இலங்கையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏழைச் சிங்கள இளைஞர்கள் மனோநோயாளர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் மாறியுள்ளனர். இலங்கை அரசிடம் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் குறித்து என்ன செய்வது என்பதற்கான குறைந்தபட்ச திட்டங்கள் கூட இல்லை. தொலைக் கிராமங்களில் பலர் வறுமையினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். கணக்கிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 21 வீதமானவர்கள் ஓய்வூதியம் பெறும் வயதை எட்டியுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு இலங்கை அரசிடம் பணம் இல்லை.
இராணுவப் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்களப் பகுதிகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது போன்று தோற்றமளித்தது. அழிந்து குட்டிச்சுவராகும் இலங்கையில் மக்கள் எழுச்சிகள் உருவாகாமல் பாதுகாக்க சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தனது அழிவு அரசியலை இன்னும் அதிக வேகத்துடன் ஆரம்பித்துள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளை களத்தில் இறக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தை தீயூட்டி எரிப்பதற்காக பிரான்ஸ் விகாரையின் பௌத்த பிக்கு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் பிறப்பது குறைந்துள்ளதன் காரணமாக எதிர்காலத்தில் குறைந்தது 5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும என பிரான்ஸ் நாட்டுக்கான பிரதான சங்க நாயக்கர் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அடுத்த வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சிங்கள குடும்பங்கள் குழந்தைகளை பெற்றெடுப்பது குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் எனவும் இந்த பாதிப்பு பௌத்த மதத்திற்கும் கெடுத்தியை உண்டுபண்ணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாது போனால், துறவறம் பூணவும் பிள்ளைகள் இல்லாமல் போகும் எனவும் இதனால், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள பௌத்தர்களுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது சிங்கள இனத்தின் பாரிய அழிவுக்கு வழிகோலும் என்பதால், தான் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.








Sri Lanka Army has also come a long way. There are Civil Affairs Officers at all Army installations. North is different from the East where the Police is more dominants. Officers are all very professional. That is my experience since coming back home in November 1997.