின்டனுக்கு மனமார்ந்த நன்றி.
ஓட்டி ராஜன் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் இருந்து பொருட்களை கடத்தி வந்தார் அவர் போராளியாக புலிகளில் செயல் படவில்லை என நினைக்கிறேன், அவர் மறையும் போது புலி உறுப்பினர் அல்ல. அவர் 1991 அல்லது 1992 இல் பொலிகண்டி கடலில் வைத்து உலங்கு வானூர்தி தாக்குதலில் கொல்லப்பட்டார் என நினைக்கிறேன்.
ஓட்டி ராசனா இப்பா தமிழ் மக்களின் பிரச்சனை?நீங்களும் உங்கடை வரலாறும் பொழிப்பும்!
உண்மை மடையன் நீங்கள் மாத்திரம் அல்ல முழு தமிழர்களும் தான்.
He is writing about his experiences and the others are trying to recollect their own memories related to what he writes. No one said this is about people who think of Tamil issues 24/7. If you folks are the ones who do that good for you. By ridiculing others who do not write about what you want to hear you are only making fools of yourself here. There are other places you can read about what you like to read. If you don’t have nothing better to do please don’t do it here.
That is right.
Thanks Sinrasu.